அர்ஜுனனின் ஆணவத்தை அடக்கிய கண்ணன் – மகாபாரதத்தில் அரங்கேறிய சம்பவம்

mahabharatham

பாரத போர் முடிந்தவுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரில் இருந்தபடியே அர்ஜுனனை மட்டும் தேரை விட்டு இருங்க சொன்னார். அர்ஜுனனோ ஒன்றும் புரியாதவனாய் திகைத்து நின்றான்.

சம்பிரதாய படி போரில் வெற்றி பெற்றவரை தேரோட்டி தான் கையை பிடித்து தேரில் இருந்து இறக்கி விட வேண்டும். இதையே அர்ஜுனனும் கண்ணனிடம் எதிர்பார்த்தான். ஆனால் இங்கோ நடப்பது வேறு.

தேரில் இருந்து இறங்குவதற்கு முன்பு கண்ணனிடம் தன் மனதில் உள்ள உறுத்தலை கேட்டுவிட வேண்டும் என்ற முடிவில், “மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால் சம்பிரதாயப்படி நீதானே என்னை இறக்கி விடம் வேண்டும் அது தானே எனக்கு பெருமை அனால் நீயோ என்னை கீழே இறங்க சொல்லி ஆணையிடுகிறாய் இது என்ன நியாயம்? ” என்று தன் மனதில் உள்ளதை அர்ஜுனை கேட்டுவிட்டான்.

அர்ஜுனனின் வார்த்தைகளை பொறுப்படுத்தாத கண்ணன், மிரட்டும் தோனியில், அர்ஜுனா தேரை விட்டு உடனே கீழ் இறங்கு என்றார். அர்ஜுனனும் கீழே இறங்கிவிட்டான் அதன் பிறகு தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!” என்றார் அதட்டலுடன்!.

- Advertisement -

கிருஷ்ணரின் இத்தகைய அதட்டலை அர்ஜுனனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. போரில் வெற்றி பெற்ற சந்தோஷம் எல்லாம் அவனை விட்டு பறந்தோடியது. வாடிய முகத்துடன் தேரை விட்ட வெகு தூரன் சென்று தள்ளி நின்றான் அர்ஜுனன். இதை கண்ட கிருஷ்ணர் புன்னகைத்தபடியே தேரில் இருந்து குதித்து சென்று அர்ஜுனனை கட்டி பிடித்துக்கொண்டார்.

கண்ணன் தேரில் இருந்து குதித்த அடுத்த கணமே, தேர் பயங்கரமாக தீ பற்றி எரிய ஆரமித்தது. பார்த்தாயா அர்ஜுனா, தேர் எப்படி பற்றி எரிகிறது. அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக தேர் இப்படி எரிகிறது என்று அவன் கண்ணனிடம் கேட்டான்.

“அர்ஜூனா! போர் புரியும்போது உன்னை கொள்வதற்காக கவுரவர்கள் பல அஸ்திரங்களை உன் மீது ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவு நேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். நான் தேரில் இருந்து குதித்ததும் தேர்க்கொடியில் இருந்த அனுமன் புறப்பட்டுவிட்டான்.
அதனால் அஸ்திரங்களின் சக்தி தலைதூக்க ஆரபித்து தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உண்மை இப்படி இருக்க நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னை நான் கௌரவப்படுத்தவில்லை என்று வருந்துகிறாய் என்றார் கிருஷ்ணர்.

மேலும் போரில் வெற்றி பெற்றதும் உனக்கு “நான் எனும் ஆவனம்” தலைக்கேறிவிட்டது. ஆணவம் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதை மறவாதே அர்ஜுனா என்றார் கிருஷ்ணர். அந்த கணம் தன்னுடைய ஆணவத்தை நினைத்து அர்ஜுனன் வருந்த, தேரோடு சேர்ந்து அவன் ஆணவமும் எரிந்து சாம்பலானது.