குலதெய்வம் வீட்டிற்கு வர சொல்ல வேண்டிய மந்திரம்

god
- Advertisement -

ஒரு வீட்டிற்கு குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். பெண்கள் திருமணம் ஆகி தன்னுடைய கணவர் வீட்டிற்கு சென்றவுடன், கணவன் வீட்டு குல தெய்வத்தை நிச்சயம் வழிபாடு செய்ய தொடங்கிவிட வேண்டும். இது அவர்களுடைய குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நன்மையை கொடுக்கக்கூடிய விஷயமாக இருக்கும்.

உங்கள் வீடு ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கிறது. சில வீடுகளில் குலதெய்வத்தின் ஆசி இல்லை என்று சொல்கிறார்கள். குலதெய்வத்தை யாரோ கட்டி போட்டு விட்டார்கள் என்று சொல்வார்கள். குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வர முடியாமல், நிலை வாசலிலேயே நின்று தவிக்கிறது என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

இப்படி எந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தாலும் சரி, பின் சொல்லக்கூடிய வழிபாட்டை செய்தால் சீக்கிரமாக குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து தங்கும். உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கபோகும் அந்த வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்க

தினமும் காலையில் பெண்கள் வீட்டு வாசலை கூட்டி கோலம் போட்டுவிட்டு, நிலை வாசலில் குலதெய்வத்தை நினைத்து ஒரு விளக்காவது ஏற்றி வையுங்கள். பிறகு பெண்கள் நிலை வாசலுக்கு உள்பக்கம் நின்று கொள்ள வேண்டும். உங்கள் பார்வை நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் இருக்க வேண்டும்.

- Advertisement -

நம் வீட்டிற்குள் இருந்து கொண்டு, விருந்தாளிகளை அழைக்க வேண்டும் என்றால் எப்படி நிற்போம், அதேபோல நிற்கவும். இப்படி நின்றபடி பெண்கள் குலதெய்வத்தின் நாமத்தை இரு கை கூப்பி 21 முறை சொல்லுங்கள். பிறகு ‘ஓம் ஓம் என் குலதெய்வமே வர வர சுவாஹா’ என்ற மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு நிலை வாசல் கதவை சாத்த கூடாது.

அப்படியே உங்கள் வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி மீண்டும் எங்கள் குலதெய்வம் வீட்டிற்குள் வரவேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தால் அந்த குலதெய்வத்திற்கு ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் போட்டு, துளசி இலைகளை போட்டு தீர்த்தமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

குடும்பத் தலைவி இந்த பரிகாரத்தை செய்யும் போது குலதெய்வ கட்டு உடையும். வாசலில் நின்று கொண்டிருக்கும் தெய்வம் வீட்டிற்குள் நுழையும். அப்படி ஒரு சக்தியை கொடுக்கக் கூடிய வழிபாடு தான் இது. 48 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்க இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: திருமணத்தடை நீங்க சக்தி வாய்ந்த பரிகாரம்

உங்களுடைய குடும்பத்திற்கு குலதெய்வ சாபம், குலதெய்வ கட்டு எது இருந்தாலும் அதை உடைத்து குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தர இந்த எளிமையான வழிபாடு வழி வகுத்து கொடுக்கும் என்பதுதான் நம்பிக்கை. தேவைப்படுபவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாடுகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -