கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை சரி செய்ய, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க, கற்பூரத்துடன் இந்த 2 பொருட்களை சேர்த்துவைத்து ஏற்றினால் போதும்.

fight

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதன் மூலமாக தான் வீட்டில் பிரச்சனைகள் வர தொடங்குகின்றது. கணவன் மனைவி மட்டும் அல்ல, எந்த உறவுகளாக இருந்தாலும் அவரவருக்கு என்று தனி சுதந்திரம், தனி உரிமை என்பது கட்டாயம் இருக்கும். ஒருவருடைய தனிச் சுதந்திரத்தில், தனி உரிமையில் அடுத்தவர்கள் மூக்கை நுழைக்கும் போது தான் பிரச்சனையே வர தொடங்குகின்றது. ஆகவே முடிந்த வரை அடுத்தவர்கள் விஷயத்தில் நாம் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. அவரவர் வாழ்க்கையில் அவரவர் செய்யும் செயல்கள், அவரவருக்கு நியாயமாகத் தான் தெரியும். அடுத்தவர்களுக்கு அநியாயமாக தெரிகின்றதே என்று, தங்களுடைய நியாயத்தை யாரும் மாற்றிக் கொள்வது கிடையாது. இப்போதைய சூழ்நிலை இதுதான்.

fight4

வீட்டில் சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் உறவுகள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து செல்வதை விட, வேறு வழி எதுவுமே கிடையாது. இதுதான் முதல் வழி. சரி, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, வீட்டில் மாமியார் மருமகள் பிரச்சனை, குழந்தைகள் சொல்பேச்சு கேட்க வில்லை, சதாகாலமும் வீட்டில் சண்டை சச்சரவு நிம்மதி கெடுகிறது எனும் பட்சத்தில் அதற்கு ஆன்மீக ரீதியாக சுலபமான முறையில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே தண்ணீரில் கரையும் பொருட்கள் காற்றோடு காற்றாக கரைந்துபோகும் பொருட்களுக்கு நம்முடைய கஷ்டங்களை கரைக்கக் கூடிய சக்தி உண்டு. கல் உப்பை திருஷ்டி சுத்தி போட்டு, தண்ணீரில் கரைத்தால் நம்முடைய கஷ்டங்கள் கரைந்து போகும். படிகாரத்தை திருஷ்டி சுத்தி நெருப்பில் போட்டாலும் அல்லது தண்ணீரில் போட்டாலும் எதிர்மறை ஆற்றல் கரைந்து போகத்தான் செய்யும். கற்பூரத்தை ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றி போட்டாலும் அந்த கற்பூரம் காணாமல் போவது போல நம்முடைய கஷ்டங்களும் காணாமல் போகும்.

padikaram

இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். அந்த வரிசையில் இன்று கற்பூரத்தை வைத்து ஒரு சக்திவாய்ந்த பரிகாரத்தை நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் பெரிய கட்டி கற்பூரத்தை வைக்க வேண்டும். மொத்தமாக உங்களுடைய வீட்டில் நான்கு மூலைகளில் நான்கு மண் அகல் விளக்குகளை வைத்து, அந்த அகல் விளக்கில் ஒவ்வொரு கட்டி கற்பூரம் வைத்து விடுங்கள். (மெழுகு கற்பூரத்தை வைப்பதினால் பயன் இருக்காது.)

- Advertisement -

வீட்டின் நான்கு மூலைகளில் வைக்கும் கற்பூரத்தை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. அது காற்றோடு காற்றாக காற்றில் கலந்து கரையக் கரைய, உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் இவைகளும் கரையத் தொடங்கும். கஷ்டங்களும் காணாமல் போகும். வீட்டில் அனாவசியமாக சண்டைகள் வருவது குறையும்.

annasipo

உங்களுடைய வீட்டில் ஏதோ ஒன்று சரியில்லை திடீரென்று பெரிய சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, உறவுகள் பிரியும் அளவிற்கு போகின்றது. ஒரு வீட்டில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை. சண்டை கைகலப்பு அளவிற்கு போகின்றது எனும் பட்சத்தில், உடனடியாக ஒரு சிறிய மண் அகல் விளக்கில் ஒரு கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த கற்பூரத்துடன், ஒரு அன்னாசிப் பூவை சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் விட்டு அந்த கற்பூரத்தை ஏற்றி உங்களுடைய வரவேற்பறையில் நடுப்பகுதியில் வைத்து விடுங்கள்.

karpuram

உங்கள் வீட்டிற்குள் கண்ணுக்குத் தெரியாமல் நுழைந்த ஏதோ ஒரு கெட்ட சக்தியின் மூலமாக தான் உங்கள் வீட்டில் பிரச்சனை வந்திருக்கிறது. அந்த சக்தியை அழிக்கக் கூடிய சக்தியும், உங்களது மனதை சாந்தப்படுத்த கூடிய சக்தியும், இந்த கற்பூரம் அன்னாசிப் பூவிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக பெரிய அளவில் நல்ல பலனை அடைய முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.