யார் வீட்டில் மகாலட்சுமி மகிழ்ச்சியாக குடிகொள்வாள் தெரியுமா?

mahalakshmi-1
- Advertisement -

நம் வீட்டில் மகிழ்ச்சியும், நிறைவான வாழ்க்கையும், அமைதியும், மன நிம்மதியும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு மஹாலக்ஷ்மி நம் வீட்டில் குடியேற வேண்டும். அப்படிப்பட்ட மஹாலக்ஷ்மி நம் வீட்டில் குடியேற வேண்டுமேயானால் நம் வீடு எப்படி இருக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது. என்பதை பற்றி காண்போமா.

lakshmi kubera

ஒரு வீட்டிற்கான மரியாதை என்பது அந்த வீட்டில் இருப்பவர்கள், அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் அமையும். அவர்களின் பேச்சும், செயலும் எந்தவிதத்திலும் அடுத்தவர்களை புண்படுத்தாமல் மென்மையாக இருக்க வேண்டும். நம் வீட்டிற்கு வருபவர்களை உபசரிப்பதிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட சுபாவங்களை கொண்டவர்களின் வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள். இப்படி நம் வீட்டிற்கு வந்த மஹாலக்ஷ்மியை எப்படி நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வது.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பெண்கள் எப்பொழுது மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு இருக்கின்றார்களோ அப்பொழுதுதான் மஹாலக்ஷ்மி நம் வீட்டில் நிரந்தரமாக தங்குவாள். அடுத்ததாக உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதனை வழிபடாமல், தீபம் ஏற்றாமல் இருக்கக் கூடாது. அது அமங்களத்தைக் குறிக்கும். மஹாலக்ஷ்மியின் அம்சமான துளசி செடியை தினமும் பூஜை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மூன்று முறை சுற்றி வலம் வர வேண்டும். அவ்வாறு நாம் வணங்கும் போது  பெருமாளை நினைத்து வழிபட வேண்டும். பெருமாளை வழிபடும் போது மஹாலக்ஷ்மி கூப்பிடாமலேயே வந்து விடுவார்களாம். இதனால் தான் நாம் அதிகாலை வேளையில் சுப்ரபாதத்தை வீட்டில் கேட்கின்றோம். மாலையில் கந்த சஷ்டி கவசம் கேட்பது சிறப்பான ஒன்று.

Lord Murugan

மஹா விஷ்ணுவின் அம்சமாக தான் நாம் நெல்லி மரத்தை காண்கின்றோம். நெல்லி மரத்தில் விஷ்ணுவுடன், மஹாலக்ஷ்மி சேர்ந்து வாசம் செய்கிறார்கள். நெல்லிக்கனியை “ஹரிபலம்” என்றும் கூறுவார்கள். லட்சுமி குபேரருக்கு இந்த மரம் உரியதாகக் கருதப்படுகிறது. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தீய சக்திகள் அண்டாது. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை இருக்காது. நெல்லி மரம் வளர்ப்பதன் மூலமாக மஹாலக்ஷ்மியின் அருளைப் பெறலாம். அடுத்ததாக பசுவிற்கு தானம் செய்யவேண்டும். கோமாதாவை பூஜிப்பது குபேரரை பூஜிப்பதற்கு சமமாகும். முடிந்தவரை தினமும் பசுவிற்கு ஒரு வாழைப்பழமாவது கொடுங்கள்.

- Advertisement -

எந்த வீட்டு ஜாடியில் ஊறுகாயை நிரப்பி வைத்துள்ளோமோ அந்த வீடுகளில் மஹாலக்ஷ்மி இருப்பாள். ஊறுகாய் குபேரருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து வரவேற்பது நல்லது. அவர்கள் திரும்பி செல்லும் பொழுது மஞ்சள், குங்குமம், பூ, இவற்றை கொடுப்பதன் மூலம் நம் பூர்வ ஜென்ம பாவங்கள் குறையும்.

Turmeric

நம் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கவே கூடாது. அமங்கலமான சொற்களை பேசக்கூடாது. பெண்கள் எந்த குறையையும் எண்ணி கண்ணீர் விட்டு அழக்கூடாது. ஏதாவது பிரச்சனை என்று வரும்போது பெண்கள் சர்ச்சை(புலம்பல்) செய்து கொண்டு இருக்க கூடாது. ஏனென்றால் நாம் வாழும் வீடு கோவிலுக்கு சமமானது.

- Advertisement -

அடுத்ததாக நம் வீட்டில் எந்த ஒரு பொருள் இல்லை என்றாலும், ‘இல்லை’ என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது. இந்த பொருள் குறைவாக உள்ளது வாங்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். ஒரு சின்ன உதாரணம். ஏதாவது ஒரு தேவையை பூர்த்தி செய்து கொள்ள சில சமயம் நம் கைகளில் பணம் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் ‘என்னிடம் பணம் இல்லை என்று கூறக்கூடாது. ‘என்னிடம் பணம் குறைவாக உள்ளது’ என்றே தான் கூற வேண்டும். தயிர், அறுகம்புல், பசு இவற்றை தொடுதல் மூலம் நமக்கு நன்மை கிடைக்கும். நாம் நேர்மையாக இருப்பது, அடிக்கடி பெரியோர்களின் ஆசியைப் பெறுவது நல்லது.

money

பெண்கள் மூக்குத்தி, கம்பல், வளையல், மெட்டி இவற்றை அணியாமல் இருக்கக்கூடாது. தங்கத்தை மஹாலக்ஷ்மி அம்சம் என்று கூறுவார்கள். இதனால் இடுப்புக்கு கீழே தங்கத்தை அணியாதீர்கள். பெண்கள் மாதவிடாய் சமயங்களில் அவர்களின் நிழல் கூட கடவுளின் மேல் படக்கூடாது. குழந்தைகள் நோயாளிகள், முதியோர்கள் இவர்களிடம் நம் கோபத்தைக் காட்டக் கூடாது. இவர்களிடம் நம் பேச்சு மென்மையாகத்தான் இருக்க வேண்டும்.

சாதம், உப்பு, நெய் இவை மூன்றும் நம் கைகளால் பரிமாறப்பட கூடாது. கையால் பரிமாறப்பட்டால் அது கோ மாமிசத்திற்கு சமமானது என்று கூறப்படுகின்றது. பெண்கள் கையில் வளையல் இல்லாமல் சாப்பாட்டை பரிமாறக்கூடாது. அமாவாசை அன்று கண்டிப்பாக எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை அன்று உப்பினை வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் குப்பையை கூட்டி வெளியே கொட்டக்கூடாது பகலில் குப்பையை கூட்டி வீட்டின் மூலையில் ஒதுக்கி வைக்கக் கூடாது.

salt

திருமணமான பெண்கள் நெற்றியிலும் வகுட்டிலும் குங்குமம் வைக்காமல் இருக்கவே கூடாது. விளக்கு ஏற்றிய பின்பு உப்பு, தயிர், ஊசி இவற்றைத் தானமாக கொடுக்க கூடாது.
விருந்தினர் நம் வீட்டிலிருந்து சென்ற உடனேயே வீட்டை கூட்டி சுத்தம் செய்யக்கூடாது.

வீட்டு மருமகள் வெளியே சென்று விட்டாள் என்று சந்தோஷப்பட்டு நம் வீட்டில் வடை பாயாசம் செய்து உண்ணக்கூடாது. ஏனென்றால் நம் வீட்டு மருமகள் என்பவள் நம் வீட்டு மஹாலக்ஷ்மி. அவளை நினைத்து நாம் ஒருபொழுதும் பொறாமை கொள்ளக்கூடாது.

தினமும் காலையும், மாலையும் வீட்டு வாசலை கூட்டி சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். அதிகம் கிழிந்த துணிகளை உடுத்திக் கொள்ளக் கூடாது. நகங்களை வெட்டி வீட்டுக்குள் போடக்கூடாது. பெண்கள் ஒருபோதும் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது. தலைக்கு குளித்துவிட்டு ஈர துணியை தலையில் கட்டிக்கொண்டு பூஜை செய்யக்கூடாது.

kolam

வெற்றிலை, வாழை இலை, இவற்றை வாட விடக்கூடாது. வெற்றிலையில் சுண்ணாம்பு இல்லாமல் சாப்பிடக்கூடாது. உப்பை தரையில் சிந்தக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் போடக்கூடாது. நாம் அரிசியை கழுவும் போது கீழே சிந்தக் கூடாது. வாசல் படியின் மேல் நின்று பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது. உள்ளே நிற்க வேண்டும் இல்லை என்றால் வெளியில் சென்று விட வேண்டும்.

தந்நலம் இல்லாமல் எந்த ஒரு பெண் இவைகளையெல்லாம் நேர்மையாகவும் தைரியமாகவும் உண்மையாகவும் கடைபிடித்து வருகின்றாளோ அவர்களின் வீட்டில் நிச்சயம் லட்சுமிதேவி குடியிருப்பாள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் முறையாக பூஜை செய்வது எப்படி?

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -