சுவையான உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் வித்தியாசமாக சுலபமாக இப்படி ட்ரை பண்ணி பாருங்க உங்க வீட்டில் எல்லோரும் உங்களை பாராட்டுவாங்க!

- Advertisement -

விதவிதமான ஸ்னாக்ஸ் வகைகளில் உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் எல்லா ஸ்னாக்ஸ் சுவையை விட, இந்த ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி நல்ல ஒரு டேஸ்ட்டை நிச்சயம் கொடுக்கும். அப்படியான ஒரு உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் எப்படி சுலபமாக வீட்டில் தயாரிப்பது? என்பதை தான் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 3, கான்பிளவர் மாவு – 2 டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை பொடி – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் தேவையான அளவிற்கு உருளைக் கிழங்குகளை வாங்கி அதை நன்கு சுத்தம் செய்து கழுவி பின்னர் குக்கரில் போட்டு தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மசித்து வைத்த உருளைக் கிழங்குடன் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு கான்பிளவர் மாவு சேர்க்க வேண்டும். அதே அளவிற்கு இரண்டு டீஸ்பூன் அரிசிமாவும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு வர மிளகாயை கிள்ளி போட்டு அரைத்து எடுத்தால் சில்லி ஃப்ளெக்ஸ் ரெடி! இதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கொத்து கருவேப்பிலையை எடுத்து எவ்வளவு பொடி பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடா உப்பு கால் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பையும் போட்டு நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

எல்லாம் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கெட்டியான பதத்திற்கு உருண்டையாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சுத்தமான பாலிதீன் கவர் ஒன்றை எடுங்கள். அதில் மேற்புறமாக கொஞ்சம் போல எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். பாலிதீன் கவரில் சரி பாதி இடத்தில் இந்த மாவை வைத்து மீதம் இருக்கும் கவறை அதன் மேல் மூடி சப்பாத்தி உருட்ட பயன்படுத்தும் கட்டையை வைத்து தேய்த்து கொடுங்கள். ஒரு செவ்வக வடிவில் மாவு உருட்டி எடுத்ததும் கவரை திறந்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த செவ்வக வடிவத்தை சிறு சிறு கட்லெட் போல சதுர சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்ற வைத்த அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பாயா டேஸ்ட்ல சூப்பரா ஒரு தக்காளி குருமாவ இப்படி ஒரு முறை செய்து பாருங்க, இது பாயா இல்லைன்னு சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க. இட்லி தோசை பூரி சப்பாத்தி என எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும்.

பின்னர் நீங்கள் சதுர சதுரமாக வெட்டி வைத்துள்ள ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து போட்டு நன்கு எல்லா புறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். இதே போல எல்லா துண்டுகளையும் வறுத்து எடுத்த பின்பு டொமேட்டோ சாஸ் அல்லது சில்லி சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ரெசிபி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -