கோவிலுக்கு சென்று வரும் பொழுது தெரியாமல் கூட இந்த ஒரு தவறை செய்து விடக் கூடாதாம்! கோவிலுக்கு போன பலன் இல்லாமல் போய்விடுமாம் தெரியுமா?

- Advertisement -

நாம் கோவிலுக்கு செல்வது மன அமைதியைத் தேடி மற்றும் நம் குறைகளை இறைவனிடம் சரணடைந்து ஒப்படைத்து விடுவதற்காக செல்கிறோம். கோவிலுக்கு சென்றால் மன அமைதி கிட்டும் என்கிற நம்பிக்கையும், நாம் வேண்டிய வேண்டுதல் எப்படியாவது நிறைவேறும் என்கிற ஆசையுடனும் போகின்றோம். அப்படி கோவிலுக்கு போகும் பொழுது இந்த ஒரு தவறை செய்து விட்டு வரக் கூடாது என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. அப்படியான அந்த விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது தான் தானம் கொடுக்க வேண்டும். உள்ளே போகும் பொழுது தானம் அளிக்க கூடாது. கொடி மரத்தை தொட்டு வணங்கிய பின்பே, நாம் மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும். இப்படி சாஸ்திர ரீதியாக ஒரு கோவிலுக்கு செல்லும் பொழுது எப்படி முறையாக செல்ல வேண்டும்? எதை முதலில் வணங்க வேண்டும்? என்கிற வரைமுறை உண்டு. இதை நாம் பின்பற்றி வழிபடும் பொழுது நமக்கு வேண்டிய வேண்டுதல் தடையில்லாமல் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதே போல கோவிலுக்கு செல்லும் பொழுது மனம் ஒருமுகப்பட்டு இறைவனை முழுமையாக வழிபட வேண்டும். கண்ட இடங்களில் நின்று கொண்டு அரட்டை அடிப்பது, வேறு ஏதோ ஒரு சிந்தனையுடன் இருப்பது போன்றவற்றை செய்தால் நாம் கோவிலுக்கு சென்றதற்கான பலன் கிடைக்காமல் போய்விடும். அதே போல கோவில் மணி ஓசையை இறைவனை வணங்கும் போது மட்டும் தான் அடிக்க வேண்டும். கோவில் மணியை அடிக்கும் பொழுது இறைவனை தரிசிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி வணங்கும் பொழுதும் கோவில் மணியை அடிக்க வேண்டும்.

கோவில் மணியை எக்காரணம் கொண்டும் நீங்கள் வெளியில் வரும் பொழுது அடிக்கக் கூடாது என்கிறது சாஸ்திரங்கள். கோவில் மணியை வெளியில் வரும் பொழுது நீங்கள் அடித்தால் கோவிலுக்கு போன பலனை இழந்து விடுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இது தெரியாமல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருமே இந்த தவறை கண்டிப்பாக செய்திருப்போம். கோவிலுக்குச் சென்றதும் அங்குள்ள மணியை அடித்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.

- Advertisement -

எனவே சாமி கும்பிட்டு விட்டு வரும் பொழுது மணியை அடிப்பது, அசைத்து பார்ப்பது என்பது போன்ற விஷயங்களை தெரியாமல் செய்திருப்போம். கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தாத்பரியம் உண்டு. அதை முறையாக கையாளும் பொழுது நமக்கு நிறையவே நற்பலன்கள் வந்து சேரும். கோவிலுக்கு வெளியில் வரும் பொழுது யாசிப்பவர்களுக்கு நீங்கள் தாராளமாக தானம் வழங்கலாம்.

அதிலும் நீங்கள் வயதானவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதால் நிறையவே புண்ணியங்கள் வந்து சேரும். கோவிலில் இருக்கும் பொழுது ஒரு விதமான நல்ல அதிர்வலைகள் உண்டாவதை நீங்கள் உளமாற உணர வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் வேண்டிய வேண்டுதல் இறைவனை சென்றடைந்து இருக்கிறது என்பது அர்த்தமாகும். இப்படி கோவிலை சுற்றிலும் நிறையவே அற்புதங்கள் நிறைந்துள்ளன, எனவே அடிக்கடி கோவிலுக்கு சென்று நீங்களும் பலன் பெறுங்கள்.

- Advertisement -