- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு

தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமானுக்குரிய மாதமான கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி என்பது நவம்பர் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது, அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது நமக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தித் தரும். தேய்பிறை சஷ்டியில் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும், கஷ்டங்களும், அவமானங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் முருகனின் கையில் இருக்கக்கூடிய வேலை நினைத்து மந்திரம் கூறி வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு

சூரனை வதம் செய்வதற்காக அம்பிகையே தன் கையால் முருகப்பெருமானுக்கு வேலை வழங்கினார் என்றும் அந்த வேலை பயன்படுத்தி தான் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார் என்றும் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. உலகத்திற்கு கெடுதல் அளித்த அசுரனை வதம் செய்த வேலை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வேலை வழிபாடு செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருந்தாலும் குறிப்பாக வேல்மாறல் படிப்பது என்பது அதீத பலனை தரும்.

- Advertisement -

வேல் மாறலை தினமும் பாராயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது. அதற்கு பதிலாக அந்த வேல்மாறலுக்கு இணையான சக்தியை கொண்டதாக திகழ்வதுதான் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை தேய்பிறை சஷ்டியான நவம்பர் மாதம் 21ஆம் தேதி ஆறு முறை கூறினாலே வேல் மாறல் படித்ததற்குரிய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நமக்கு இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்றும், அவமானங்கள் அசிங்கங்கள் அனைத்தும் நீங்கும் என்றும், நம்மை அலட்சியப்படுத்தி உதாசீனப்படுத்தியவர்கள் முன்பு நம்மால் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் எந்தவித பிரச்சினையும் வராமல் நம்மை பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாலை நேரத்தில் வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களால் இயன்ற அளவு வேலுக்கு அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வெற்றிலை தீபம் அல்லது துவரை தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வலது கையில் ஒரே ஒரு சுக்கை வைத்துக்கொண்டு வேல் காயத்ரி மந்திரத்தை ஆறு முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

இப்படி ஆறு முறை கூறி முடித்த பிறகு நம் கையில் இருக்கக்கூடிய சுக்கை நாமே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி மந்திர உரு ஏற்றப்பட்ட சுக்கு நம்முடன் இருக்கும் பொழுது நமக்கு எந்தவித பிரச்சினையும் வராது என்று கூறப்படுகிறது. இதை நூலில் கட்டி கையிலோ கழுத்திலோ கட்டிக் கொள்ளவும் செய்யலாம் அல்லது பர்ஸில் வைத்துக் கொள்ளவும் செய்யலாம் இந்த சுக்கை மூன்று மாதம் வரை வைத்துக்கொண்டு மூன்று மாதம் கழித்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பிரச்சனை தீர பஞ்சமி பரிகாரம்
இந்த முறையில் வேலை தேய்பிறை சஷ்டி தினத்தன்று வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளும் வேலின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று இருக்கும் பிரச்சினைகள் தீர்வதோடு புதிதாக எந்தவித பிரச்சினையும் வராமல் இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்