குடை மிளகாயை வச்சு இப்படி ஒரு சுவையான கிரேவி செஞ்சு பாருங்க. பத்து சப்பாத்தியை கூட சலிக்காமல் சாப்பிடுவாங்க. சூப்பரான இந்த கிரேவியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

capsicum Gravy
- Advertisement -

சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு எப்போதும் செய்வதை போல தக்காளி தொக்கு, உருளைக் கிழங்கு, குருமா என செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக குடை மிளகாய் வைத்து இந்த ஒரு கிரேவியை செய்து பாருங்க சுவை பிரமாதமாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் குடை மிளகாய் கிரேவியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

குடை மிளகாய் கிரேவி செய்வதற்கு முதலில் 2 வெங்காயம், 2 குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் சேர்த்த பிறகு அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து இரண்டு நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் அதே பேனை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 1 துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு, இவைகளை சேர்த்து பாதி அளவு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து அதையும் வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது வதக்கிய வெங்காயம், தக்காளியுடன் 1/4 கப் புளிக்காத கெட்டித் தயிர் சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம் தயாரான பிறகு இப்பொழுது கிரேவியை தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் பேனை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய சூடான பிறகு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம் போட்டு பொரிய விடுங்கள். சீரகம் பொரிந்தவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்த பிறகு 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதங்கி வந்தவுடன், அதில் 1டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன் தனியாத் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு அனைத்தையும் சேர்த்த பிறகு அடுப்பை லோ பிளேமில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் வெங்காய, தக்காளி விழுதை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கிரேவி நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் முதலில் வதக்கி வைத்த வெங்காயம், குடை மிளகாவை இதில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 1/2 கப் பாசிப் பருப்பு இருந்தா போதும் நல்ல சுவையான, ஹெல்தியான லஞ்ச் ரெடி பண்ணிடலாம். வாங்க இந்த சிம்பிள் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கடைசியாக இறக்கும் போது 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி சேர்த்து ஒரு முறை கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விடுங்கள். சுவையான குடை மிளகாய் கிரேவி தயார். சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட இந்த கிரேவி ஒரு அருமையான சைட் டிஷ் இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் ஒருமுறை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -