அனைத்து ராசிக்காரர்களும் இன்று சொல்லவேண்டிய குரு சுலோகம் என்ன?

gurul

பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு. இப்படி பல சிறப்புக்கள் மிக்க குரு பகவான் இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி நாளில் அனைத்து ராசிக்கார்களும் கூற வேண்டிய குரு சுலோகம் இதோ.

guru

குரு ஸ்லோகம்

“குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி”

இதையும் படிக்கலாமே:
கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான எளிய மந்திரம்

இந்த சுலோகத்தை சொல்வதன் மூலம் நமக்கு குரு பகவானின் அருள் கிடைக்கும் அதோடு கிரக தோஷங்களில் இருந்து அவர் நம்மை விடுவிப்பார்.

English Overview:
Here we have Guru slogam in Tamil. It is also called as Guru Bhagavan manthiram or Guru Bhagavan mantra in Tamil.