தேங்காயை இப்படி புதைத்து வைத்தால் சனி பாதிப்பு நீங்குமா? எப்படி?

sani coconut
- Advertisement -

கிரகங்கள் தான் மனிதனை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. நவ கிரகங்கள் இருப்பதை எந்த தொழில் நுட்பங்களும் இல்லாத போதே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மருத்துவம், ஆன்மீகம், கட்டிடக்கலை என்று அனைத்திலும் முன்னோடியாக இருந்தார்கள். சித்தர்கள் அறியாத மூலிகை மகத்துவம் ஏதும் இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு அனைத்து மூலிகையும் அதன் பயன்களையும் ஆராய்ந்து குறிப்புகளாக கொடுத்து சென்றுள்ளனர். இன்றைய அறிவியல் யுகத்தில் இல்லாத சிந்தனை ஆற்றல் அன்றைய சாதாரண மனிதனுக்கு இருந்தது என்பது வியக்க வைக்கும் உண்மை. மனிதனின் சிந்தனை ஆற்றல் மலுங்கி கொண்டே போக காரணம் உணவு முறைகளில், பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களே ஆகும்.

sinthu samaveli

சித்தர்கள் அருளிய சில விஷயங்கள் மிகவும் நுணுக்கமான அறிவியலையும் கொண்டிருக்கும். அவை எளிதில் எல்லாருக்கும் விளங்குவதில்லை. கிரகங்கள் மனிதனுக்கு தரும் பாதிப்புகள் நீங்க கோரக்கர் எழுதிய குறிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எளிமையானவையும் கூட. இவ்வகையில் சனி பகவான் பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் மேற்கொள்ளலாம் என்று இப்பதிவில் காணலாம்.

- Advertisement -

தேங்காய் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். சனிக்கிழமை அன்று இரவு வேளையில் தான் இதை செய்ய வேண்டும். சனி பகவானை மனதில் நினைத்து கொண்டு தேங்காயை முழுவதுமாக நார் உரித்து கொள்ள வேண்டும். பின்னர் அதன் மூன்று கண்களிலும் துளையிட்டு கொள்ள வேண்டும். துளையை சற்று பெரிதாகவே போடலாம். அதில் பாதியளவு தேங்காய் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் இருந்தால் சிறிது கீழே ஊற்றி விடுங்கள். பின்னர் அதில் நிரம்ப நிரம்ப சர்க்கரை போட்டு கொண்டே வர வேண்டும். தேங்காய் முழுவதும் சர்க்கரை கரைசல் இருக்கும். துளையிட்ட பாகத்தில் ஒரு வெற்றிலை கொண்டு மூடிவிடுங்கள். ஒரு கருப்பு பருத்தி துணியை விரித்து அதில் இந்த தேங்காயை வைத்து நன்றாக இறுக மூடிவிடுங்கள்.

coconut

இந்த பரிகாரம் செய்ததும் வீட்டிலிருந்து சற்று தொலைவான பகுதியில் சென்று அங்கிருக்கும் ஏதாவது ஒரு பெரிய மரத்தின் அடியில் பள்ளம் தோண்டி இதனை புதைத்து விட வேண்டும். காலை வேளை வரும்வரை மனதில் குழப்பங்கள் தோன்றும். அது இயல்பானது தான். கவலை கொள்ள தேவையில்லை. எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்த அனுமரின் நாமத்தை உச்சரித்துவிட்டு உறங்க செல்லுங்கள்.

- Advertisement -

sani-baghavan

சர்க்கரை போட்டு புதைத்தால் தோஷம் நீங்கிவிடுமா? என்று கேட்கலாம். ஆம். அதற்கு காரணம் இருக்கிறது. சனியின் ஆதிக்கம் வலுப்பெறும் சமயம் சில உயிர்களுக்கு உணவளிப்பதன் பலனாக துன்பங்கள் குறையும். இந்த பரிகாரம் செய்தபின்.. தேங்காய் புதைத்து இருக்கும் இடத்தை நோக்கி எலிகளும், பூரண்களும் இன்னும் சில நுண்ணுயிர்களும், எறும்புகளும் கூட செல்லும். அவைகள் அந்த தேங்காயை சாப்பிட சாப்பிட உங்களுக்கு இருக்கும் தோஷங்கள் நீங்கும் என்பது தான் இதில் உள்ள சூட்சமம். காரணமில்லாமல் எதுவும் சொல்லப்படுவதில்லை. ‘மந்திரம் கால் மதி முக்கால்’ என்பது போல் ‘பரிகாரங்கள் கால் அதை செய்பவரின் நம்பிக்கை முக்கால்’ என்பது தான் உண்மை. நம்பிக்கை இல்லாமல் எந்த பரிகாரத்தையும் செய்யவே கூடாது. முழு நம்பிக்கையுடன் பிரச்சினை தீர வேண்டிக்கொண்டு செய்ய வேண்டும். கட்டாயம் உங்கள் பிரச்சனைகள் தீர துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே
எந்தவிதமான சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமா? அருகம்புல் பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani bhagavan pariharam in Tamil. Sani bhagavan jothidam Tamil. Sani parigarangal Tamil. Sani pariharam Tamil. Sani bhagavan pariharam.

- Advertisement -