ஒரே ஒரு குடை மிளகாய் இருந்தா சட்டுனு இந்த அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி பண்ணலாம். இத மட்டும் செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் இருக்காது.

kudai milagai rice
- Advertisement -

காலை எழுந்து என்ன சமைப்பது என்ற கவலை பெண்கள் அனைவருக்கும் இருக்கத் தான் செய்யும். அதுவும் வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத சமயத்தில் என்ன சமைப்பது என்று பைத்தியமே பிடித்து விடும். அப்படியான சமயத்தில் ரொம்பவே சுலபமாக இந்த லஞ்ச் ரெடி பண்ணலாம். இதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதை செய்ய அதிகம் நேரம் ஆகாது என்பதுடன் ரொம்பவே சுவையாகவும் இருக்கும்.

செய்முறை

இதை செய்வதற்கு முதலில் இரண்டு வெங்காயத்தை மெலிதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மூன்று பல் பூண்டு உரித்து சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை கீறி எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒரு குடை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் ஒரு டம்ளர் சாதத்தை வடித்து அது ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். சாதம் குழையாமல் உதிரியாக இருக்கும் படி வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சாதம் தாளித்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த பூண்டு சேர்த்து லேசாக நிறம் மாறி வந்தவுடன், வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் வதங்கிய பிறகு அரை டீஸ்பூன் தனியா தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு , அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா இவை அனைத்தையும் சேர்த்து கலந்த பிறகு, குடை மிளகாயும் சேர்த்து ஒரு முறை நன்றாக பிரட்டி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இந்த மசாலா அனைத்தும் குடை மிளகாயில் ஊறி வர வேண்டும்.

அதன் பிறகு ஏற்கனவே வடித்து வைத்து சாதத்தை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் சாதத்திற்கு உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பொட்டேடோ ஸ்நாக்ஸ் செய்முறை விளக்கம் (Potato snacks recipe in Tamil):

அவ்வளவு தான் சுவையான கடாய் சோறு ரெடி. இது அப்படியே கறி சோறு சுவையில் இருக்கும். குழந்தைகள் இந்த சுவையை இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள். தினமுமே செய்து கொடுத்தால் கூட அலுத்து போகாமல் சாப்பிடக் கூடிய ஒரு அருமையான ரெசிபி. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -