குலதெய்வத்தை வசியம் செய்யும் மண்

kulavi koodu
- Advertisement -

குலதெய்வத்தின் சிறப்புகளை பலரும் அறிந்திருப்போம். குலதெய்வத்தின் அருளால் பல குடும்பங்கள் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் பல குடும்பங்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். இதை உணர்ந்து குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நம் வீட்டிலேயே மனதார குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்தாலே குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். அதையும் தாண்டி குலதெய்வத்தை வசியம் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது. தடைகளும் நிகழாது. நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட குலதெய்வம் வசியத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குலதெய்வத்தை வசியம் செய்வதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது. அதில் மிகவும் எளிமையான ஒரு வழிமுறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த வசியத்தை நாம் அமாவாசை அன்றோ அல்லது பௌர்ணமி தினத்தன்றோ அல்லது வளர்பிறை நாட்களிலோ செய்யலாம். அதிலும் குறிப்பாக வியாழன், வெள்ளி அல்லது ஞாயிறு இந்த மூன்று கிழமைகளில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதற்கு நமக்கு ஒரு மண் தேவைப்படும். அனைவரின் இல்லங்களிலும் ஏதாவது ஒரு மூலையில் குளவி செம்மண்ணால் கூடு கட்டி வைத்திருக்கும். அந்த மண்தான் நம்முடைய குலதெய்வத்தை வசியம் செய்வதற்குரிய மண். இந்த குளவி கூடை கலைக்காமல் அதில் குளவியின் குஞ்சுகள் எதுவும் இல்லாமல் அதாவது குளவியிட்ட அந்த புழுக்கள் வளர்ந்து பறந்து போன பிறகு இருக்கக்கூடிய குளவி கூடை எந்தவித ஆயுதமும் படாமல் தரையில் விழுகாமல் முழுமையாக அப்படியே எடுக்க வேண்டும்.

இந்த குளவி கூடை எடுக்கும் நேரம் ஆனது வெள்ளிக்கிழமையாக இருந்தால் சுக்கிர ஹோரையிலும் வியாழக்கிழமையாக இருந்தால் குரு ஹோரையிலும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் சூரிய ஹோரையிலும் எடுக்க வேண்டும். வேறு எந்த நேரத்திலும் எடுக்கக் கூடாது. இப்படி எடுத்த இந்த குளவி கூடை ஒரு தட்டில் வைத்து அதில் சுத்தமான பன்னீரை ஊற்றி பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நம்முடைய குலதெய்வத்தை இந்த மண்ணில் நாம் பிடித்து வைத்திருக்கிறோம். இப்பொழுது வீட்டில் குலதெய்வத்தின் படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பாக நாம் பிடித்து வைத்திருக்கும் குலதெய்வத்தை வைத்து விட வேண்டும். சுத்தமான ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களின் குலதெய்வத்திற்கு உகந்த பொருட்களை சமைத்து படையலாக போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது ஏலக்காய், சிறிது கிராம்பு, சிறிது பட்டை, அடுப்பு எரிக்கும் கரித்துண்டு, சிறிது மருதாணி பூ அல்லது விதை இவை அனைத்தையும் வைத்து அதை மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதை பிடித்து வைத்திருக்கும் குலதெய்வத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். பிறகு குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு நிலை வாசலுக்கு மேலே செம்பினால் ஆன ஆணியை வாங்கி வந்து அடித்து அதில் தயார் செய்து வைத்திருக்கும் மூட்டையை கட்டி விட வேண்டும். வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு காட்ட வேண்டும். அப்படி காட்டும் பொழுது நிலை வாசலில் கட்டி வைத்திருக்கும் மூட்டைக்கும் காட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளை நீக்கும் மாதங்கி வழிபாடு

இப்படி நாம் செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளானது பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். குலதெய்வ வசியமும் ஏற்படும். வாழ்வில் எந்தவித தடைகளும், பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியான, வெற்றிகரமான, முன்னேற்றமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

- Advertisement -