தீராத மனவேதனையை ஒரு நொடிப் பொழுதில், தீர்த்து வைக்கும் குலதெய்வ வழிபாடு.

kuladheivam

திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று சொல்வார்கள். நமக்கு வரக்கூடிய தீராத கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனின் பாதங்களை சரண் அடைவது தான் ஒரே வழி. அதிலும் குறிப்பாக நமக்கு கஷ்டம் என்று வரும் போது நம்முடைய குல தெய்வத்தை ஒவ்வொருவரும் நிச்சயம் மனதார நினைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். நேரமும் காலமும் நமக்கு கஷ்டம் தரும் போது, இறைவனின் பெயரை உச்சரிக்க விடாமல் தடுக்கும். அதையும் தாண்டி நம்முடைய குல தெய்வத்தின் பெயரை உச்சரித்து நினைவுகூர்ந்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்பவர்களுடைய வாழ்க்கையில் இன்னல்கள் நிச்சயம் குறையும் என்பதுதான் நம்பிக்கை.

crying-sad

உங்களுடைய குடும்பம் ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டுவிட்டது. அந்த சமயத்தில் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் குலதெய்வத்தை எப்படி வேண்டிக் கொள்ள வேண்டும்? எந்த முறைப்படி வேண்டிக் கொண்டால், மலை போல் வந்த பிரச்சனையும் பனிபோல விலகும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எப்போதுமே குலதெய்வ வழிபாடாக இருந்தாலும் சரி, மற்ற தெய்வ வழிபாடாக இருந்தாலும் சரி, ஒரு ரூபாய் நாணயத்திற்கு மிகப்பெரிய சக்தி உண்டு. எந்த ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலும், அந்த ஒரு ரூபாய் நாணயத்தை இறைவனிடம் வைத்துவிட்டு மனதார வேண்டிக் கொண்டு, அந்த ஒரு ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பட்சத்தில், நம்முடைய வேண்டுதல்களுக்கான பலம் இரட்டிப்பாகும் என்பது தான் ஐதீகம்.

praying-god1

அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத கஷ்டம் வரும்போது, நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படி செய்து பாருங்கள்! உங்களுக்கோ, அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ, உங்கள் கணவருக்கு, அல்லது உங்கள் உறவினர்களுக்கோ, யாருக்காக இருந்தாலும் சரி, உடல்நிலை சரியில்லாத சமயத்திலும் இப்படி செய்யலாம். தீராத பண கஷ்டம் வரும் போதும் இப்படி செய்யலாம். தீராத மன கஷ்டம் வரும் போதும் இப்படி செய்யலாம். எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்கள், திக்குத் தெரியாமல் நடுக்காட்டில் நிற்பது போல நின்று தவிக்கிறார்களுக்கான சுலபமான ஒரே தீர்வு இதுதான்.

- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் காமாட்சியம்மன் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டு குல தெய்வத்தின் பெயரை 3 முறை உச்சரித்து விட்டு, ஒரு சிறிய வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து, உலர வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சுருட்டி, முடிச்சு போடவேண்டும். இந்த முடிவானது கைகடிகாரம் போல இருக்க வேண்டும்.

prayingman-murugan

சில பேர் வீடுகளில் இதை குல தெய்வம் கப்பனம் என்று சொல்லுவார்கள். கைகடிகாரம் போல இருக்கும் இந்த முடிச்சினை உங்களது வலது கையில் அல்லது உங்கள் வீட்டில் யாருக்கு மனவேதனை இருக்கின்றதோ, அவர்களுடைய வலது கையில், கை கடிகாரம் போல கட்டி மூன்று முடிச்சு போட்டு விடவேண்டும். சிறிது நேரம் அந்த கப்பனம் அப்படியே அவர்களது கையில் இருக்கட்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சமயத்திலும் அந்த நபருக்கு நீங்கள் இப்படி செய்யலாம்.

one rupee

சில சமயம் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகளுக்கும், கெட்ட சக்தியினால் தோஷம் தாக்கப்பட்டுள்ளது என்ற சூழ்நிலை ஏற்பட்டாலும், அந்த குறிப்பிட்ட நபருக்கு இப்படி கையில் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி விட்டு விடலாம். ஒரு 15 இலிருந்து 20 நிமிடங்கள் அந்த கப்பனம் அவர்களது கையிலேயே இருக்கட்டும். குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி கட்டி விட்டு விடுங்கள்.

kappanam

அதன்பின்பு அந்த முடிச்சை அவிழ்த்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். நீங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேறிய உடனேயே அந்தப் கப்பனம் குலதெய்வத்தின் உண்டியலில் சேர்த்து விட வேண்டும், என்ற வேண்டுதலையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

kamatchi-amman

இந்த முடிச்சை முடிந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்த சில நாட்களிலேயே உங்களது துயரம் காணாமல் போகும் என்பதுதான் நம்பிக்கை. குலதெய்வத்தின் பெயர் தெரியாதவர்கள் காமாட்சியம்மன், கருமாரியம்மன், திருச்செந்தூர் முருகன் இப்படிப்பட்ட தெய்வங்களின் பெயரை உச்சரித்து இந்த முடிவினை கையில் கட்டலாம். நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் வீட்டு குல தெய்வத்தை நம்பி இப்படி செய்து பாருங்கள். உங்களுக்கான விடிவுகாலம் சீக்கிரமே உண்டாகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று பைரவரை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.