குலதெய்வ வழிபாடு முறை

kula-dheiva-kovil
- Advertisement -

காலம் காலமாக நம் முன்னோர்கள், வழிபட்டு வந்த தெய்வத்தை தான் நாம் குலதெய்வ வழிபாடு என்கின்றோம். அவரவர் குலத்தை காப்பாற்றுவதற்காகவும் நம் சந்ததி இதோடு முடிந்து விடாமல் வாழையடி வாழையாக தொடர வேண்டும் என்பதற்காகவும்  தான் குலதெய்வ வழிபாடு நம் சந்ததியினரால் தொடரப்படுகிறது.

kuladheivam 1

உங்களுக்கு பிடித்த எவ்வளவு இஷ்ட தெய்வங்களை வழிபட்டாலும் சரி, குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல், மற்ற தெய்வங்களின் அருளை உங்களால் பெற முடியாது. உங்கள் வீட்டு பூஜையறையில் குலதெய்வ படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். நமக்கு ஒரு கஷ்டம் என்று வரும்பொழுது அதனை தீர்த்து வைக்க குலதெய்வம் தான் முன்நிற்கும். மற்ற தெய்வங்கள் கூட குலதெய்வத்திற்கு பின் தான் வரும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

- Advertisement -

குலதெய்வத்தின் அருள் நமக்கு இருக்கின்றதா? என்பதை நாம் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும். எந்த காரியத்தை நம் கையில் எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு சிக்கல், ஒரு தடங்கல் வந்து கொண்டே தான் இருக்கும். மன நிம்மதி கிடைக்காது. பண கஷ்டம் வரும். நம் வீட்டு பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். இப்படிப்பட்ட பல சிக்கல்கள் நம் குடும்பத்திற்கு வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். நம் குல தெய்வத்திற்கு ஏதோ ஒரு குறையை நம் வைத்துள்ளோம் என்று. இதற்கெல்லாம் காரணம் நம் குல தெய்வத்தை மறந்து வழிபடாமல் இருப்பதுதான்.

Kuladheivam

குலதெய்வ பூஜை முறை

- Advertisement -

வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் குலதெய்வக் கோவிலுக்கு செல்ல வேண்டும். குல தெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார், உறவினர் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோவில்களுக்கு செல்லும் பொழுது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட வேண்டும். நம் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தியும் வழிபடலாம். சிலர் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து மாவிளக்கு ஏற்றி வைத்தும் வழிபடுவார்கள்.

kula dheivam

நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தை நாம் தொடங்கினாலும் அதற்கு முன்பு குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. இதனால்தான் குழந்தை பிறந்தவுடன் அதற்கு மொட்டை அடித்து, காது குத்துவதை குலதெய்வ கோவிலில் வைக்கிறார்கள். சிலர் தங்களது பிள்ளைகளின் திருமணத்தை குலதெய்வ கோவிலில் நடத்துவார்கள். நம் குல தெய்வத்திடம் நம் வேண்டுதல்களை தொடர்ந்து வைத்துக் கொண்டு வந்தோமேயானால் அதற்கான பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

ஆண் வாரிசு இல்லாதவர்கள்

ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவர்களின் குல தெய்வ வழிபாடு அத்தோடு முடிந்துவிடும். இதற்காக அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் குலதெய்வ வழிபாடு என்பது 13 தலைமுறைக்கு தான் தொடரும். உங்களுக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் இதோடு 13ஆவது தலைமுறை முடிகின்றது என்பது அர்த்தமாகும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

இதையும் படிக்கலாமே:
பூஜை அறை குறிப்புகள்

English Overview:
Here we have Kula deiva vazhipadu in Tamil or Kuladeiva valipadu murai in Tamil.

- Advertisement -