குபேரருக்கு பிடித்த ராசிக்கள்

good luck shine kuberar
- Advertisement -

செல்வத்திற்கு அதிபதி செல்வத்தை பாதுகாப்பவர் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர் என இத்தனை சிறப்புகளை பெற்றவர் தான் குபேர பகவான். இந்த குபேர பகவானின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் செல்வத்திற்கு தடையில்லாமல் நல்ல முறையில் முன்னேற்றம் அடைவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகளை பொருத்த வரையில் 12 ராசிக்கும் ஏதோ ஒரு கிரகமானது அதிபதியாக விளங்கும். அந்த கிரகங்களின் ஆசி எப்பொழுதும் அந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். அதைப் பொருத்தே அந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் தீமைகளும் கணிக்கப்படுகின்றன.

- Advertisement -

அந்த வகையில் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக் கூடிய குபேர பகவானுக்கு பிடித்த சில ராசிகள் உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் இவர் செல்வ வளத்தை வாரி வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை தான் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

துலாம்

குபேரர் ஆசி பெற்ற ராசிகளின் துலாம் ராசிக்காரர்களும் ஒருவர் அவருக்கு பிடித்தமான ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் பணவரவில் குறைவே இருக்காது. அந்த வகையில் இந்த ராசிக்காரர்களுக்கும் எப்பொழுதும் பணப்பற்றா குறை ஏற்படாது. இவர்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. செல்வத்திற்கும் அறிவுக்கு அதிபதியான குபேரன் அருள் இருப்பதால் இவர்களும் அத்தகைய தன்மையுடன் திகழ்வார்கள்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களும் குபேரரின் அருள் பெற்ற ராசிகளின் ஒருவர். இவர்கள் புத்தி கூர்மை அதிகம் கொண்டவர்கள். ஒரு வேலையை முடித்த பிறகு தான் அடுத்த வேலையை தொடங்குவார்கள். தாங்கள் மேற்கொண்ட செயலில் முழு முயற்சியுடன் விடாப்பிடியாக செயல்படுவார்கள். எப்பொழுதும் பணம் சேர்ப்பதில் இவர்கள் குறிக்கோளாக இருப்பார்கள். குபேரனின் ஆசி இவர்களுக்கு உள்ளதால் பணாமானது குறைவில்லாமல் இவர்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

விருச்சக ராசி

விருச்சக ராசிக்காரர்கள் பொதுவாகவே புத்தி கூர்மை அதிகமானவர்கள். வேலைகளை திட்டமிட்டு திறம்பட செய்து முடிப்பார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைத்துக் கொண்டே இருக்கும். இத்துடன் சேர்த்து குபேரரின் ஆசியும் உள்ளதால் இவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றி பெற்று திகழ்வதுடன் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்துடன் வாழ்வார்கள்.

- Advertisement -

மகரம்

இந்த ராசிக்காரர்களுக்கு பிறப்பிலே பணக்கார யோகம் உண்டு. கடின உழைப்பால் இவர்கள் அனைத்து இடத்திலும் முன்னேறி தனக்கான இடத்தில் தக்க வைத்துக் கொள்வார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு. அத்துடன் குபேரரின் ஆசியும் லக்ஷ்மி தாயாரின் அருளும் இவர்களுக்கு உள்ளதால் பண வரவில் ஒரு போதும் குறை இல்லாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சியால் அதிஷ்டம் பெரும் ராசிகள்

இந்தப் பதிவில் குபேரனார் செல்வ செழிப்போடு வாழக்கூடிய நான்கு ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த கணிப்புகள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவலின் படி தொகுக்கப்பட்டவையே என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -