வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து சென்ற உடனேயே உங்கள் வீட்டில் சண்டை வருமா? நீங்க இந்த தவறை செய்தால், விருந்தாளிகள் வந்து சென்ற பின்பு சண்டை வரத்தான் செய்யும்.

fight
- Advertisement -

சில பேர் ரொம்பவும் வெகுளித்தனமாக இருப்பார்கள். யாரிடம் என்ன விஷயங்களை பேசுவது என்றே தெரியாது. நல்லது கெட்டது என்று எதுவும் இருக்காது. ஒளிவு மறைவு இருக்காது. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும் நண்பர்கள் வந்தாலும் அவர்களை முழு மனதோடு வரவேற்த்து உபசரித்து மீண்டும் திருப்பி அனுப்புவார்கள். ஆனால் வருபவர்களுடைய ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும். சில பேர் நாம் வாழும் வாழ்க்கையைப் பார்த்து சந்தோஷப்படலாம். சில பேர் நாம் வாழும் வாழ்க்கையை பார்த்து பொறாமை படலாம். இப்படி வீட்டிற்குள் வரும் விருந்தாளிகளின் மனநிலை நண்பர்களின் மன நிலைமையை எப்போதும் நம்மால் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியாது.

உங்க வீட்டுக்கு உங்களுக்கு பிடிச்சவங்க யார் வந்தாலும் சரி, உங்களுடைய நெருங்கிய நண்பர் நெருங்கிய உறவினர் யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் சில விஷயங்களை ஒளிவு மறைவாக தான் பேச வேண்டும். உங்கள் குடும்ப விஷயங்கள் அத்தனையையும் உளறி விடக்கூடாது. உங்கள் குடும்பத்தின் வருமானம், நீங்கள் எப்படி குடும்பத்தை நடத்துகிறீர்கள் என்ற ரகசியங்களை குறிப்பாக சொல்லவே கூடாது.

- Advertisement -

வீட்டிற்கு வருபவர்கள் துருவி துருவி கேட்கலாம். வெள்ளை மனசோடு நீங்களும் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் அதன் பின்பு தான் பிரச்சனையே தொடங்கும். உங்கள் வீட்டு விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்பவர்களுடைய மனதில் எந்த அழுக்கும் இல்லை என்றால் பிரச்சனை இருக்காது. ஆனால் சில வஞ்சகம் கொண்ட நெஞ்சம் கொண்டவர்கள் நீங்கள் வாழும் வாழ்க்கையை பார்த்துவிட்டு, அதை அவர்களுடைய மனதில் நினைத்து நினைத்துப் புழுங்கிக் கொண்டே இருந்தால், உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும்.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை பற்றி இப்படி சொல்வது சரியா சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை சிலரிடம் மறைத்து தான் ஆக வேண்டும். நீ எப்படி இருக்குன்னு கேட்டா, நல்லா இருக்கேன் என்ற வார்த்தையோடு முடித்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். பிறகு அவர்கள் தோண்டி துருவி கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் நாசுக்காக உங்களுடைய பேச்சை வேறு பக்கம் திசை திருப்பி விடுங்கள் வேலை முடிந்தது.

- Advertisement -

சரி இவ்வளவு மறைத்தும் நம் வீட்டை நோட்டம் பார்த்த கண்களின் மூலம் கண் திருஷ்டி வந்து நம் வீட்டிற்குள் சண்டை வர வாய்ப்புகள் உள்ளதே, இதற்கு என்ன செய்வது. உங்கள் வீட்டில் வந்த விருந்தாளிகள் வீட்டில் இருந்து கிளம்பிய உடனேயே வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு சிறிய தட்டில், ஒரு சூடம் வைத்து ஏற்றி விடலாம். அப்படி இல்லை என்றால் சிறிய மண் அகல்விளத்தில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள். எதிர்மறை ஆற்றல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் அல்லவா. அந்த ஆற்றல் அனைத்தும் இந்த நெருப்பின் மூலம் பொசுங்கிவிடும். உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகளை வராது. நல்லவர்கள் வந்தாலும் சரி கெட்டவர்கள் வந்து போனாலும் சரி இந்த பரிகாரத்தை செய்யும் வழக்கத்தை வைத்துக் கொண்டால் உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக நன்றாக இருக்கும்.

அடுத்தவர்கள் வந்து நம்முடைய வீட்டில் நம் குடும்ப விஷயங்களை தோண்டி துருவக் கூடாது அது அநாகரிகமான செயல் என்கிறோம் அல்லவா. நாமும் அடுத்தவர்களுடைய வீட்டிற்கு சென்றால் அடுத்தவர்களுடைய குடும்ப விஷயங்கள், அவர்களுடைய வருமானம் இவைகளைப் பற்றி தோண்டி துருவி ஆராயாமல் இருப்பதே நாகரிகம் என்ற இந்த ஒரு தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -