- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர சம்பத்து பெற குபேர சஷ்டி வழிபாடு

குபேர சம்பத்து பெற குபேர சஷ்டி வழிபாடு

- Advertisement -

முருகப் பெருமானுக்கு உகந்த மாதமாக திகழக்கூடியது கார்த்திகை மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் தான் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானுக்குரிய மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய திதி வருவது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அந்த வகையில் தேய்பிறை சஷ்டி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய இந்த வழிபாட்டு முறை நமக்கு குபேர சம்பத்தை ஏற்படுத்தித் தரும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. சஷ்டி திதி அன்று நாம் எதை நினைத்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்கிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கு நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்றும், தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சஷ்டி என்பது நவம்பர் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது, அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதே சமயம் வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமையாகவும் திகழ்கிறது. சஷ்டி திதியும் சேர்ந்து வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமான், குரு பகவான் மற்றும் குபேர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இப்படி இவர்கள் மூவரின் அருள் நமக்கு கிடைக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினை முற்றிலும் தீரும்.

மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் எப்பொழுதும் வீட்டில் எந்த முறையில் சஷ்டி வழிபாட்டை மேற்கொள்வோமோ அந்த முறையில் சஷ்டி வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். கடைசியாக ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டில் குரு பகவானுக்குரிய கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி அளவு போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். இதற்கு மேலே முருகப் பெருமானுக்கும், குபேர பகவானுக்கும், அனைத்து தெய்வங்களுக்கும் உரிய கனியாக திகழக்கூடிய எலுமிச்சம் கனி ஒன்றை வைக்க வேண்டும். இதில் நம்முடைய மோதிர விரலால் ஓம் என்று சந்தனத்தை தொட்டு எழுத வேண்டும்.

- Advertisement -

இப்படி எழுதி முடித்த பிறகு எங்களுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ளுங்கள். கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் வேறு எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையும் கூறி வழிபாடு செய்து கொள்ளலாம். ஆனால் ஏதாவது ஒரு பிரச்சினையை மட்டுமே முன் வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அன்று இரவு முழுவதும் இது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

மறுநாள் காலையில் எலுமிச்சம் பழத்தை எடுத்து முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு கொண்டை கடலையை எடுத்து பறவைகளுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இந்த எலுமிச்சம் கனி எப்பொழுது அழுக ஆரம்பிக்கிறதோ அப்பொழுது அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் பிரச்சனைகளையும் எலுமிச்சம் கனி உள்வாங்கி கொண்டதாக அர்த்தம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு

இந்த முறையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது முருகப்பெருமான், குபேரர், குரு பகவான் போன்ற மூவரின் அருளையும் நம்மால் பெற முடியும். கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்