- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர அருள் கிடைக்க ஆடி கடைசி வியாழன் ஏற்ற வேண்டிய தீபம்

குபேர அருள் கிடைக்க ஆடி கடைசி வியாழன் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும், தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்பிற்குரிய பலனை பெற வேண்டும் என்றால் அதற்கான கிரக அமைப்பு என்பது நமக்கு வேண்டும். அந்த கிரக அமைப்பை சரி செய்வதற்கும் மேலும் சில தெய்வங்களின் அருளை பெறவும் பல வழிபாடுகளையும், பரிகாரங்களையும் நாம் செய்கிறோம்.

இப்படி நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய தெய்வங்களில் ஒருவராக திகழ்பவர்தான் குபேர பகவான். குபேர பகவானின் அருள் இருந்தால் பணவரவு என்பது தாராளமாக இருக்கும், தடைப்பட்ட பணமும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்பேர்ப்பட்ட குபேர பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

குபேர அருள் கிடைக்க ஆடி கடைசி வியாழன் ஏற்ற வேண்டிய தீபம்

நாம் ஒவ்வொருவரும் குபேர பகவானின் அருளை பெற வேண்டும், மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக பல வழிப்பாட்டு முறைகளை மேற்கொள்கிறோம். பல பரிகாரங்களையும் மேற்கொள்கிறோம். தாந்திரீக பரிகாரங்களையும் செய்வது உண்டு. இப்படி எந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் அந்த பரிகாரத்தில் முழு நம்பிக்கை வைத்து செய்தால் மட்டுமே தான் அவர்களால் அந்த பரிகாரத்திலும் வழிபாட்டிலும் வெற்றியை பெற முடியும். அந்த வகையில் ஆடி மாத கடைசி வியாழக்கிழமை அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் குபேர பகவானின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது வியாழக்கிழமை. வியாழக்கிழமை அன்று பலரும் தங்களுடைய இல்லத்தில் குபேர பூஜை செய்வதுண்டு. குபேர பூஜை செய்வதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை பின்பற்றியும் நாம் குபேர பூஜை செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில் மாலை 5 மணிக்கு மேல் 108 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து குபேர பகவானின் போற்றிகளை கூறி ஒவ்வொரு நாணயமாக ஒரு தட்டில் போடு வேண்டும். அப்படி போடும்பொழுது அந்த நாணயத்தின் ஒளி வெளியே கேட்கும் அளவிற்கு போட வேண்டும்.

- Advertisement -

இப்படி வழிபாடு செய்தாலும் குபேர பகவானின் அருள் கிடைக்கும். இந்த வழிபாடு என்பது குபேர பகவானுக்குரிய எளிமையான வழிபாடாக கருதப்படுகிறது. இதை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று செய்வது என்பது நல்ல பலனை தரும். இதோடு சேர்த்து ஆடி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் குபேர பகவானே நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இருக்கக்கூடிய குரு ஹோரையில் ஒரு சிறிய தட்டில் வாழையிலை, வெற்றிலை, மாயிலை என்று ஏதாவது ஒரு இலையை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த ஒரு மணி நேரமும் தீபம் எரிய வேண்டும். இதே போல் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இருக்கக் கூடிய குரு ஹோரையிலும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாளைய தினம் நாம் இந்த இரண்டு நேரங்களிலும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தோம் என்றால் குரு பகவானின் அருளாலும், குபேர பகவானின் அருளாலும் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:16-08-2024 வரலட்சுமி விரதத்தன்று செய்ய வேண்டிய பரிகாரம்

மிகவும் எளிமையான சக்தி வாய்ந்த இந்த குபேர தீபத்தை முழு நம்பிக்கையுடன் ஏற்றி வழிபடுபவர்களுக்கு குபேர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்