சாப்பாடு என்றால் அதற்கு ஒரு குழம்பு,கூட்டு,பொரியல் என்று தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். சில நேரங்களில் ஏதாவது சிம்பிளாக செய்ய வேண்டும், அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டும் என்று தோன்றும் சமயத்தில் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும். அதே நேரத்தில் உடம்புக்கும் ஹெல்தியான ஒரு லஞ்சாக இருக்கும். வாங்க இதை இப்போ எப்படி ரெடி பண்றதுன்னு பார்க்கலாம்.
செய்முறை
முதலில் அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன், அரைக்கப் பாசிப் பருப்பை சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீயில் மாற்றி வைத்து பாசிப் பருப்பை நல்ல பொன்னிறம் ஆகும் வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த பாசிப் பருப்பபை சேர்த்து விட்டு 2 பல் பூண்டு, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, 5 காஞ்ச மிளகாய், 1/4 கப் தேங்காய், 1 கொத்து கருவேப்பிலை, 1/2 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு முறை மட்டும் மிக்ஸியை சுற்றி எடுத்து விடுங்கள்.
இப்போது துவையல் ஓரளவிற்கு அரைபட்டிருக்கும், அடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மறுபடியும் இந்த துவையலை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. அதே நேரத்தில் துவையலை மைய அரைக்கவும் கூடாது. இது கொஞ்சம் கொர கொரப்பாக இருந்தால் தான் சாதத்தில் போட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
அவ்வளவு தான் சுவையான பாசிப் பருப்பு துவையல் தயார். இந்த துவையலை தாளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. ஒரு சிலருக்கு தாளிப்பு சுவை இருந்தால் மிகவும் பிடிக்கும் அப்படியானவர்கள் இதை தாளித்து சாப்பிடலாம். இந்த பாசிப் பருப்பு துவையலை சுடச்சுட சாதத்துடன் போட்டு நெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
பொதுவாக துவையல் என்றால் வெறும் தேங்காய், மிளகாய் மட்டும் வைத்து அரைப்போம். இதில் பாசிப் பருப்பையும் சேர்த்து செய்து இருப்பதால் உடலுக்கும் ஆரோக்கியமாக, அதே நேரத்தில் அட்டகாசமான சுவையிலும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு விசில் விட்டால் போதும் சூப்பரான காலிஃபிளவர் குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுக்கும் ஏற்ற பக்கா சைடிஷ்.
நீங்களும் ஒரு முறை இந்த சிம்பிள் ரெசிபியை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. அது மட்டும் இல்லாமல் வெறும் ரசம் சாதம் தயிர் சாதம் கஞ்சு போன்றவற்றிக்கு இது பிரமாதமாக இருக்கும். இந்த துவையலை இட்லி, தோசை கூட வைத்தும் சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். துவையலே வேண்டாம் என்பவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.