கல்யாண வீட்டு காரக்குழம்பே தோத்து போற அளவுக்கு அட்டகாசமான சுவையில் குடைமிளகாய் காரக்குழம்பை இப்படி செஞ்சு பாருங்க. இனி காரக்குழம்புன்னாலே அது குடைமிளகாய் காரக்குழம்பு தான்.

kudai milagai kara kuzhambhu
- Advertisement -

குடைமிளகாயை வைத்து நாம் பல்வேறு ரெசிபிகளை செய்திருப்போம். பெரும்பாலும் அதை வைத்து கிரேவி போன்றவைகளை தான் செய்திருப்போம். அதையும் மீறி ப்ரைட் ரைஸ் போன்றவற்றில் சேர்த்து செய்திருப்போம். ஆனால் குடைமிளகாயை வைத்து காரக்குழம்பு என்பது பெரும்பாலும் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த குடைமிளகாய் வைத்து செய்யப்படும் கார குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ருசியான ஒரு காரக்குழம்பை எப்படி சுலபமாக செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை 

இந்த குழம்பு செய்ய முதலில் குடைமிளகாய் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு மூன்று நிறத்தில் உள்ள குடைமிளகாயும் வாங்கி நறுக்கி கொள்ளுங்கள். அப்போது தான் குழம்பு பார்க்க நன்றாக இருக்கும். அடுத்து இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளுங்கள் அதே போல் இரண்டு பெரிய பழுத்த தக்காளியும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குழம்பை தடுத்து விடலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கால் டீஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து விடுங்கள். அதன் பின் அரைத்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி விடுங்கள். பின்னர் ஒரே ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்த்த பிறகு நறுக்கி வைத்த குடைமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள்.

வெங்காயத்துடன் குடைமிளகாய் வதங்கிய பிறகு நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி விடுங்கள். அடுத்ததாக இதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள், மூன்று ஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை இந்த எண்ணெயிலே நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை மட்டும் ஊற்றி இந்த குழம்பை இரண்டு நிமிடம் வரை மூடி போட்டு கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

குழம்பு கொதிக்க ஆரம்பித்த உடன் மூடியை திறந்து ஒரு சிறிய நெல்லிக்காய் அளவுள்ள புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிய தண்ணீரை இதில் சேர்த்து ஒரு முறை கலந்து மீண்டும் கொதிக்க விடுங்கள். இப்பொழுது குழம்பு அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம் இரண்டு நிமிடம் வரை கொதித்தாலே போதும். எனில் ஏற்கனவே நாம் அனைத்தையும் வதக்கி கொதிக்க வைத்து விட்டு இப்போது புளியின் இந்த பச்சை வாடை போகும் வரை மட்டும் கொதித்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: அதிகப்படியான புரதச்சத்து நிறைந்த தானியமாக திகழக்கூடிய கம்பை பயன்படுத்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் லட்டுவை இப்படி தயார் செய்து கொடுங்கள்.

இரண்டு நிமிடத்தில் குழம்பு நன்றாக கொதித்த பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி குழம்பின் மீது தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் பார்த்ததும் கண்ணைக் கவரும் வகையில் குடைமிளகாய் காரக்குழம்பு தயாராகி விட்டது. இப்படி ஒரு முறை நீங்கள் காரக்குழம்பு வச்சிட்டீங்கன்னா இனி கார குழம்பு நாளை அது குடைமிளகாய் போட்டு தான் வைப்பீங்க கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -