நீங்கள் நினைத்த கோவிலுக்கு செல்ல முடியாமல் தொடர் தடைகள் வருகிறதா? இந்த தோஷம் கண்டிப்பாக இருக்கும், தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!

kula-dheivam-thirupathi-perumal
- Advertisement -

நாம் சில சமயங்களில் சில தெய்வங்களின் மீது நம்பிக்கை கொண்டு அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இருப்போம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த கோவிலுக்கு புறப்படும் பொழுது எல்லாம், ஏதாவது ஒரு தடையும், தடங்களும் வரும். கடைசி வரை அந்த கோவிலுக்கு செல்ல முடியாமல் போய்விடும். உதாரணத்திற்கு திருப்பதி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அங்கு செல்ல முடியாமல் தடைகள் வரக்கூடும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோவில்களுக்கு செல்ல முடியாமல் தொடர் தடைகள் வந்தால், அவர்களுக்கு இந்த தோஷம் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அது என்ன தோஷம்? இந்த தோஷம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? என்கிற ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

குலதெய்வ சாபம் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக எந்த கோவிலுக்கு நீங்கள் மனதார செல்ல நினைக்கிறீர்களோ, அந்த கோவிலுக்கு செல்ல முடியாத தடை ஏற்படுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த தடை ஏன் ஏற்படுகிறது? இதனால் விளையக்கூடிய விளைவுகள் என்னென்ன? எல்லோருக்கும் அவரவர்களின் குலத்திற்கு என்று ஒரு குலதெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தை வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு எவ்விதமான தடைகள், தடங்கல்கள் இருந்தாலும், துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும், அது மலை போல் வந்து பனி போல் நீங்கும். ஆனால் பணி போல் இருக்கும் பிரச்சனையும் மலை போல் வருவதற்கு இந்த தோஷம் இருப்பது தான் காரணமாக இருக்கிறது.

தொடர் தடைகள், தீராத பிரச்சனைகள், வறுமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய இந்த குலதெய்வ தோஷம் எதனால் ஏற்படுகிறது? நீங்கள் உங்களுடைய குலதெய்வத்தை விடுத்து மற்ற இஷ்ட தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. உங்களுடைய குலதெய்வம் மாரியம்மன் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த மாரி அம்மனை வழிபடாமல் உங்களுடைய இஷ்ட தெய்வமான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையுடன் இருந்தால், உங்களுக்கு இந்த குலதெய்வ தோஷம் ஏற்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் இதை பற்றி காண்பித்து இருப்பார்கள். அவர்களுடைய குலதெய்வமான அம்மன் கோவிலுக்கு செல்வதை காட்டிலும், பணக்கார கடவுளாக இருக்கக்கூடிய திருப்பதி வெங்கடாஜலபதியை எப்படியாவது ஒருமுறை தரிசித்து விட மாட்டோமா? என்று அவர்கள் முனைப்புடன் இருப்பார்கள். இதனால் கோபமடைந்த குலதெய்வம் அவர்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகளையும், வறுமையையும் கொடுத்துக் கொண்டிருக்கும். இதே நிலை தான் உண்மையிலும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

அவரவர்க்கு என்று இருக்கக்கூடிய குலதெய்வம் நம்முடைய குடும்பத்தை காக்கும் அருணாக விளங்குகின்றது. எனவே நம் குலதெய்வத்தை விடுத்து மற்ற தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவ்வளவு நல்ல விஷயம் அல்ல! எல்லா கடவுளுக்கும் ஒரு சக்தி உண்டு. அது போல குலதெய்வத்திற்கு நம் குலத்தை காக்கக்கூடிய அதி அற்புத சக்தி உண்டு என்பதால் நம் பிரச்சனைகள் யாவும் தீருவதற்கு குலதெய்வம் ஒன்றே முதல் கடவுளாக விளங்குகிறது. எனவே குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு இஷ்ட தெய்வ வழிபாட்டை தொடர்வது தான் முறையாகும். எக்காரணத்தை கொண்டு குலதெய்வத்தை மறந்து விட்டு இஷ்ட தெய்வத்திற்காக நீங்கள் முனைப்பு காட்டாதீர்கள். இது உங்களுக்கு தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்துமே தவிர, உங்கள் பிரச்சினையை தீர்க்காது.

- Advertisement -