- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவம்பர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய

நவம்பர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அந்த மாதத்தில் நாம் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்றும் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்றும் லாபம் அதிகரிக்க வேண்டும் என்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்றும் படிக்கின்ற பிள்ளைகள் சிறப்பாக படிக்க வேண்டும் என்றும் பலவிதமான எண்ணங்களில் நாம் இருப்போம். அப்படிப்பட்ட நேர்மையான நல்ல எண்ணங்கள் சரியாக நிறைவேற நவம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவம்பர் மாதம் வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வகையான வழிபாட்டை செய்வோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வத்தை வழிபாடு செய்யும் வழிமுறையும் இருக்கும். அதே போல் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை அந்த மாதத்தில் வழிபாடு செய்யும்பொழுது அந்த மாதம் சிறப்பான மாதமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பொதுவான வழிபாடாக ஒரு சில வழிபாடுகள் இருக்கும். இந்த வழிபாட்டை எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது அந்த மாதம் சிறப்பான மாதமாக அமையும். அப்படிப்பட்ட வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நவம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்றால் அதுதான் அண்ணாபிஷேகம். மேலும் நவம்பர் மாதத்தில் தான் தமிழ் மாதத்தின் கார்த்திகை மாதமும் பிறக்கிறது. கார்த்திகை மாத சோமவாரம் என்பதை சிவபெருமானுக்குரிய மிகவும் ஒரு அற்புதமான விரத நாளாக இருப்பதால் நவம்பர் மாதம் முழுவதும் நாம் சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும். அதிலும் குறிப்பாக தினமும் காலையில் “ஓம் சிவாய நம ஓம்” என்னும் மந்திரத்தை 18 முறை கூறி சிவ வழிபாட்டை செய்யும் பொழுது நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக அமையும்.

அதேபோல் நவம்பர் மாதம் என்பது குபேரருக்குரிய மாதம் என்று கூறப்படுகிறது. அதனால் நாம் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம்முடைய வீட்டின் வடகிழக்கு மூலையான குபேர மூலையில் வடக்கு திசை பார்த்தவாறு ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து குபேரரை வழிபாடு செய்யும் பொழுது குபேர பகவானின் அருளால் செல்வ வளம் பெருகும். இந்த தீபத்தை தினமும் ஏற்றுவது சிறப்பு. தினமும் ஏற்ற இயலாது என்பவர்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி போன்ற கிழமைகளில் ஏற்றுவதன் மூலமும் குபேர பகவானின் அருளை பெற முடியும்.

- Advertisement -

எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டின் பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் நாம் தான தர்மங்களை செய்ய வேண்டும். தான தர்மங்கள் தான் நம்முடைய கர்ம வினைகளை குறைக்க கூடியது. நம்முடைய கர்ம வினைகள் குறைந்தால் தான் நாம் செய்த வழிபாட்டிற்குரிய பலனை நம்மால் பெற முடியும் என்பதால் இந்த வழிபாட்டை செய்வதோடு நம்மால் இயன்ற அளவு பிறருக்கு அன்னதானத்தை செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் குறைந்து நாம் செய்த வழிபாட்டிற்குரிய பலனை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: துளசி கல்யாண வழிபாடு

நவம்பர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமையவும் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கவும் இந்த வழிபாட்டு முறைகளை முழுமனதோடு செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்