குலத்தை காக்கும் குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதை செய்யுங்க குலதெய்வமே உங்களுக்கு அருள் கொடுப்பார்!

nochi-leaf-ayyanar-kula-deivam
- Advertisement -

நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம். நம்முடைய முன்னோர்களாகிய இவர்கள் தெய்வமாக மாறி பின் ஒவ்வொரு சந்ததியினரையும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள். அவர்களை வழிநடத்தி சென்று நன்மை செய்கிறார்கள். எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். அந்த குலதெய்வம் அறியாதவர்கள் என்ன செய்யலாம்? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெள்ளிக்கிழமையில் 5 வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆறாவது வாரத்தில் உங்களுடைய குலதெய்வம் யார்? என்பதை உங்களுடைய குலதெய்வமே அருள் புரிவதாக நம்பிக்கை உள்ளது. சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை செய்து நீங்கள் உங்கள் குலதெய்வத்தை அறியலாம்.

- Advertisement -

நொச்சி இலை! இந்த நொச்சி இலைக்கு குலதெய்வத்தை ஈர்க்க கூடிய தன்மை உண்டு. நொச்சி இலை தலை வலிக்கு ஆவி பிடிக்கவும், தைலம் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த நொச்சி இலை தெய்வாம்சம் கொண்டதாக இருக்கிறது. இதன் ஒவ்வொரு இலையும் மருத்துவ குணங்களும், மகத்துவமான குணங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த நொச்சி இலை கொண்ட மரத்தை குலதெய்வமாக நினைத்து மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு குலதெய்வத்தை ஆவாகனம் செய்யுங்கள். முதலில் ஒரு மண் பானை அல்லது பித்தளை செம்பில் தண்ணீரை நிரப்பி கலசம் தயாரியுங்கள். கலசத்திற்கு அருகில் ஒரு சிறிய அளவிலான கண்ணாடி ஒன்றை வையுங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி வைத்த பின்பு இவைகளுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு சிறிது மலரை சாற்றி விடுங்கள்.

- Advertisement -

பின்னர் சர்க்கரை பொங்கல் தான் குலதெய்வத்திற்கு நைவேத்தியம் படைப்பதற்கு ஏதுவான ஒரு நைவேத்திய பொருளாகும். எனவே காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சுத்தபத்தமாக சக்கரை பொங்கல் நைவேத்தியம் தயார் செய்து அதை ஒரு மண் தட்டில் அல்லது இலையில் பரிமாறி நைவேத்தியம் படையுங்கள். பின்னர் எப்பொழுதும் போல தூப, தீப, ஆரத்தி காண்பித்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ‘நீதான் எங்கள் குலதெய்வம், உன்னை குலதெய்வமாக நினைத்து வழிபடுகிறோம், எங்களை இன்னல்களில் இருந்து பாதுகாத்து நல்வழிப்படுத்து’ என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

குலதெய்வத்திற்கு மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகுந்த சிறப்புடையதாக கருதப்படுகிறது. மற்ற உலோகங்களை காட்டிலும் மண் அகல் விளக்கிற்கு தனித்துவம் வாய்ந்த மகத்துவ குணங்கள் உண்டு. மண்ணிலேயே தயாரிக்கப்பட்டு பின் மண்ணிலேயே மடியக்கூடிய இந்த அகல் விளக்கு குலதெய்வத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது. எனவே மண் அகல் விளக்கு இரண்டினை எடுத்து நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வராத பணம் கூட நிச்சயம் வீடு தேடி வரும். அஷ்ட ஐஸ்வரியமும் அளவில்லாமல் கொட்டும்.

நீங்கள் உங்களுடைய குலதெய்வம் யார்? என்பதை அறியாமல் இருப்பது மிகுந்த தவறாகும். தொடர்ந்து ஐந்து வாரம் இப்படி நொச்சி மரத்தை குலதெய்வமாக நினைத்து, இங்கனம் நீங்கள் வழிபட்டு பரிகாரம் செய்து வந்தால் ஆறாவது வாரத்திலேயே குலதெய்வ அருள் உங்களுக்கு கிடைக்கும் என்றும், நல்லதெல்லாம் நடக்கும் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -