குடும்ப பிரச்சனை தீர சண்டைகள் அகல இந்த கொப்பரைத் தேங்காயை உங்கள் வீட்டின் நிலை வாசலில் வைத்து பாருங்கள்

fight
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் சண்டைகள் வருவது சாதாரண விஷயம்தான். குடும்பம் என்றாலே அதில் பிரச்சனை இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது பழமொழி. இதற்கேற்ப அனைத்து குடும்பங்களிலும் மனக்கசப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த சண்டைகள் கணவன் மனைவி, மாமனார் மாமியார், மாமியார் மருமகள் இப்படி யாரிடம் வேண்டுமானாலும் உருவாகிறது. ஆனால் இப்படி உருவாகும் சண்டைகள் சில நாட்களிலேயே சமாதானமாகி மறைந்து விட்டால் அது நல்லது. ஆனால் சில சண்டைகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முடிவு என்பதே இருக்காது. அதிலும் அமாவாசை நெருக்கம் என்றால் பல குடும்பங்களிலும் தேவையில்லாத பிரச்சனைகள் உருவெடுக்கும். இதுபோன்ற இன்னல்களையும், சண்டைகளையும் நமது இல்லத்தில் இருந்து முழுமையாக அகற்ற இந்த கொப்பரைத் தேங்காய் பரிகாரத்தை முறையாக செய்து பாருங்கள். இதனை தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றம் உண்டாகும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

family fight

வீடு என்பது எப்பொழுதும் தெய்வ கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைபவர்கள் இந்த வீட்டின் அமைதியையும், நல்ல சூழ்நிலையையும் பார்த்து மன அமைதி பெற வேண்டும். அப்படிப்பட்ட வீட்டில் தான் மகா லட்சுமி வாசம் செய்வாள். ஆனால் எப்போதும் சண்டை சச்சரவாகவும், இரைச்சலுமாக இருக்கின்ற இல்லங்களில் மகாலக்ஷ்மி அடியெடுத்தும் வைக்க மாட்டாள்.

- Advertisement -

அதிலும் முக்கியமாக வீட்டில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் மற்றவரை குறை கூறுவது, சண்டையிடுவது, புறம் பேசுவது போன்ற செயல்களை செய்து வந்தால் நிச்சயம் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைபெறாது. எனவே முதலில் நல்ல எண்ணங்களுடன் சிந்திக்க வேண்டும், பொய் பேசுதல் என்பது கூடாது, மற்றவரிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி அவர்களை இழிவுபடுத்தக் கூடாது.

women1

இப்படி வீட்டில் நிலவிக் கொண்டிருக்கும் எதிர்மறை சூழ்நிலைகளை விளக்குவதற்கு அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்த கொப்பரை தேங்காய் பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நாட்டு மருந்து கடைகளில் ஒரு கொப்பரை தேங்காய் வாங்கிக்கொள்ள வேண்டும். அதன் மேல் புரத்தை மூடி போன்று வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் சிறியதுண்டு படிகாரம் வாங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிதளவு நாய்க்கடுகும் வாங்க வேண்டும்.

- Advertisement -

இந்த கொப்பரைத் தேங்காயினுள் சிறிதளவு நாய்க் கடுகு, சிறிதளவு மஞ்சள்தூள், சிறிய துண்டு படிகாரம் இவை மூன்றையும் சேர்த்து விட்டு, கொப்பரைத் தேங்காயை மூடி ஒரு கயிறு போட்டு இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த தேங்காயை வீட்டின் நான்கு மூலையிலும் வைத்து எடுக்க வேண்டும். பிறகு இதனை வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்கவிட வேண்டும்.

naikadugu

மூன்று நாள் கழித்து அமாவாசை வந்தவுடன் வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த தேங்காய்க்கும் தீப, தூப ஆராதனை காண்பிக்க வேண்டும். பின்னர் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் இந்த தேங்காயை கழற்றி வலப்பக்கம் மூன்று முறை, இடப்பக்கம் மூன்று முறை என்று வீட்டின் முன் நின்று சுற்ற வேண்டும். பின்னர் இதனை ஓடுகின்ற ஓடையில் அல்லது மற்றவர் கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். இந்த பரிகாரத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வர வீட்டில் வரக்கூடிய பிரச்சனைகளும் சண்டைகளும் விரைவில் மறைந்துவிடும்.

- Advertisement -