நம்முடைய குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்களை கூட உடனடியாக தீர்த்து வைக்கக் கூடிய சக்தி அந்த குல தெய்வத்திற்கு மட்டும்தான் உண்டு. குல தெய்வத்தை வழிபாடு செய்ய வில்லை என்றால் நமக்கு உதவ மற்ற தெய்வங்கள் கூட வராது என்று சொல்லுவார்கள். அது உண்மைதான். குல தெய்வத்தை நாம் மறந்து விட்டோம் என்றால், மற்ற தெய்வங்கள் நம்மை மறந்து விடும். ஆக ஒரு குடும்பம், குலதெய்வ வழிபாட்டை மறக்க கூடாது. காலமும் நேரமும் நமக்கு எதிராக செயல்படும் போது, ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்முடைய கெட்ட நேரம் நம்முடைய மனதிலிருந்து குலதெய்வ நினைப்பை நீக்கிவிடும்.

குல தெய்வத்தை நாம் சில காலம் நினைவு கூறாமல் விட்டு விட்டால், அந்த இடைப்பட்ட காலத்தில் நம்மை அறியாமலேயே பல சிக்கல்களில் சிக்கி இருப்போம். அதன் பின்புதான் நமக்கு நினைவிற்கு வரும், நம் குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டோமே என்று! இதுவும் நம்முடைய கெட்ட நேரம் செய்யும் சதி தான். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து குலதெய்வத்தை ஒரு நொடி பொழுது நினைக்க மறக்காதீர்கள்.
சரி, தீராத கஷ்டங்கள் தீராத துன்பங்களில் சிக்கிக் கொண்டீர்கள். அதிலிருந்து விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக சில பேருடைய வீட்டில் குலதெய்வம் வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்று கொண்டிருக்கின்றது என்றும் சொல்லுவார்கள். அந்த தெய்வம் வீட்டிற்குள் வருவதற்கு ஏதோ ஒரு தடை, ஏதோ ஒரு கட்டு உள்ளதாகவும் சொல்லுவார்கள். இதை உடைத்தெறிந்து குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைக்க என்ன வழி.

இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு தான் அது. நிறைய பேருக்கு இலுப்பை எண்ணெய் வீட்டில் தீபம் ஏற்றலாமா என்ற சந்தேகம் இருக்கிறது. கூட்டு எண்ணெயில் கலக்காமல் தனியாக சுத்தமான இலுப்பை எண்ணெய்யை, நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்து அந்த எண்ணெயில் குலதெய்வத்தை நினைத்து தாராளமாக தீபம் ஏற்றலாம். தவறு கிடையாது.
உங்கள் கோரிக்கையை குலதெய்வத்திடம் வைத்து 48 நாட்கள் தொடர்ந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில், 2 மண் அகல் தீபங்களில் இலுப்பை எண்ணெயை ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். உங்களுடைய கோரிக்கை எப்பேர்ப்பட்ட கோரிக்கையாக இருந்தாலும் அந்த குலதெய்வம் 48 நாட்களில் நிறைவேற்றித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. (எக்காரணத்தை கொண்டும் இந்த இலுப்பை எண்ணெயை வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கில் ஊற்றி ஏற்றக் கூடாது என்றும் சொல்கிறது சாஸ்திரம்.)

உங்களுடைய வீட்டில் குலதெய்வம் இல்லை என்று சொன்னாலும் 48 நாட்கள் இதே போன்று இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் குலதெய்வத்தை வீட்டிற்கு வர வேண்டும் என்று மனதார வேண்டி அழையுங்கள். 48 நாட்களில் எப்படிப்பட்ட கட்டையும் மீறி குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும் என்பதும் நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.