குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் என்று நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும் பொழுது இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

fmly problem
- Advertisement -

குடும்பம் என்ற ஒன்று நம்முடைய பண்பாட்டில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. குடும்பத்தில் பலதரப்பட்ட உறவுகள் இருக்கும். அந்த உறவுகள் அனைத்தும் சுமூகமாக செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அந்த சூழ்நிலை அமையாது காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கும். அதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகளாக தொடரும் பொழுது குடும்பத்தில் நிம்மதி என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். அப்படி நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் பொழுது எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குடும்ப உறவுகளுக்குள் எந்த உறவுக்குள் எப்படிப்பட்ட சண்டை ஏற்பட்டாலும் அந்த சண்டை சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்தால் தான் குடும்பம் நிம்மதியாக இருக்கும். அப்படி சமாதானம் அடையாமல் ஒரு பிரச்சினை போக மறு பிரச்சனை என்று தொடர்ந்து சண்டைகளும், சச்சரவுகளும் வலுத்துக் கொண்டே செல்லும் பொழுது யாருக்குமே அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணமே வராது.

- Advertisement -

இந்த சூழ்நிலையை உருவாக்க கூடியவர் தான் ராகு பகவான். எவர் ஒருவர் ஜாதகத்தில் ராகுபகவானின் கெடுப்பலன்கள் அதிகமாக இருக்கிறதோ அவரின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்பது அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகு பகவானின் கெடு பலன்களை போக்குவதற்கு சில வழிபாட்டு பரிகார முறைகள் இருக்கின்றன.

இதற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது அருகம்புல். அருகம்புல்லை நாம் மாலையாக தொடுத்து அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சூட்டும்படி வழங்க வேண்டும். இந்த வழிபாட்டை நாம் திங்கட்கிழமை அன்று தான் தொடங்க வேண்டும். அவ்வாறு நாம் வழங்கிய அந்த அருகம்புல் மாலையை விநாயகர் வழிபாட்டை முடித்த பிறகு மறுபடியும் திரும்ப வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.

- Advertisement -

வாங்கி வந்த அருகம்புல் மாலையை தனியாகப் பிரித்து அருகம்புல்லை காய வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது நாட்கள் அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாற்றி மறுபடியும் திரும்பி வீட்டிற்கு எடுத்து வந்து அருகம்புல்லை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவக் கூடிய தெய்வமாக முருகரும் விநாயகரும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் வேண்டும். இந்த புகைப்படம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் புகைப்படமாக இருப்பதால் வீட்டில் ஒற்றுமை என்பது அதிகரிக்கும். இப்பொழுது 10வது நாள் காலையில் இந்த புகைப்படத்திற்கு நாம் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து விநாயகர் மற்றும் முருகனின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிக்கும் பொழுது அவர்களுக்கு நெய்வேத்தியமாக பானகத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

பூஜைகள் முடிந்த பிறகு அந்த பானகத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும். அன்று மாலை வீட்டிற்குள் ஒரு தூபம் போட வேண்டும். அருகம்புல்லை சாம்பிராணி தூபத்துடன் சேர்த்து போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து பிரச்சனைகள் நீங்கும். அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது குறையும்.

இதையும் படிக்கலாமே: நாளை மஹாளய அமாவாசை படையல் சாப்பாட்டில் இதை பொருளை மட்டும் சேர்க்கக் கூடாது.

இந்த எளிய அருகம்புல் பரிகாரத்தை நாமும் நம் வீட்டில் செய்து குடும்பத்துடன் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

- Advertisement -