செல்வக்கடவுளாக இருக்கக்கூடிய குபேரன் நிதிகளுக்கும், தனங்களுக்கும் காவலனாக இருக்கிறார். தனவானாக விளங்கக்கூடிய குபேர பகவான், வறுமையை நீக்கி வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொடுக்கக் கூடியவர். இவரை குளிர்வித்து, அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் மறைந்து, மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் குபேரனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
குபேரன் ஒரு அபிஷேக பிரியர் ஆவார். அதுவும் நாணயங்களால் அபிஷேகம் செய்தால், அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி உண்டாகும். நாணயங்களின் ஓசை, குபேரனுக்கு இன்னிசையாக இருக்கும். தனவான் குபேரன் அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கு சொந்தக்காரர். நம்மிடம் செல்வம் நிலைத்து இருக்க, குபேர அருள் தேவை. குபேரனுக்கு அபிஷேகம் செய்ய உகந்த சில பொருட்களுள் முக்கியமான பொருட்கள் பால் மற்றும் தயிர் ஆகும்.
பால் மற்றும் தயிர் சேர்த்து குபேரனுக்கு அபிஷேகம் செய்து வர வறுமை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, நம் வாழ்வில் வசந்தம் வீசத் துவங்கும். வறுமை நீங்கி செல்வ செழிப்பு உயர ஆரம்பிக்கும், இதனால் வசதி, வாய்ப்புகளும், பொருளாதார நிலையும் உயர ஆரம்பிக்கும். தயிர் என்பது சத்தான உணவு மட்டும் அல்ல, புனிதமானதும் கூட. கோமாதாவிலிருந்து கிடைக்கும் தயிர் மற்றும் பால் இரண்டுமே புனிதமானது. இவை இரண்டும் பசுமையானது.
குளிர்ச்சி பொருந்தியது தயிர். பவித்ரம் நிறைந்தது தயிர். பாலும் அப்படித்தான் பசுமையும், குளிர்ச்சியும், பவித்திரமும் நிறைந்தது. இவை இரண்டும் பூரணத்துவம் பெற்றது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து குபேரனுக்கு வியாழன் கிழமையில் அபிஷேகம் செய்தால், சகல நன்மைகளும் நமக்கு நடக்கும். வெள்ளிக்கிழமையில் லட்சுமி குபேரருக்கு இது போல பாலையும், தயிறையும் கொண்டு அபிஷேகம் செய்து வர நம் வீட்டில் கஷ்டம் நீங்கி வசதிகள் பெருகும்.
குபேரன் மந்திரம்:
“ஓம் யக்ஷாய குபேராய வைஶ்ரவணாய தனதானபதயே
தனதான ஸம்பத் மே தேஹி தபய ஸ்வாஹா”
மேற்கூறிய இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி குபேரனுக்கு பாலும், தயிரும் சேர்த்து வியாழக்கிழமையில் அல்லது வெள்ளிக்கிழமையில் லட்சுமி குபேரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். குபேரருக்கு வெள்ளி பொருட்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும், எனவே நீங்கள் விளக்கு ஏற்றும் விளக்கானது, வெள்ளியில் இருந்தால் ரொம்பவே விஷேஷமானது. வெள்ளி விளக்கு அல்லது வெள்ளி குபேர விளக்கு ஏதேனும் ஒன்றை வைத்து பூஜை செய்யுங்கள். குபேரன் ஊறுகாய் பிரியரும் கூட. எந்த வீட்டில் ஊறுகாய் அதிகமாக இருக்கிறதோ, அந்த வீட்டில் குபேர வாசம் அதிகரிக்கும். குபேரனுக்கு ஊறுகாய் காலியாவது பிடிக்காது எனவே வீட்டில் எப்பொழுதும் ஊறுகாய் வைத்திருங்கள்.
இதையும் படிக்கலாமே:
முருகன் கடவுள் மந்திரம்
பூஜை செய்யும் பொழுது ஒரு கிண்ணத்தில் நாணயங்கள், ஒரு கிண்ணத்தில் ரூபாய் நோட்டுகள், ஒரு கிண்ணத்தில் தங்கம், வெள்ளி பொருட்கள், உங்களிடம் இருக்கும் விலை உயர்ந்த நகைகள் எதுவாக இருந்தாலும் அவைகளை வையுங்கள். அது போல வீட்டில் வறுமை ஏற்படாமல் இருக்க, மூன்று அடுக்கு சிறிய பானைகளை வையுங்கள். அதில் முதல் பானையில் அரிசியும், இரண்டாவது பானையில் பருப்பும், மூன்றாவது பானையில் நாணயங்களையும் வைத்து குபேரனை வழிபட வேண்டும். இந்த பானையை குபேர பானை என்று கூறுவார்கள். இதில் ஐந்து அடுக்கு, ஏழு அடுக்குகளும் உண்டு. குறைந்த அளவிற்கு மூன்று அடுக்குகள் இது போல வைத்து குபேரனை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.