குலதெய்வம் நிரந்தரமாக வீட்டில் தங்க வழிபாடு

kula dheivam dheepam
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடுகளில் அது குலதெய்வ வழிபாடு தான் இந்த வழிபாடானது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே காலம் காலமாக பின்பற்றி வருவது ஒருவர் எத்தனை தெய்வத்தை வழிபட்டாலும் எத்தனை ஆலயத்திற்கு சென்றாலும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது என்பது நம் முன்னோர் கருத்து அது உண்மையும் கூட.

அந்த வகையில் இன்றளவும் பல குடும்பங்களில் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் துன்பப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கோ குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கிறார்கள் எப்படி ஆனவர்கள் தங்களுடைய குல தெய்வத்தை தங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வைத்துக் கொள்ள ஒரு எளிமையான வழிபாட்டு முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குலதெய்வம் நிரந்தரமாக நம் இல்லத்தில் தங்க

எந்த வழிபாட்டை குலதெய்வம் எதுவென தெரிந்தவர்கள் அந்த தெய்வத்திற்குரிய வழிபாடு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் வெள்ளி செவ்வாய் போன்ற தினங்களை தேர்ந்தெடுத்து துவங்குங்கள். குலதெய்வத்தை தான் நமக்கு தெரியாது அன்றி குலதெய்வத்திற்கு நம்மை நிச்சயம் தெரியும்.

இந்த வழிபாடு செய்யக்கூடிய நாளில் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து பூஜையறையில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபமானது மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த மண் அகலை ஒரு சிறிய பித்தளை தட்டு அல்லது மண் தட்டு இதன் மேல் வைத்து தான் வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தையே உங்கள் குல தெய்வமாக மனதில் பாவித்து கொள்ளுங்கள். குலதெய்வம் தெரியாதவர்களும் இந்த தீபத்தியே குல தெய்வமாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வ படம் வைத்திருப்பவர்கள் படத்தின் முன்பாக இந்த தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபத்தை பார்த்து வணங்கியவாறு இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள்.

ஓம் ஹ்ரீம் குலதேவதாப்யோம் நமஹ
என்ற இந்த மந்திரத்தை 36 முறை சொல்ல வேண்டும். இதே போல் 11 நாட்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி தீபத்தின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் போது நம் மனதில் என்னுடைய குலதெய்வம் இந்த தீபத்தில் வந்து அமர வேண்டும் என்று மனதார சங்கல்பம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த 11 நாள் பூஜைலே உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் இன்னும் அதிக பலனை பெறலாம். இந்த வழிபாடு நாம் தொடர்ந்து செய்வதாக இருந்தால் ஏற்றப்படும். இந்த மண் அகலை என்ன காரணம் கொண்டும் தண்ணீர் ஊற்றி கழுவக் கூடாது. ஏதேனும் துணி வைத்து துடைத்துப் பிறகு மீண்டும் விளக்கு ஏற்ற வேண்டும்.

ஒரு வேளை தெரியாமல் விளக்கை கழுவி விட்டாலோ அல்லது கைத்தவறி கீழே விழுந்து விட்டாலும் மறுபடியும் இதே போல பதினொரு நாட்கள் மந்திரத்தை சொல்லி வழிபட்ட பிறகுதான் தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்தை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது ஒன்று அத்தகைய எளிய காரியம் கிடையாது அதற்கு நாம் முழு மனதுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பணத்தை வைக்கும் முறை

அப்படி வழிபாடு செய்து குலதெய்வம் நம் இல்லம் தேடி வந்து விட்டால் அதன் பிறகு நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் காணாமல் போய் விடும். இந்த வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து குலதெய்வத்தின் அருளோடு நல்ல முறையில் வாழுங்கள்.

- Advertisement -