கர்மா கழிந்து போக, மறு பிறவியே இல்லாத வரம் கிடைக்க வேண்டுமா? கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி கொடுங்கள் போதும்.

god
- Advertisement -

பட்டதெல்லாம் போதும். செய்த பாவங்களை இந்த பிறவியிலேயே கழித்துவிட்டு முக்தி நிலை அடைந்தால் போதும் என்ற நிலைமை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. செய்த பாவத்தை தீர்த்துக் கொள்ள எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம். கூடவே சேர்த்து வாழ்வில் வளம் பெற, கர்மாக்கள் தீர, மீண்டும் இந்த பிறவி எடுத்து கஷ்டங்கள் வராமல் இருக்க இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து விடுவோம். பெரிய கஷ்டம் ஒன்றும் கிடையாது. கோவிலுக்கு இந்த பொருட்களை தானமாக வாங்கிக் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான்.

நிறைய அம்மன் கோவில்களில் சுவாமிக்கு நேர் எதிராக ஒரு பெரிய கண்ணாடி மாட்டி வைத்திருப்பார்கள். சுவாமியின் முகம் வெளியே இருக்கும் அந்த கண்ணாடியில் நேராக பிரதிபலிக்கும். சில சமயம் பக்தர்கள் கூட்டத்தில் சுவாமியை நேரடியாக தரிசனம் செய்ய முடியாத சமயத்தில் இந்த கண்ணாடியில் கடவுளை பார்த்து தரிசனம் செய்வார்கள். எத்தனை புண்ணியம் அந்த கண்ணாடிக்கு. இறைவன் நேரடியாக அந்த கண்ணாடியில் தெரிகின்றார். அது மட்டுமல்லாமல் இறைவனை காண முடியாத பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு உதவியாக இருக்கக் கூடிய கண்ணாடி இது. (இறைவனை இந்தக் கண்ணாடியின் மூலம் தரிசிக்கும் அத்தனை பக்தர்களின் மன நிறைவும் ஆசீர்வாதமும் நம்மை வந்து சேரும்.)

- Advertisement -

நிறைய சின்ன சின்ன கோவில்களில் பார்த்தால் இந்த கண்ணாடி மிகவும் பழுதடைந்து போயிருக்கும். அதாவது அந்த இறைவனின் உருவம் தெளிவாக கண்ணாடியில் தெரியாது. அப்படிப்பட்ட கோவிலாக பார்த்து பழைய கண்ணாடிக்கு பதில் அழகாக இறைவனின் உருவம் தெரியக்கூடிய பிரகாசமான ஒரு கண்ணாடியை வாங்கி நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் குருக்களிடம் போய் கேட்டாலே அதற்கு உண்டான அனுமதி உங்களுக்கு கிடைத்துவிடும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். (அம்மன் கோவிலுக்கு என்று மட்டும் கிடையாது. மற்ற கோவில்களுக்கு கூட இந்த கண்ணாடியை வாங்கி தானமாக கொடுக்கலாம்.) நிச்சயம் உங்கள் கர்மாக்கள் குறைந்து நீங்கள் செய்த பாவங்களுக்கான தண்டனைகள் மன்னிக்கப்பட்டு முக்தி நிலை அடைவதற்கு இந்த பரிகாரம் சிறு உதவியாக இருக்கும்.

முக்தி நிலை என்றால் என்ன. சில பேருக்கு சந்தேகம் இருக்கும். மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இறைவனின் பாதங்களை அடைவதே இந்த முக்தி நிலை ஆகும். மேலே சொன்ன பரிகாரத்துடன் சேர்த்து கோவிலை சுத்தம் செய்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்து வர வேண்டும். கோவிலை சுத்தம் செய்ய துடைப்பம் வாங்கி கொடுக்கலாம். அங்கு உள்ள பூஜை ஜாமான்களை சுத்தம் செய்வதற்கு தேவையான பாத்திரம் தேய்க்கும் லிக்விட், நார், போன்ற பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

கோவிலில் மிக உயரமான இடங்களை சுத்தம் செய்ய முடியாமல் அப்படியே விட்டு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இடங்களில் ஒட்டடை குச்சி கூட வாங்கி தானமாக கொடுக்கலாம். முடிந்தால் ஒரு நேரத்தை ஒதுக்கி அந்த கோவிலை சுத்தம் செய்யும் வேலையை நீங்களே செய்யலாம். தவறு கிடையாது. கோயிலை சுத்தம் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அது மொத்தத்தையும் ஒருத்தரே தானம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

உங்களால் முடிந்த ஒரு துடைப்பம் வாங்கி கொடுத்தாலும் அது சரிதான். நிறைய எண்ணெய் கோவிலில் கீழே சிந்தியிருக்கும். அந்த எண்ணெயை துடைப்பதற்கு நல்ல ஒரு காட்டன் துணியை வாங்கி கொடுப்பது கூட சிறந்த தானம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் உங்களால் முடிந்த தானத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -