இந்த இடத்தில் தலை வைத்து தூங்கினால், ஒரே இரவில் உங்களுடைய தீர்க்க முடியாத கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும், பாவங்களும் காணாமல் போகும்.

sleep2
- Advertisement -

செய்த பாவத்திற்கு எல்லாம் மன்னிப்பு கிடைத்து, நிம்மதியான வாழ்க்கை கிடைக்காத என்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இருப்பினும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை அந்த ஆண்டவன் நமக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான். அதை எல்லாம் சமாளித்து வாழ்வதில் தான் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்கின்றது. ஆகவே கஷ்டத்தை கண்டு, துன்பங்களை கண்டு யாரும் பயப்படாதீங்க. அதை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தி செல்வது எப்படி என்பதை மட்டும் யோசிக்க வேண்டும். அந்த வகையில் தீராத துன்பங்கள் தீருவதற்கு ஒரு சின்ன ஆன்மீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

அடுத்தவர்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம் இருக்கிறது. கஷ்டத்தை சரி செய்ய முடியவில்லை. நிம்மதியான தூக்கம் கூட இரவு வரவில்லை வீட்டில் ஒரு நல்லதும் நடக்கவில்லை. மனதில் நிம்மதி இல்லை என்ன செய்வது. ஒரு நாள் இரவு மட்டும் நீங்கள் ஏதாவது ஒரு கோவிலில் போய் இரவு தங்கி, தூங்கி விட்டு வர வேண்டும். ஏதாவது ஒரு நாள் என்று சொல்லுவதை விட, அமாவாசை நாள் அன்று இரவு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது கோயிலுக்கு சென்று தங்கலாம். எல்லா கோவிலிலும் நம்மால் தங்கிவிட முடியும் என்று சொல்ல முடியாது. சில கோவில்களில் தான் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும். அப்படிப்பட்ட கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்து நீங்கள் போய் தங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கோவில் பிரகாரத்தில் மண்டபங்கள் இருக்கும் அந்த இடத்தில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும். அந்த இடத்தில் சுத்தமான விரிப்பை விரித்து, அந்த கோவில் தரையில் நீங்கள் படுக்க வேண்டும். தலையணை எல்லாம் எடுத்துப் போகக்கூடாது. அதே சமயம் கோவிலுக்கு அருகில் ரூம் எடுத்து தங்குவாங்க. அந்த மாதிரியும் செய்யக்கூடாது. கோவில் பிரகாரத்தில் கொஞ்சம் சௌகரியம் குறைவாக இருந்தாலும் அனுசரித்து ஒரு இரவு தங்கி விட்டு வந்தால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.

ஒரு நாள் இரவு மட்டும் அந்த இடத்தில் நீங்கள் போய் தூங்கி விட்டு வந்த பிறகு உங்களுக்கே ஒரு நிறைவு ஏற்படும். மன நிம்மதி ஏற்படும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என்ற நேர்மறை ஆற்றல் உங்களுக்குள் வந்துவிடும். ஒரே ஒரு முறை தீராத துன்பத்தில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தோடு சென்று கூட தங்கி விட்டு வரலாம் தவறு கிடையாது.

- Advertisement -

இப்படி கோவிலுக்கு சென்று இரவு தங்கி விட்டு மறுநாள் காலை எழுந்து அங்கேயே சுத்தபத்தமாக குளித்துவிட்டு அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும். வீட்டுக்கு திரும்பும் போது உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள். ஒரு இரண்டு பேருக்காகவது சாப்பாட்டுக்காக கஷ்டப்படுவார்ளுக்கு காலை உணவு வாங்கி கொடுக்கலாம். எந்த உணவாக இருந்தாலும் வாங்கி கொடுக்கலாம்.

அதன் பின்பு வீடு திரும்பி தினசரி உங்களுடைய வேலையை தொடங்குங்கள். ஒவ்வொரு மாதம் அமாவாசை தினமும் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. ஒரே ஒரு மாதம் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. (அமாவாசை நாள் வரை காத்திருக்க முடியாது. வேறு நாட்களில் போய் கோவிலில் இரவு தங்கலாமா, என்று கேட்டால் நிச்சயம் எந்த நாளில் போய் கோவிலில் தங்கினாலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.) செலவில்லாத சுலபமான பரிகாரமாக இருந்தாலும் இந்த பரிகாரம் மிக மிக சக்தி வாய்ந்த எளிய பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கே வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -