- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுடும்ப சந்தோஷத்திற்கு பரிகாரம்

குடும்ப சந்தோஷத்திற்கு பரிகாரம்

- Advertisement -

குடும்பம் என்று இருந்தால் அதில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக ஒன்றாக இருக்கும் கூட்டு குடும்பத்தை சிதைத்து தனி குடித்தனம் செல்லக்கூடாது. உங்களுடைய குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா. உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காகத்தான்.

சில குடும்பங்களில் அங்காளி பங்காளி சொந்த பந்தம் என்று 50 பேர், 60 பேர் இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். அண்ணன் தம்பிக்குள் கூட ஒரு ஒற்றுமை இருக்காது. பேச்சுவார்த்தை இருக்காது. இப்படி நெருங்கிய சொந்த பந்தங்களோடு கூட விரோதம் இருக்கும்.

- Advertisement -

குடும்ப சந்தோஷத்திற்கு பரிகாரம்

இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கும் இருந்தால், குடும்பம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குடும்பத்திற்காக இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக பிரிந்த உறவுகளும் ஒன்று சேரும். உங்கள் குடும்பத்தில் வரும் அடுத்தடுத்த தலைமுறைகளும் ஒற்றுமையாக உறவுகளுடைய அருமை பெருமைகளை தெரிந்து ஒன்றாக வாழ்வார்கள்.

குடும்பம் என்றால் ஆல மர விழுது போல வேரூன்றி இருக்க வேண்டும். ஆலமர விழுது எப்படி அடுத்தடுத்த வேர்களை விட்டு பூமியில் வேரூன்றி பறந்து விரிந்து விசாலமாக வளர்கின்றதோ, அதேபோல நம்முடைய குடும்பமும் பறந்து விரிந்து விசாலமாக அடுத்தடுத்த தலைமுறைகள் தழைக்க வேண்டும் என்று நினைத்து, ஆலமர விதைகளை பூமியில் புதைத்து வைக்க வேண்டும். பழமையான சிவன் கோவிலுக்கு பக்கத்தில், அம்பாள் கோவிலுக்கு பக்கத்தில் காலியாக இடங்கள் இருந்தால் அந்த இடத்தில் ஆலமர விதைகளை உங்கள் கைகளால் புதைத்து வையுங்கள்.

- Advertisement -

நீங்கள் பிறந்த கிழமை, நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று, உங்கள் பிறந்தநாள் அன்று இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. குடும்ப தலைவன் தலைவி யார் கையாளும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த விதையை பூமியில் புதைக்கும் போது இந்த ஆலமரம் எப்படி வளர்ந்து விழுந்து விட்டு, பறந்து விரிந்து இருக்கிறது இதே போல எங்களுடைய குடும்பமும் வளர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளை எடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் சண்டை சச்சரவோடு இருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பல தலைமுறைகளுக்கு உங்களுடைய குடும்பம் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் என்பதும் நம்பிக்கையாக அந்த காலத்தில் பெரியவர்களால் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் கரைய பரிகாரம்

ஆகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவில் இடத்தில் இந்த விதையை புதைத்து வைத்து, முடிந்தால் தினமும் அந்த விதைக்கு தண்ணீர் ஊற்றி மரத்தை வளர்க்கத் தொடங்கி விடுங்கள். சொல்லவே வேண்டாம் உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக செழிப்பாக மேலோங்கி வளரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்