உடனடி பணத்தேவையை, உடனடியாக பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு.

pudhina

அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல், நாம் எத்தனையோ சந்தர்ப்பங்களில், கட்டாயம் தடுமாறி இருப்போம். எதிர்பாராதவிதமாக, எதிர்பாராத தேவைகளை பூர்த்தி செய்ய, நம்முடைய தகுதிக்கு மீறி சில சமயங்களில் பணத்தேவை ஏற்படும். அந்த சமயம் கட்டாயம் நாம் யாரிடமாவது கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். இல்லை நகையை வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இல்லை சொத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இப்படி உங்களது அவசர தேவைக்கு உடனடியாக கையில் பணம் தேவை என்றால், தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றிய ஒரு பதிவை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

vallarai

தாந்திரீக ரீதியாக செய்யக்கூடிய பரிகாரங்களும், இறைவனை வேண்டி ஆன்மீக ரீதியாக செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. இன்று நாம் பார்க்கக்கூடிய பரிகாரமும், அந்த வரிசையில் தான் அமைந்துள்ளது. ஆத்மார்த்தமாக நவகிரகத்தை வேண்டி செய்யவேண்டிய பரிகாரம் என்றும் சொல்லலாம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கீரை வகையைச் சார்ந்தது. அதில் முதலாவது புதினா, இரண்டாவது வல்லாரைக் கீரை, பொதுவாக வியாழக்கிழமைகளில் உங்களுடைய வீட்டில் சமையலில் வல்லாரைக்கீரை அல்லது புதினா இந்த இரண்டு கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு கீரைகளை உணவில் எப்படி வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

puthina

வியாழக்கிழமை அல்லாது புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதினா, வல்லாரை கீரையை சமையலில் சேர்த்துக் கொள்வது நம்முடைய பணம் கஷ்டத்தை தீர்க்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை எப்போதுமே நீங்கள் பின்பற்றி வரலாம். சரி, உங்களுக்கு அவசர பணத் தேவை ஏற்பட்டுவிட்டது. உங்கள் தேவைக்கான பணம் உடனடியாக கிடைக்க, இரண்டு புதினா இலைகளை உங்களது பாக்கெட்டில் வைத்து சென்றால், அவசர தேவைக்காக பணம் உங்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேபோல் வியாழக்கிழமைகளில் புதினா வேர் அல்லது புதினா இலை இவை இரண்டில் எதை வேண்டும் என்றாலும் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். இப்படி செய்து வரும் பட்சத்தில், உங்களது சேமிப்பு இரட்டிப்பாகும். இதில் ஒரு துளி அளவும் சந்தேகம் வேண்டாம். புதினாவுக்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம், என்று நிறைய பேருக்கு சந்தேகம் எழும். புதினா குருவின் காரகத்துவமாக சொல்லப்பட்டுள்ளது.

guru-bhagavan

பணத்தை கொடுப்பவர், தங்கத்தை கொடுப்பவர், செல்வத்தை கொடுப்பவர் குரு. இந்த குருவினால் வரக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டுமென்றால், புதினா இலைகளை மேற்சொன்ன விதங்களில் நீங்கள் பயன்பாட்டில் உங்களுடன் வைத்துக் கொண்டாலே போதும். அவசர தேவைக்கு பணம் கிடைக்கும். சேமிப்பு இரட்டிப்பாகும். கடன் தொல்லையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

mantra-sign-cash

இந்த பரிகாரத்தை இத்தனை முறை தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு எப்போதெல்லாம் அவசர தேவைக்கு பணம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் புதினா இலைகளை எடுத்து உங்களது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இதிலிருந்து 1 செங்கல் கிடைத்தால் கூட போதும். ஒரே வருடத்தில் சொந்த வீடு கட்டும் யோகம் உங்களை தேடிவரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.