குலதெய்வத்தின் கோபத்தை தணிக்க, இந்த வழிபாடுகளை செய்து பாருங்கள். உடனே உங்கள் துன்பங்கள் தீர்ந்து நல்ல வழி பிறக்கும்

kuladeivam
- Advertisement -

பொதுவாகவே ஒரு குடும்பம் தங்களது குல தெய்வத்தை மறப்பது என்பது தவறான செயலாகும். முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பின்னர்தான் மற்ற தெய்வங்களின் அருள் நமக்குக் கிடைக்கும். குலதெய்வத்தை வணங்காமல் மற்ற தெய்வங்களின் அருள் மட்டும் கிடைக்குமா? என்று கேட்டால் அது சந்தேகம்தான். ஏனென்றால் குலதெய்வம் சம்மதித்த பிறகு மட்டுமே மற்ற தெய்வங்கள் நமக்கு அருள்புரியும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் இவர்கள் எவராவது ஒருவரின் பிறந்தநாளை மறந்து விட்டால் அதனை எவ்வளவு பெரிய குற்றமாக மற்றவர்கள் பேசுவார்கள். அவ்வாறு இந்த சிறிய விஷயத்திற்கு இவ்வளவு பெரிய சண்டை என்றால், நமது குலத்தையே காக்கும் குலதெய்வத்தை நாம் மறந்து விடுவது எவ்வளவு பெரிய தவறாகும். இவ்வாறு குலதெய்வத்தை மறந்து விட்டால் அது நமக்கு பெரிய பிரச்சனையை கொடுத்து விடும் என்பது கிடையாது. ஆனால் குலதெய்வத்தை ஞாபகப்படுத்துவதற்கு அந்த தெய்வம் நமக்கு சில சோதனைகளை கொடுத்து விடும். வாருங்கள் குலதெய்வத்தின் கோபத்தை தணிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

indian-family

உங்களுக்கு வருகின்ற சங்கடங்கள் நீங்கள் குலதெய்வத்தை மறுபடியும் நினைப்பதற்கான விதமாக இருக்குமே தவிர, உங்களை முழுவதுமாக அழித்து விடுவதற்காக இருக்காது. இவ்வாறு குல தெய்வத்தை மறந்து விட்டு, குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி உள்ள நீங்கள் இவ்வாறான சின்னச்சின்ன பரிகாரங்களை செய்வதன் மூலம் குலதெய்வ கோபத்தைத் தணிக்க முடியும்.

- Advertisement -

வீட்டில் ஏதாவது புதிய வேலைகள் துவங்குவதாக இருந்தாலும், திருமணம் செய்வது, வீடு கட்டுவதாக இருந்தாலும் முதலில் குல தெய்வ கோவிலுக்கு தான் சென்று வர வேண்டும். அங்கு சென்று பொங்கல் வைத்து குலதெய்வத்தை வணங்கிவிட்டு வரவேண்டும். அவ்வாறு வருடத்தின் முதல் துவக்கம் என்றால் சித்திரை மாதம் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை வணங்கி வர வேண்டும்.

marraige-couple

இவ்வாறு வருடம் முதல் மாதம் கோவிலுக்கு சென்று உங்கள் குல வழக்கப்படி அபிஷேகங்கள், பூஜைகள், ஆராதனைகள் செய்ய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று குலதெய்வ வழிபாட்டை செய்து வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமைகள் இருக்கும். சகல வசதிகளும் கிடைக்கும். வேலைகள் நிலைத்திருக்கும். வருமானம் உயரும்.

- Advertisement -

அதிலும் பங்குனி மாத பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜையாகும். எந்த மாதம் தவறினாலும் பவுர்ணமி மாத குலதெய்வ பூஜை தவறாமல் செய்து வர உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் நன்மைகள் மட்டுமே நடக்கும். நமக்கு வரப்போகும் ஆபத்துகளையும் கூட குல தெய்வம் நமக்கு முன் நின்று தடுத்துவிடும்.

kuladeiva-deepam

இவ்வாறு தொடர்ந்து குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தொலைவில் இருப்பவர்கள், வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரை மாத பௌர்ணமி அல்லது பங்குனி மாத பவுர்ணமியில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே குலதெய்வ படத்தை வைத்து, நைவேத்தியம் படைத்து என்னால் உனது சன்னதிக்கு வர முடியவில்லை, ஆகவே நான் இங்கிருந்தே உனக்கான பூஜையை செய்து தருகிறேன், எங்கள் குடும்பத்தைக் காத்து அருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்

- Advertisement -