துரதிஷ்டக்காரர்கள் என்று நினைப்பவர்கள் கூட கிரக அருளால் அதிஷ்டத்தை தன் வசப்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இதை ஒன்றை மட்டும் செய்தாலே போதும்.

muthirai

உலகில் உள்ள நாம் அனைவருமே இந்த வாழ்க்கையே ஒரு ஓட்டப் பந்தயமாக நினைத்து ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். எதற்காக? நம் இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற துடிப்பு தான் ஓட்டமாக மாறுகிறது. அப்படி நாம் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அல்லது இலக்கை அடைவதற்காக நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் சென்று முடியாது. இவ்வாறு காரியத்தடை காரியம் நிறைவேறாமல் போவதற்கு நம் கிரக நிலைகளே முக்கிய காரணமாகும்.

Navagragham

கிரக நிலைகளின் தாக்கத்தினால் நம் மனமானது ஒரே நிலையில் இல்லாமல் மாறிக்கொண்டே வரும். எனவே நாம் எடுத்த காரியத்தில் விருப்பமின்மை, கவனக்குறைவு மற்றும் கவனச்சிதறல் போன்றவை நிகழ்ந்து காரியமே கெட்டுவிடும். அப்படி நிகழாமல் இருக்க நம் கைவிரல்களில் குபேர முத்திரையை செய்து, அதன் மூலமாக நம் கிரக நிலைகளை கட்டுப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்தலாம்.

குபேர முத்திரை:
எடுத்த காரியங்களில் வெற்றி பெற பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி மெதுவாக இணையுங்கள் மற்ற இரு விரல்களான மோதிர விரலையும், சுண்டு விரலையும் உள்ளங்கையை தொடுமாறு விரல்களை மடித்து 15 நிமிடங்கள் அல்லது முடிந்தவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையில் இருங்கள். இதன் பெயர் குபேர முத்திரை ஆகும். இங்கு வருடாந்திர கிரகங்களான குரு, சனி மற்றும் மாதம் ஒருமுறை மாறும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. ஜோதிட ரீதியாக பெருவிரல் சுக்கிரனையும், ஆள்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்துப் பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை நிகழும். 

Muthirai

நம் கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் ஒவ்வொரு விரலும் பஞ்சபூத தத்துவதோடு இயக்குகிறது. இந்த பஞ்சபூத தத்துவப்படி குபேர முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய சக்திகளை ஒருங்கிணைத்துச் செயல்படும். இந்த மூன்று மகா சக்திகளை தூண்டிவிட்டால் வேக சக்தி அதிகமாவதோடு ஆழ்மனதின் சக்தியும் இயங்க துவங்குகிறது. இதனால் மூளைக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு உழைப்பிற்கான சரியான தீர்வும் கிடைக்கும். இதனால் புது புது திட்டங்களை செயல்படுத்தி உயர்வை நோக்கிச் செல்வீர்கள். 

நாம் என்ன நினைக்கிறோமோ அதை நினைத்து இந்த முத்திரையை செய்தால் நினைத்த காரியத்தை சித்தியாக்கும் தன்மையும், வெற்றியை நோக்கி புதிய பாதையையும், புத்துணர்ச்சியையும் மற்றும் உங்களின் ஆற்றல்களையும் வெளிக்கொண்டுவரும். இன்னும் இந்த முத்திரை கொண்டு பல பயிற்சிகள் உண்டு. அவற்றையெல்லாம் இக்காலக் கட்டத்தில் நம்மால் செய்ய முடியாது. இந்த குபேர முத்திரையை எங்குவேண்டுமானாலும் அதாவது பயணம் செய்யும்பொழுது, அமர்ந்திருக்கும்பொழுது என்று எங்கெல்லாம் நேரம் கிடைக்குமோ அங்கெல்லாம் இவற்றினை செய்யலாம்.

kubera

செயல்படும் முறை:
குபேர முத்திரை செய்யும்போது மூன்று மகா சக்திகள் ஒருங்கிணைந்து தூண்டப்பட்டு, ஆழ் மனமானது விழிப்பு நிலையை அடைகிறது. நாம் எதை நினைத்து முத்திரையைப் பயன்படுத்தினோமோ அந்த எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகிறது. நம் ஆழ்மனமானது நாம் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் ஒன்று. எனவே நாம் விதைத்த எண்ணங்களை நிறைவேற்ற நம் உள்ளுணர்வின் மூலமாக எப்போதுமே நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை எப்படி செயலாகக்குவது என்ற திட்டத்தையும் நமக்கு தெரியப்படுத்தும். அறிவியலில் ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை விழிக்கச் செய்யும் ஒரு வழிமுறைதான்.