குலதெய்வம் 1 வாரத்தில் வீட்டிற்கு வர சிகப்பு துணியில் இதை மட்டும் செய்து வைத்தால் போதுமே! குலதெய்வம் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள இதை செய்யலாம்.

kula-dheivam-kari-sambrani
- Advertisement -

நம் குலத்தைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற தெய்வங்களை காட்டிலும் முதல் உரிமை குலதெய்வத்திற்கு உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் குலதெய்வ அருளோடு செய்தால் அது நிச்சயம் தோல்விகளை தழுவாது என்பது நம்முடைய மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குலதெய்வம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும், குலதெய்வ சாபம், தோஷம் இருப்பவர்கள் அதை நிவர்த்தி செய்து, ஒரே வாரத்தில் உங்கள் வீட்டிற்கு உங்கள் குலதெய்வத்தை அழைக்கவும் செய்யக்கூடிய இந்த அற்புதமான பரிகாரத்தை பற்றிய ஆன்மிக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குலதெய்வ அருள் இருப்பவர்கள் இல்லத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எவ்வளவுதான் கஷ்டங்கள், துன்பங்கள் வந்தாலும், அது வந்த வழியே திரும்பி சென்று விடும். ஒரு கதவு மூடினாலும், இன்னொரு கதவு திறந்திருக்கும். இது போல இருப்பவர்களுக்கு குலதெய்வ அருள் இருப்பதாக அர்த்தம் ஆகும். குலதெய்வ அருள் இருக்கும் இல்லத்தில் துர்வாசனை இருக்காது. எப்போதும் வீட்டிற்குள் நுழைந்த உடன் நல்ல ஒரு நேர்மறையான ஆற்றலும், நறுமணமும் வீசும். இந்த இடத்தில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம்.

- Advertisement -

குலதெய்வத்தை கேட்டு தான் எமதர்மராஜா நம்முடைய உயிரை பறிப்பாராம். அந்த அளவிற்கு குலதெய்வம் நம்முடன் இருந்து நம்மை பாதுகாக்கும் அரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவே குலதெய்வ விஷயத்தில் சற்று எப்பொழுதும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தீராத பிரச்சினைகள் தீர அடிக்கடி உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.

குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வையுங்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய பாக்கியத்தை அவரே கொடுப்பார். சில பேருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும், இவர்கள் அவர்களுடைய முன்னோர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அப்படி அல்லா விட்டால் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய குலதெய்வம் எது? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிகப்பு நிற சதுரமான துணியை விரித்துக் கொள்ளுங்கள். பட்டு துணியாக இருந்தாலும், காட்டன் துணியாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் உங்கள் வீட்டில் இருக்கும் மண் சிறிதளவு எடுத்து சேருங்கள். அதனுடன் அடுப்புக்கரி கொஞ்சம், சாம்பிராணி கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறிதளவு மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் விபூதி ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். பின்னர் இதை ஒரு மூட்டையாக இறுக்கமாக பொருட்கள் எதுவும் வெளியில் வராதவாறு கட்டிக் கொள்ளுங்கள்.

செம்பு அல்லது பித்தளை ஆணி ஒன்றை உங்கள் வீட்டின் தலை வாசலுக்கு மையப் பகுதியில் அடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் இந்த மூட்டையை இறுக்கமாக கட்டி தொங்க விடுங்கள். இது உங்களுடைய தலையில் இடிபடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு தினமும் தீப, தூப ஹாரத்தி காண்பித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். எவ்வளவு கட்டுகள் இருந்தாலும் அதை உடைத்துக் கொண்டு வரக்கூடிய சக்தி இந்த ஒரு எளிய பரிகாரத்திற்கு உண்டு. இதை வீட்டில் இருக்கும் தலைவர் அல்லது தலைவி செய்வது ரொம்பவே நல்லது. மேலும் குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது விரைவிலேயே உங்களுடைய குலதெய்வம் யார்? என்பதை ஏதாவது ஒரு விதத்தில் உங்களுக்கு அடையாளப்படுத்திவிடும்.

- Advertisement -