குபேர விளக்கை எப்படி ஏற்றினால் அதிஷ்டம் பெருகும்?

kuberan

நம் வீட்டுப் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு இதில் ஏதோ ஒரு வகையான விளக்கினை ஏற்றி தான் வழிபடுவது வழக்கம். பொதுவாக இது நம் குடும்பத்திற்கு நன்மையை அளிக்கும். இது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால், செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் நம் வீட்டில் என்ன விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கினை எப்படி ஏற்ற வேண்டும். என்பதை பற்றி தான் இந்த பதிவு.

lakshmi kubera

செல்வச் செழிப்பை நமக்கு அள்ளித் தருபவர் குபேரர். அந்த குபேரனை வழிபட நாம் ஏற்றும் தீபம் தான் குபேர விளக்கு. இந்த விளக்கு ஏற்றும் முறையை எல்லா பெண்களும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டும். சுலபமான வழிபாட்டின் மூலம் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்றால் அதனை செய்ய நாம் தவறக்கூடாது.

இந்த குபேர விளக்கினை நாம் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு மேல் ஏற்ற வேண்டும். அதற்கு முன்பாக நம் வீட்டில் காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு இருந்தாலும், மாலையில் ஒரு முறை வாசலை சுத்தம் செய்து, அரிசி மாவு கோலம் போட்டு, காவி நிறத்தில் வர்ணம் தீட்ட வேண்டும். அடுத்ததாக நம் நிலவாசல்படியை துடைத்து இரண்டு பக்கமும், உங்கள் வீட்டு வழக்கப்படி மஞ்சள் தீட்டி குங்கும பொட்டு வைக்க வேண்டும். நம் வீட்டில் இன்று மங்கள காரியம் நடைபெறுகிறது என்பதை, வீட்டின் உள்ளே வருபவர்களுக்கு தெரியப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

kuberan

அடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளும் மற்றொரு பாதையில் குங்குமம் தடவி வாசல் படியின் இரண்டு பக்கத்திலும் வைக்க வேண்டும். இது கண் திருஷ்டி படாமல் இருக்க கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். எலுமிச்சை துண்டுகள் பக்கத்தில் பூக்களையும் வைத்து விடுங்கள்.

- Advertisement -

(குபேர விளக்கு என்பது விளக்குகள் விற்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.) விளக்கினை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக விளக்கிற்கு 3 அல்லது 5 என்ற கணக்கில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும். நல்லெண்ணெயையும், திரியையும் சேர்த்து தயார் செய்த விளக்கினை, நாம் நிலவாசல்படியின் வெளிப்பக்கமாக சென்று, வெளியிலிருந்து உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டு, ஒரு மரப்பலகையின் மீது விளக்கினை வைத்து, வாசலில் இடது பக்கத்தில் ஏற்ற வேண்டும். விளக்கு கிழக்கு நோக்கித் தான் இருக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள மூத்த பெண்களின் கையால் இந்த விளக்கினை ஏற்றுவது இன்னும் சிறப்பு. மூத்தவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில் வீட்டிப் பெண்கள் இந்த விளக்கினை ஏற்றலாம். இந்த விளக்கினை ஏற்றும் பொழுது அனைவருக்கும் மன நிம்மதியும், செல்வச்செழிப்பும் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

Kuberan

குபேரருக்கு உகந்த நேரமான மாலை 5.30 லிருந்து 8 மணி வரை இந்த விளக்கினை ஏற்றி வைக்கலாம். நில வாசப்படியில் உள்ள விளக்கினை பூர்த்தி செய்யும் முன்பு, அந்த விளக்கினை எடுத்துக் கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து அரை மணி நேரம் எரிய விட்டு பின்பு பூர்த்தி செய்வது நல்லது. இந்த விளக்கினை நாம் ஏற்றுவதன் மூலம் குபேரரின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.

இதையும் படிக்கலாமே:
யார் வீட்டில் மகாலட்சுமி மகிழ்ச்சியாக குடிகொள்வாள் தெரியுமா?

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kubera vilakku etrum murai in Tamil. Kubera vilakku vaikkum murai. Kubera vilakku benefits in Tamil. Kubera vilakku uses in Tamil