இந்த உலோகத்தால் காப்பு அணிந்து உள்ளீர்களா? வியக்க வைக்கும் பலன்கள் இதோ.

கைகளில் அவரவர் விருப்பப்படி காப்பு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிலர் அதில் இருக்கும் நன்மையை அறிந்தபின் அணிந்திருப்பார்கள். சிலர் அதை ஒரு அலங்காரத்திற்காக மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் காப்பு அணிவது ஒரு தைரியத்தை வரவழைக்கும் என்ற நோக்கத்துடன் அணிந்து கொண்டிருப்பார்கள். வெவ்வேறு உலகங்களில் காப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒவ்வொரு உலகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. எந்த உலோகத்தாலான காப்பை அணிந்தால் என்ன பலன் என்பதை இப்பதிவில் நாம் விரிவாக காணலாம்.

copper-bracelet

செம்பு காப்பு:
தாமிரம் அல்லது காப்பர் என்றழைக்கப்படுகின்ற செம்பு காப்பு அணிவதால் அபரிமிதமான பலன்களை பெறலாம். செம்பால் ஆன காப்பை பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலத்திலும் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உலோகமாகும். மற்ற உலோகங்களைக் காட்டிலும் செம்புக்கு தனித்துவமான சக்திகள் உண்டு. செம்பு காப்பு அணிவதால் உடலிலுள்ள எலும்புகள் தேய்மானம் அடைவது தடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை இளவயதில் ஏற்படுவதை தடுத்து விடலாம். உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் குறைபாட்டை சரி செய்ய துணை புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் தாமிரமும் ஒன்று. உணவு மூலம் அது நமக்கு கிடைக்காவிட்டாலும் செம்பு காப்பு அணிவதால் அதன் உறிஞ்சும் தன்மையை பொறுத்து தேவையான தாமிரச்சத்து நல்கும். சமநிலையற்ற தாமிர குறைபாட்டால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை சீர் செய்ய உதவும். சூரியனின் ஆற்றலை பெறவும் செம்பு காப்பு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க காப்பு:

gold-bracelet

தங்க காப்பு அணிவதால் நம் எண்ண அலைகளை சுலபமாக இறைவனிடம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. தெய்வ விக்ரகங்களுக்கு தங்க நகைகள் அணிவித்து அழகு பார்ப்பது இதற்காகத்தான். தங்கத்திற்கு அத்தகைய சக்தி உண்டு. குரு மற்றும் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெறுவதற்கு தங்க காப்பு அணியலாம். தங்கம் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது எனவே தான் தங்கத்தால் கால்களில் கொலுசு அணியக்கூடாது என்று கூறுகிறார்கள். அது மகாலட்சுமியை அவமதிப்பது போன்ற செயலாகும். தங்க காப்பு அணிந்து கொண்டு பிரார்த்திக்கும் வேண்டுதலானது சாத்தியமாகும்.

- Advertisement -

வெள்ளி காப்பு:

silver-bracelet

வெள்ளிக்கு உடலின் சூட்டை குறைத்து குளிர்விக்க உதவி புரிகின்றது. மனிதர்களின் உணர்ச்சியை கட்டுபடுத்தும் திறன் வெள்ளியில் உள்ளது. வெள்ளியில் காப்பு அணிவதால் அதிகப்படியான உணர்ச்சிகளை அடக்குபவராக இருப்பார்கள். காமம், கோபம், விரக்தி என்று அனைத்தும் கட்டுப்படுத்தபட்டு எதையும் சிந்தித்து செயலாற்றலாம். சுக்ரனின் ஆற்றலை பெற வெள்ளி காப்பு அணியலாம். வெள்ளி காப்பு மனிதனின் ஆயுளை கூட்டும் சக்தி பெற்றது.

இரும்பு காப்பு:

iron-bracelet

இரும்பால் காப்பு அணிபவர்கள் குறைவு தான். இரும்பு எதிர்மறை ஆற்றலை விலக்க வல்லது. துஷ்ட சக்திகள் நம்மை நெருங்குவதை தடுக்க முடியும். அந்த காலத்தில் வெளியில் செல்லும் பெண்கள் அல்லது அசைவ உணவை இரவில் கொண்டு செல்பவர்களை ஒரு இரும்பு துண்டை கையில் கொடுத்து விடுவார்கள். ருதுவான பெண்களுக்கும் இரும்பு துண்டு கொடுத்து வைக்கப்படும். அதற்கு காரணம் அவர்களை அந்த உலோகமானது கவசம் போல் இருந்து காத்து-கறுப்பை அண்ட விடாமல் பாதுகாக்கும். சனியின் ஆற்றலை பெற இரும்பு காப்பு அணியலாம்.

ஈய காப்பு:
உடலுக்குள் சேரக்கூடாத ஒரு உலோகம் ஈயம். ஈயம் தீமை தான் செய்யுமே தவிர நன்மை ஒன்றும் இல்லை. அதனால் அதன் பயன்பாடும் காணாமல் போனது. கேதுவின் ஆற்றலை பெற்று தரும் உலோகம் ஈயம் ஆகும். ஐம்பொன்னுடன் கலக்கும் போது ஈயம் ஆபத்தில்லை.

பஞ்சலோக காப்பு:

panjaloga-bracelet

பஞ்சலோகம் என்பது மேற்கண்ட இந்த ஐந்து உலோகங்களும் ஒன்று சேர்ந்து ஐம்பொன் என்ற அற்புத உலோகத்தை தருகின்றது. தெய்வ சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கபட்டது அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வழங்க வல்லது. அந்த காலத்தில் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்து வைக்கவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஐம்பொன்னால் கிடைக்கக்கூடிய பலன்கள் அளப்பரியது. ஐம்பொன்னால் செய்யபட்ட காப்பு அணிவதால் உடலில் உள்ள குறைபாடுகளை கலைத்து தேவையான சக்தி தருகிறது. பிராண சக்தி, பிரபஞ்ச சக்தி என அனைத்து சக்திகளையும் பஞ்சலோகம் பெற்று தரும். கிரக தோஷங்கள் நீக்கும். தீய சக்திகள் அண்டாது. சூரியனின் கதிர்கள் இதன் மீது பட்டால் அதன் சக்தி பன்மடங்காக பெருகுமாம்.

இதையும் படிக்கலாமே
பாவம் செஞ்சா சொர்க்கம் போக முடியாது என்பவரா நீங்கள்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Benefits of metal bracelets. Health benefits of metal bracelets. Sembu kappu uses in Tamil. Impon kappu benefits in Tamil.