தினமும் ஒரு சண்டையால், உங்கள் குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டதா? சந்தோஷமான, சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கையை வாழ, இந்த தீபத்தை ஏற்றினால் போதும்.

deepam
- Advertisement -

சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமா? குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வருவதும் போவதுமாக தான் இருக்கும். ஆனால் சண்டை போடுவதையே சதா காலமும் வேலையாக வைத்திருக்கக் கூடாது. ஆனால் சில வீடுகளில் பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்சனை! பிரச்சனை! முதலில் தேவையற்ற விவாதங்கள், வாக்குவாதங்கள் என்று தொடங்கி அந்த பிரச்சனையே குடும்பத்தை இரண்டாக பிரிக்கும் அளவிற்கு சென்றுவிடும். வீட்டில் எந்த நேரமும் சண்டை சச்சரவுகள் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி நிலைத்திருக்காது. மகாலட்சுமி தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. சண்டை சச்சரவுகள் இல்லாத நிம்மதியான குடும்பத்தை பெற ஆன்மீக ரீதியான என்ன வழிபாட்டினைச் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

surya-chandran

ஒரு குடும்பத்திற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் சரியாக கிடைக்கவில்லை என்றாலும், சந்திர பகவானின் அனுக்கிரகம் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அந்த வீட்டில் குடும்ப பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆக சூரிய பகவானையும் சந்திர பகவானின் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு நம்முடைய வீட்டில் எந்த முறையிலான வழிபாட்டினை செய்யலாம்?

- Advertisement -

இந்த பரிகார தீபத்திற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். மஞ்சள் கயிறு, ஒரு மண் அகல் தீபம், தீபம் ஏற்றுவதற்கு கட்டாயமாக விளக்கெண்ணெய் வேண்டும். பஞ்சு திரியை எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற நூலை வாங்கிக் கொண்டாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளை நூலில் மஞ்சள் தடவி நிழலில் உலரவைத்து மஞ்சளாக மாற்றிக் கொண்டாலும் சரி.

manjal-kayaru

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பூலத் தட்டை வைத்துவிட்டு, அதன் மேல் மஞ்சள் கயிறை வட்டவடிவமாக சுற்றி வைத்து விடுங்கள். இந்த மஞ்சள் கயிறு மேல் அகல் தீபத்தை வைத்து, விளக்கெண்ணை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை குறிப்பாக அமாவாசை தினங்களில் தவறாமல் செய்து வர வேண்டும். அமாவாசை தினத்தன்று இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி குல தெய்வத்தையும் முன்னோர்களையும் வேண்டி, சூரிய பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக பவுர்ணமி தினத்தன்று இதேபோல் வழிபாட்டை உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளி பக்கத்திலோ அல்லது வீட்டிற்கு பின் பக்கத்திலோ இந்த வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் ஏற்றி வைக்கக் கூடிய இந்த தீப சுடரில் அந்த சந்திர பகவானின் கதிர்வீச்சு விழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (அமாவாசை தினத்தில் எப்படி தாம்புல தட்டின் மேல் மஞ்சள் கயிறை வைத்து, அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து, விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தீர்களோ அதேபோல் தான், பௌர்ணமி தினத்தன்றும் தீபம் ஏற்ற வேண்டும்.)

deepam

பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் இந்த தீப வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு மற்ற விஷயங்களை வீட்டில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. வீட்டில் அழுக்கு துணிகள் சேர்ந்தால், வீட்டில் சுவர்களில் விரிசல் விழுந்தால், நிலை வாசப்படி அசுத்தமாக இருந்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் கட்டாயம் வரும்.

எந்த பரிகாரங்களை செய்தாலும், வீட்டில் இருக்கும் உறவினர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -