- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபாம்புகளை நீங்கள் அடிக்கடி பார்க்கிறீர்களா? அப்படின்னா இதை நீங்க செய்ய தவறி இருக்கலாம். உடனே அதை...

பாம்புகளை நீங்கள் அடிக்கடி பார்க்கிறீர்களா? அப்படின்னா இதை நீங்க செய்ய தவறி இருக்கலாம். உடனே அதை செய்து முடிச்சிடுங்க.

- Advertisement -

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று ஒரு பழமொழி உண்டு படையே நடுங்கும் இந்த பாம்புக்கு நாமெல்லாம் எம் மாத்திரம். பாம்பு நம்மை ஏதாவது செய்கிறதோ இல்லையோ செய்து விடும் என்கிற பயமே பாம்பைப் பற்றி ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த பாம்பு நம் கண்களில் அடிக்கடி தென்படுவதற்கு சில காரணங்கள் உண்டு அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு.

முதலில் நாம் வசிக்கும் வீடு கட்டுவதற்கு இதற்கு முன் அந்த பாம்புகள் வசித்து இருப்பிடமாக இருந்தால் எத்தனை காலம் ஆனாலும் கட்டாயமாக அதன் இருப்பிடத்தை நினைவில் கொண்டு தேடி வரும் என்பது ஒரு காரணம். அடுத்தது நம் வீட்டை சுற்றி பாம்பு அடைய நிறைய செடி, கொடிகள் அடைப்புகள் போன்றவைகள் இருந்தாலும் இது போன்று இடங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நான் இருக்கும் இடத்தை சுற்றி வயல்வெளிகள் போன்றவை இருந்தாலும் எலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தால் இந்த பாம்புகளின் நடமாட்டமானது இருக்கத்தான் செய்யும்.

- Advertisement -

இவை எல்லாம் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதற்கான ஒரு பொதுவான காரணங்கள். ஆனால் ஆன்மீக ரீதியாக பார்த்தால் இந்த பாம்புகள் அடிக்கடி நம் கண்ணில் தென்பட்டாலோ நாம் இருப்பிடம் தேடி வந்தாலும் அதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அந்த காரணங்கள் என்னவென்று தொடர்ந்து இந்த பதிவில் பார்ப்போம்.

நாம் ஏதாவது தெய்வத்தை வணங்கும் போது இதை நல்ல படியாக முடித்து தந்தால் உங்களுக்கு இதை செய்கிறேன் என்று வேண்டுதல் வைக்கும் முறை நம் வழக்கத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே அது போன்று வேண்டுதல் வைத்து அதை நாம் செய்யாமல் மறந்து விட்டால் அந்த வேண்டுதலை நாம் செய்ய நினைவு கூற இந்த பாம்புகள் நம் கண்ணில் அடிக்கடி தென்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல நம் முன்னோர்கள் வழிபட்ட வழிபாடு முறைகளில் நாம் சிலவற்றை மறந்து விட்டாலோ இல்லை செய்யாமல் விட்டுவிட்டாலோ அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பாம்புகள் நம் கண்ணில் அடிக்கடி பட்டு அந்த வழிபாடை திரும்ப நாம் செய்ய வேண்டும் என்பதை நமக்கு நினைவு படுத்துவதற்காவும் பாம்புகள் நம் கண்ணில் படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இன்னும் சில பேரை பார்த்தீர்கள் என்றால் குலதெய்வம் ஒன்று இருப்பதையே மறந்திருப்பார்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்வதையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளையும் செய்யாமல் இருப்பார்கள் இதைப் போன்ற சமயங்களிலும் அதேபோல் சிலருக்கு குலதெய்வ கோவில் செல்லக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இது போன்றவர்களும் தங்களை தேடி வர வேண்டும் என்பதற்காக இப்படி பாம்புகள் வடிவில் வந்து தங்களை ஞாபகப்படுத்துவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று நாம் சில நேரங்களில் நாம் சிந்தனைகளை புத்தியை தவறான பாதையில் செலுத்தி தவறான எண்ணங்களையும் இல்லை மனம் ஏதோ ஒரு சஞ்சலத்தில் ஆட்பட்டுக் கொண்டிருந்தாலும் இந்த செய்கையால் நம் குடும்பத்திற்கு கேடு வரும் சமயங்களில் நம் குலதெய்வமே இப்படி பாம்பு உருவத்தில் நம் முன் தோன்றி இதை மாற்றிக்கொள்ள நமக்கு அறிவுறுத்துவதற்காகவும் இப்படி நம் கண்ணில் படும் என்றும் சொல்லப்படுகிறது.

பாம்புகள் அடிக்கடி நம் வீடு தேடி வராமல் இருக்க ஏனென்றால் குழந்தைகள் ஏன் பெரியவர்கள் முதற் கொண்டு அனைவரும் இதற்கு பயப்படத் தானே செய்வார்கள் அப்படி தொடர்ந்து வராமல் இருக்க பசும்கோமியத்தில் கொஞ்சம் மஞ்சள் தெளித்து வீட்டை சுற்றி தெளித்து வந்தால் அந்த வாடைக்கு இந்த பாம்புகள் வீட்டுக்கு வராது.

பாம்பு அடிக்கடி நம் கண்ணில் படுவதற்கான காரணங்களும் நம் வீட்டிற்கு வருவதற்கான காரணங்களும் வராமல் இருப்பதற்கான வழியும் தெரிந்து கொண்டோம் ஆனால் அப்படி உங்கள் கண்ணில் அடிக்கடி பட்டுக்கொண்டே இருந்தால் நீங்கள் இதில் ஏதாவது ஒன்றை செய்ய மறந்து விட்டீர்களா என்னை யோசித்து அந்த வேண்டுதலையோ வழிபாட்டையும் நல்ல முறையில் செய்து உங்கள் குடும்பத்துடன் நல்ல ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுங்கள்.

சற்று முன்