குபேர வசியம் உண்டாக வழிபாடு

pray lady kuberar
- Advertisement -

அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக திகழக் கூடியவர் தான் குபேர பகவான். இவரிடம் ஒன்பது நிதிகளும் இருக்கிறது. இலங்கையை உருவாக்கியவரே இவர் தான் என்று புராணங்கள் கூறுகிறது. அனைத்து செல்வங்களையும் இழந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவம் இருந்து ஒன்பது நிதிகளையும் பெற்றார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேர பகவானை நாம் வழிபடும் பொழுது நமக்கும் செல்வ சம்பத்துகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குபேர பகவானை எந்த பொருட்களை வைத்து வழிபட்டால் நம் வாழ்வில் விரைவிலேயே குபேர யோகம் உண்டாகும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர வசியம் உண்டாக வழிபாடு

குபேரர் என்பவர் தெய்வங்களின் வரிசையில் வரமாட்டார். இவர் அஷ்டதிக்குகளில் ஒருவராக திகழக் கூடியவர். இருப்பினும் நவநிதிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதிலும் குறிப்பாக சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டு நிதிகளும் தன்னுடனே இருப்பதால் இவரை பலரும் வழிப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவரை தொடர்ச்சியாக நாம் வழிபடும் பொழுது நமக்கு செல்வ செழிப்பில் எந்த வித குறையும் ஏற்படாது. பெருமாளுக்கே கடன் கொடுத்தவராக தான் குபேர பகவான் திகழ்கிறார் என்பது பலரும் அறிந்ததே அப்படிப்பட்ட குபேர பகவானை எப்படி வழிபடலாம் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

குபேர பகவானுக்கு உரிய கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. அதுவும் மாலை நேரமே அவருக்கு உகந்த நேரம் ஆக கருதப்படுகிறது. குபேர பகவானை வழிபாடு செய்ய வேண்டும் அல்லது குபேர பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை தோறும் மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு முக்கியமாக 2 பொருட்கள் தேவைப்படும். இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே குபேர யோகத்தை நம்மால் பெற முடியும்.

வியாழக்கிழமை மாலை நேரத்தில் பூஜை அறையை சுத்தம் செய்து குபேரருக்குரிய கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சோலி அல்லது சிறிய சங்கு இவை இரண்டில் எது கிடைக்குமோ அதை வாங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். அடுத்ததாக மிகவும் முக்கியமாக தேவைப்படுவது தாமரைப்பூ. தங்களால் இயலும் பட்சத்தில் அந்த சங்கு அல்லது சோலியுடன் சேர்த்து ஒவ்வொரு தாமரை பூவும் வைக்கலாம். இயலாத பட்சத்தில் ஒரே ஒரு தாமரை பூவாது வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து குபேரரின் காயத்ரி மந்திரம் அல்லது மூல மந்திரம் இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து 23 முறை பாராயணம் செய்ய வேண்டும். சோலியும் தாமரைப்பூவும் எதற்காக வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். குபேரருக்கு வலது புறமும் இடது புறமும் இருக்கக்கூடிய நிதிகள் சங்கநிதி மற்றும் பதுமநிதி. சங்கநிதி என்றால் அவர் சங்கை வைத்திருப்பார். அதனால்தான் சிறிய சங்கு கிடைத்தால் அதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது. சங்கு கிடைக்காத பட்சத்தில் சோலியை வைத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக இருப்பது பதுமநிதி தன்னுடைய கையில் தாமரைப் பூவை வைத்திருப்பார். அதனால் தான் தாமரை பூவை வைத்து வழிபட வேண்டும் என்று கூறுகிறோம். இதில் குபேரருக்கு நெய்வேத்தியமாக நெல்லிக்காயை வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு. இப்படி குபேரருக்கு அவரிடம் இருக்கக்கூடிய நிதிகளுக்கும் பிடித்தமான பொருட்களை வைத்து குபேரரின் மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது குபேர பகவானின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைத்து குபேர யோகம் உண்டாகும். செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை சஷ்டி அன்று செய்யக்கூடாத செயல்கள்

எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த குபேர பூஜையை முழு நம்பிக்கையுடன் செய்து செல்வ செழிப்புடன் நலமுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -