குடும்பத்தில் தோஷமா? இறந்து போனவர்கள் நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறதா?

aanma
- Advertisement -

சிலரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். ஏதாவது துர்மரணங்கள் ரத்த பந்தத்தில் ஏற்பட்டிருக்கும். யாருக்கும் நிம்மதியே இருக்காது. பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, வேலை கிடைப்பதில் பிரச்சனை, ஆரோக்கியத்தில் அடிக்கடி தொந்தரவு என்று அந்த குடும்பத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும். காரணம் கேட்டால் யாருக்கும் ஒன்றும் தெரியாது. எல்லாமே சரியாக தான் இருக்கும். ஆனால் பிரச்சனைகள் தீராது. எதனால் இப்படி எல்லாம் தொடர்ந்து நிகழ்கிறது? என்று புரியாமல் தவித்து கொண்டிருப்பார்கள். இதை தான் ‘குடும்ப தோஷம்’ என்பார்கள். ஓட்டு மொத்த குடும்பமே தனி தனியாக சில பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருப்பார்கள். அப்படியான கஷ்டங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

home

உங்கள் வீட்டில் மட்டும் இல்லாமல் உங்களின் ரத்த தொடர்புடையவர்களின் இல்லத்திலும் விசாரியுங்கள். உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தொடர்பில் இல்லாதவர்களானால் தெரியாமல் இருக்கலாம். யாரேனும் விபத்தில் இறந்து போய் இருக்கிறார்களா? என்று பாருங்கள். நன்றாக உடல் திடத்துடன் இருந்தவர்கள் திடீரென எதிர்பாராத வகையில் இறக்க நேரிடுதல். வயதில் குறைந்தவராக இருக்கலாம். அவர் ஆரோக்கிய குறைபாடு காரணமாக இறந்து போய் இருக்கலாம். இப்படியான எதிர்பாராத மரணங்கள் ஏற்பட்டிருந்தால் அவர்களின் பெயரை குறித்து கொள்ளுங்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வயது மூப்பின் காரணமாக இறந்து போனவர்களை தவிர அனைவரின் பெயரும் குறித்து வைப்பது நல்லது.

- Advertisement -

குடும்ப தோஷம் நீங்கவும், வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சாதாரண வெள்ளைக் காகிதம் ஒன்றில் அந்த பெயர்களை பட்டியல் இட்டு எழுதிக் கொள்ளுங்கள். பின்னர் சிறியதாக மடித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் சிறிது மஞ்சள் குழைத்து அதில் வெள்ளை காட்டன் துணையை நனைத்து காய வைத்து மஞ்சள் துணியாக மாற்றிக் கொள்ளுங்கள். அந்த துணியில் மடித்து வைக்கப்பட்ட இந்த காகிதத்தையும், சிறிது மஞ்சலில் போட்டு எடுக்கப்பட்ட அட்சதை எனப்படும் அரிசியையும், வெற்றிலை மற்றும் பாக்கையும், விரலி மஞ்சள் ஒரு துண்டையும் போட்டு நன்றாக இறுக முடிந்து விடுங்கள். இந்த மஞ்சள் துணியில் முடிந்த முடிப்பை கொண்டு போய் பூஜை அறையில் வைக்கவும்.

manjal-mudichu

தினமும் பூஜை செய்பவர்களாக இருந்தால் பரவாயில்லை. வார பூஜை செய்பவர்கள் சிறிது காலத்திற்கு தினமும் பூஜை செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பூஜை செய்யும் போது அப்படியே இந்த முடிப்பிற்கும் தூப தீபம் காண்பித்து சாம்பிராணி போட்டு வாருங்கள். பூஜை முடிந்த பின் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்து வாருங்கள். துர்மரணம் ஏற்பட்ட உங்களது உறவினர் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த சிறு உதவுகள் செய்து வாருங்கள். கட்டாயம் இந்த பரிகாரம் மூலம் அவர்களது மனம் நிம்மதி அடைந்துவிடும். உங்கள் இல்லத்தில் அமைதி குடிகொள்ளும். பிர்ச்சனைகளற்ற வாழ்க்கையை தொடர்வீர்கள்.

tharpanam

ஒருவரது இல்லத்தில் நிறைவேறாத ஆசைகளுடன் எதிர்பாராத நேரத்தில் யாரேனும் இறக்க நேர்ந்தால் அவர்களது ஆன்மா அவ்வளவு சுலபமாக நிம்மதி அடைவதில்லை. அவரச காலத்தில் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கர்மாக்களையும் சரியாக செய்ய முடிவதில்லை. தான் இன்றி தன் குடும்பம் சிதறி போவதையோ, தவித்து கொண்டிருப்பதையோ பார்க்கும் அந்த ஆன்மா ஏதாவது ரூபத்தில் அவர்களை காக்க போராடும். நீங்கள் அந்த குடும்பத்தை பார்த்து கொள்வீர்கள் என்று உங்களை அந்த ஆன்மா நம்பியிருக்கும். அதை உணர்த்த தொடர் சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே இந்த பரிகாரம் மூலம் நீங்கள் அதனை நிவர்த்தி செய்யலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
தேங்காயை இப்படி புதைத்து வைத்தால் சனி பாதிப்பு நீங்குமா? எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kudumbathil amaithi nilava. Kudumba dosham. Kudumba dosham in Tamil. Kudumbathil nimmathi. Pithru dosham Tamil.

- Advertisement -