எதையுமே எதிர்பார்க்காமல், தினமும் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடந்து கொண்டே இருக்கும். நல்லதை அந்த ஆண்டவனே உங்களுக்கு கொடுத்து விடுவான்.

krishna
- Advertisement -

நம்முடைய வாழ்க்கைக்கு எது நல்லது. எது கெட்டது என்று நமக்கு தெரியாது. இது நடக்க வேண்டும். அது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் புலம்பி கேட்காதீர்கள். சந்தோஷமா இருங்க. உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது நிச்சயம் தானாக நடக்கும். அதற்காக குறிக்கோள் இல்லாமல், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் வாழ கூடாது. குறிக்கோள் என்பது வேறு. லட்சியம் என்பது வேறு. கட்டாயம் நாளைக்குள் இது நடந்து விட வேண்டும். அடுத்த மாதத்திற்குள் இது நடந்து விட வேண்டும் என்று நாம் எந்த வேலையுமே செய்யக்கூடாது. கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு தகுந்த பலனை அந்த கடவுள் நமக்கு கொடுத்து விடுவான்.

இன்றைக்கு கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்வோம். மூன்று மாதங்கள் கழித்து அதற்கு எந்த பலனுமே நமக்கு கிடைக்காது. மனம் நொந்து போய் விடுவோம். ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் நாம் சுலபமாக செய்யக்கூடிய ஒரு வேலைக்கு, நாம் எதிர்பார்க்காத ஒரு நல்ல பலன் கிடைக்கும். இது வாழ்க்கையின் எதார்த்தம். இதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறார்கள் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

- Advertisement -

ஆகவே உழைப்புக்கு தகுந்த கூலியை அந்த கடவுள் எப்போது கொடுக்க வேண்டுமோ, அப்போது நிச்சயம் நமக்கு கொடுப்பான். எந்தவித கோரிக்கையும் இல்லாமல், சுயநலம் இல்லாமல், இறைவனுக்காக மட்டும், இறைவனை நினைத்து சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கிருஷ்ணரது பீஜ மந்திரம் தான் இது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு கிருஷ்ண பகவானை, ஒரு முறை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். தினமும் நீங்கள் உச்சரிக்க வேண்டிய பீஜ மந்திரம் இதோ உங்களுக்காக.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் கிருஷ்ணாயை
கோவிந்தாயை ஸ்வாஹா

- Advertisement -

மந்திரம் இவ்வளவுதான். இதில் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகிறது அல்லவா. இதை தான் பீஜ வார்த்தைகள் என்று சொல்லுவார்கள். ‘பீஜ’ மந்திரம் என்றால் வேர்கள் என்று அர்த்தம். அதாவது ஆணிவேர் மாதிரி நீங்கள் ஒரு விதையை விதைக்கிறீர்கள். அந்த விதை முளைத்து செடியாகி, மரமாகி, பெரிய விருட்சமாக வளரும். அதுபோலத்தான் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சியும், விருட்ச்சம் போல பெரியதாக பிரகாசமாக பிரதிபலிக்கும்.

அதிகாலை 4:00 மணியிலிருந்து காலை 9:00 மணிக்குள், இந்த மந்திரத்தை உங்களுக்கு சவுகரியமான நேரத்தில் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து, உச்சரியுங்கள். தெற்கு பார்த்தபடி மட்டும் அமரக்கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 27 முறை உச்சரித்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: இந்த மரத்தின் அடியில் 5 நிமிடங்கள் அமர்ந்தாலே, ஆயிசுக்கும் அழியா ஐஸ்வர்யம் பெருகும். குபேரன் குடியிருக்கும் இந்த மரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாதா?

காலையில் நேரமில்லை என்பவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 10:00 மணிக்குள் இந்த மந்திரத்தை சொல்லலாம். தவறு கிடையாது. கை கால்களை அலம்பி கொண்டு, முகத்தை கழுவிக் கொண்டு, கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லிவிட்டு மந்திரத்தை உச்சரித்தாலே போதும். நடக்கும் அதிசயத்தை 48 நாட்களில் நீங்களே பார்ப்பீர்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -