இந்தக் கதையை நீங்கள் படித்த பின்பு, பணத்தை பதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமே, உங்களுக்கு நிச்சயம் ஒரு துளி அளவும் வராது.

krishna1

நம்முடைய வாழ்க்கையில் நம் கைக்கு வந்து சேரும் பணம், நமக்கு மட்டுமே சொந்தம், சுயநலமாக அதை நாம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைப்பவர்கள் ஆக இருந்தால், இந்த கதையை ஒரு முறை படித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் கைக்கு வரும் பணத்தை யாருக்கும் தெரியாமல், ஒளித்து, பதுக்கி வைக்கவே மாட்டீர்கள். அப்படி இந்த கதையில் என்னதான் அர்த்தம் மறைந்துள்ளது? வாங்க படிச்சி தெரிஞ்சுக்கலாம். அர்ஜுனரும், கிருஷ்ணரும் ஒருமுறை வீதியில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த முதியவர் ஒருவர் அர்ஜுனரை பார்த்து, தன்னுடைய கஷ்டத்தை கூறி தர்மம் கேட்டார். அர்ஜுனனும் அந்த முதியவருக்கு பொற்காசுகளை அள்ளி கொடுத்து விட்டார். அந்த பொற்காசுகளை வைத்து அந்த முதியவர், வாழ்நாள் முழுவதும், பசி இல்லாமல், சாப்பாட்டிற்கு பஞ்சம் வராமல் சுகபோகமாக வாழலாம் என்று எண்ணி புறப்பட்டார்!

krishna

இதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், முதியோரை பின்தொடர்ந்து முதியவர் கையிலிருந்து பணத்தை பறித்துச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து, மீண்டும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அந்த வீதியில் நடந்து செல்லும்போது, நடந்ததை சொல்லி, மீண்டும் தர்மம் கேட்டார் அந்த முதியவர். சரி, மீண்டும் அர்ஜுனர் கொஞ்சம் விலை மதிக்க முடியாத ரத்தின கற்களை, அந்த முதியவருக்கு தானமாக கொடுத்தார். இதையாவது பத்திரமாக வைத்துக்கொள் என்று உபதேசமும் அந்த முதியவருக்கு கிடைத்தது.

முதியவர், இதையாவது பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டுக்கு எடுத்துச்சென்று, ஒரு பானையில் போட்டு ஒளித்து வைத்து விட்டார். இது அந்த முதியவரின் மனைவிக்கும் தெரியாது. தண்ணீர் எடுக்க அந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று பானையை கழுவி ஊற்றி, தண்ணீரை மோந்து வீடு திரும்பினாள், முதியவரின் மனைவி.

இதைப் பார்த்த முதியவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. மனைவியிடம்  இந்த பானையின் உள்ளே இருந்த கல் எங்கே என்று கேள்வி எழுப்பினார். மனைவிக்கு இந்த விஷயம் தெரியாது. பானைக்குள் இருந்த கல் ஆற்றோடு சென்றது. சில தினங்கள் கடந்தன. மீண்டும் அர்ஜுனனும் கிருஷ்ணரும் வீதியில் நடந்து செல்லும் போது, முதியவர் நடந்ததை சொல்லி அர்ஜுனரிடம் தர்மம் செய்ய சொல்லி மீண்டும் கேட்கின்றார்.

- Advertisement -

இந்த முறை அர்ஜுனனிடம் கிருஷ்ணர், இவருக்கு விலை உயர்ந்த அதிகமான பணத்தை கொடுக்க வேண்டாம். வெறும் இரண்டு காசுகளை மட்டும் கொடுக்கும்படி சொன்னார். சரி என்று, அர்ஜுனனும் கண்ணனுடைய பேச்சை தட்டாமல், வெறும் இரண்டு காசுகளை மட்டும் அந்த முதியவருக்கு கொடுத்து அனுப்பி விட்டார். அர்ஜுனனுக்கு கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. ‘இந்த இரண்டு காசுகளை வைத்து அந்த முதியவரால் என்ன செய்யமுடியும்? இரண்டு காசுக்கு ஒரு வேளை கூட வயிறார சாப்பிட முடியாதே என்று சிந்தித்துக் கொண்டே சென்றார். சரி, நடப்பதை பார்க்கலாம்’ என்று இருவரும் முதியவரை பின்தொடர்ந்து சென்றனர்.

dhaanam

செல்லும் வழியில் ஒரு மீனவன் உயிருடன் இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி, முதியவரிடம் கேட்டான். அந்த இடத்தில் சற்று சிந்தித்த முதியவர், இந்த காசை வைத்துக்கொண்டு எப்படியும் நம்மால் நிறைவாக ஒரு வேளை சாப்பாட்டை கூட சாப்பிட முடியாது! என்று எண்ணி, சரி, அந்த மீன்களை வாங்கியாவது ஆற்றிலேயே விட்டுவிடுவோம். கொஞ்சமாவது புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு முடிவினை எடுத்து விட்டார்.

fisher man

இரண்டு காசுகளைக் கொடுத்து அந்த மீனையும் தன் கையில் வாங்கிக் கொண்டார் முதியவர். ஒரு மீனை, ஆற்றில் விட்டுவிட்டார். மற்றொரு மீன் மட்டும் வாயை மூடாமல் திறந்து கொண்டே இருந்தது. அதனுடைய தொண்டையில் ஏதோ சிக்கி இருந்தது. அதன் வாயை திறந்து பார்த்தால், அன்று அந்த முதியவருடைய மனைவி ஆற்றில் விட்ட நவரத்தினக்கல் மாட்டிக் கொண்டிருந்தது. சிக்கிவிட்டது! சிக்கிவிட்டது! என்று சந்தோஷத்தில் கத்தினார் முதியவர்.

fish

எதேர்ச்சையாக அந்தப் பக்கம் முதியவரின் பணத்தை திருடிய திருடன், தான் தான் சிக்கி விட்டோமோ என்று நினைத்து அதிர்ச்சியில் தடுமாறி ஓடத் தொடங்கினான். இதை கவனித்து வந்த அர்ஜுனனும் கிருஷ்ணரும் அந்த திருடனை பிடித்து பணத்தை பிடுங்கி முதியவர் கையில் ஒப்படைத்து விட்டார்கள்.

krishna arjuna-compressed

அர்ஜுனனுக்கு இப்போதுதான் புரிந்தது! கண்ணன் சிரித்துக்கொண்டே அர்ஜுனருக்கு கூறியதாவது. ‘இந்த முதியவர் தனக்கு தர்மமாக கிடைத்த பொருட்களை தான் மட்டுமே வைத்து சுகபோகமாக வாழவேண்டும் என்று முதலில் கொடுத்த பொற்காசுகளை எடுத்துக்கொண்டு சென்றார், திருடு போனது. இரண்டாவதாக கிடைத்த பொருளை யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் ஒளித்து வைத்துவிட்டார். அதுவும் அவரது கையை விட்டு போய்விட்டது.’

krishna

இறுதியாக கொடுத்த இரண்டு காசுகள் தனக்கு உதவாவிட்டாலும் ஒரு உயிராவது பிழைத்து வாழட்டும் என்று எண்ணி, சுயநலம் பார்க்காமல் புண்ணிய காரியத்திற்கு ஈடுபட அவரது மனம் யோசித்தது. அந்த நல்ல எண்ணமே, அவர் இழந்த மற்ற பொருட்களை அவருக்கு மீட்டுக் கொடுத்து விட்டது. இந்த நல்ல உள்ளம் இருக்கும் இடத்தில் என்றைக்குமே மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள வரலாற்று கதை தான் இது.

இதையும் படிக்கலாமே
உடனடி பணத்தேவையை, உடனடியாக பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.