ஆடி மாதம் குலதெய்வத்திற்கு இப்படி விளக்கு வழிபாடு செய்தால் தீராத பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும்!

kula-deivam
- Advertisement -

ஆடி மாதம் தெய்வ வழிபாட்டுக்குரிய மாதமாக மக்களிடையே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வரும் நல்ல நேரங்களை எல்லாம் தெய்வ வழிபாட்டிற்கு நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், அடுத்து வரும் அத்தனை நாட்களும் உங்களுக்கு யோகமான நாட்களாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டை எப்படி மேற்கொள்வது? என தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். பொதுவாக குலதெய்வம் தெரிந்தவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக கொள்ள வேண்டும். அடிக்கடி இவ்வாறு குலதெய்வம் கோவிலுக்கு செல்வதால் குலம் விருத்தி அடையும். குலதெய்வ வழிபாட்டை எப்போதும் தொடர்ந்து செய்து வர வேண்டும். இடையில் நிறுத்துபவர்களுக்கும், குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டவர்களுக்கும் நிச்சயம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இதை பலரும் அனுபவப்பூர்வமாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Amman

ஆடி மாத வெள்ளிக் கிழமையில் குலதெய்வ வழிபாட்டை விளக்கு வைத்து நாம் மேற்கொள்வதால் நிறைய நன்மைகள் நமக்குக் கிடைக்கும். குலதெய்வ விளக்கு வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு புதிய மண் குவளை ஒன்று தேவைப்படும். நாம் இவ்வாறு முறையாக மண் குவளையில் விளக்கு வழிபாடு செய்வதனால் குலதெய்வத்தை நம்வசம் வரவழைத்து நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். புதிய மண் குவளை ஒன்றை வாங்கி அதை சந்தனம் அல்லது மஞ்சள் கொண்டு முழுவதுமாக தடவிக் கொள்ளுங்கள். பின்னர் நான்கு புறமும் மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தாம்பூலம் ஒன்று வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு வழிபாட்டையும் நாம் மேற்கொள்வதற்கு முன்னர் விநாயகரை வழிபட வேண்டும். அதனால் விநாயகர் படம் அல்லது விக்ரகம் வைத்து இருந்தால் அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு தாம்பூலத்தில் வைத்து கொள்ளுங்கள். விநாயகர் இல்லாதவர்கள் மஞ்சளைப் பிடித்து விநாயகரை ஆகர்ஷனம் செய்து கொள்ளலாம்.

clay-pot

அதன் பின் தாம்பூலத்தை சுற்றி மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். குவளையின் வாய் பகுதியிலும் மலர் சுற்றிக் கொள்ளுங்கள். மண் குவளைக்குள் பச்சரிசியை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் நாணயங்கள் 11 என்ற எண்ணிக்கையில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை நடுவில் வைத்து விடுங்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயம் குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து நாம் மஞ்சள் துணியில் முடிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இந்த மண் குவளையின் வாய்ப்பகுதியை சிறிய பூஜை தட்டை வைத்து மூடிக் கொள்ள வேண்டும். இந்த தட்டின் மேல் மஞ்சள், குங்குமம் இட்ட புதிய மண் அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முழுவதும் நெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து, தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டிற்கு நிவேதனமாக உங்களிடம் இருக்கும் பழவகைகள் போதுமானது. ஆடி வெள்ளிக்கிழமை அன்று நல்ல நேரம் பார்த்து முதலில் விநாயகர் மந்திரம் உச்சரித்து விளக்கினால் தீபம் காண்பித்து, பின்னர் தூபம் காட்டி கொள்ளுங்கள். அதன்பின் தொடர்ந்து குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு குலதெய்வ மந்திரம் தெரிந்தவர்கள் அந்த மந்திரத்தை உச்சரித்து தீப தூபம் காண்பிக்க வேண்டும்.

kuladheivam-vinayagar

இதுபோல் குலதெய்வத்தை நினைத்து 11 வாரங்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று விளக்கு பூஜை செய்து அதில் வைக்கப்படும் 5 ரூபாய் நாணயங்களை சேகரித்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது காணிக்கை போட வேண்டும். இதனால் உங்கள் மனதில் நீங்கள் நினைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். இதை வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் செய்து வரலாம். குலதெய்வ அருள் எப்போதும் ஒரு குடும்பத்திற்கு நிச்சயம் தேவை. குலதெய்வம் பெயர் தெரியாதவர்கள் நீங்கள் சைவத்தை விரும்புபவர்களாக இருந்தால் அந்தக் குவளையில் விபூதியால் பட்டையையும், வைணவத்தை தழுவுபவர்கள் நாமத்தையும் இட்டுக் கொள்ளுங்கள். இவை இரண்டும் தெரியாதவர்கள் முருகப் பெருமானை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாடகை வீடோ! சொந்த வீடோ! நீங்கள் முதல் முறையாக வசிக்க செல்லும் போது இதை மட்டும் கவனிக்க மறக்காதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -