நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வராத பணம் கூட நிச்சயம் வீடு தேடி வரும். அஷ்ட ஐஸ்வரியமும் அளவில்லாமல் கொட்டும்.

Varahi-amman
- Advertisement -

கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து உதவி செய்யக்கூடிய தாய் உள்ளம் கொண்டவள் வாராகித்தாய். இவளைப் பார்த்தால் அந்த தோல்வியே தோற்றுப் போகுமாம். மண்ணுக்கு சொந்தக்காரி ஆக திகழ்பவள் இவள். ஆகவே விவசாயம் சிறக்க, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இவளை நாளைய தினம் வழிபாடு செய்யலாம். இந்த தாயை பஞ்சமி திதி அன்று மனம் உருகி உண்மையான பக்தியோடு வழிபாடு செய்தால் கேட்கும் வரங்களை எல்லாம் வாரி வழங்கி விடுவாள்.

நாளைய தினம் புதன்கிழமை அம்மாவாசை முடிந்து ஐந்தாவது நாள். இது வளர்பிறை பஞ்சமி திதி. வாழ்வில் எல்லா வளங்களையும் பெற, வாழ்வில் படிப்படியாக முன்னேற, வளர்பிறை நிலவு போல நம்முடைய முன்னேற்றம் இருக்க, இந்த வளர்பிறை பஞ்சமி திதியில் எப்படி வழிபாடு செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் பதிவு இது. வராஹி அம்மனை வழிபாடு செய்பவர்கள் இதை படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

வளர்பிறை பஞ்சமி திதி வராகி வழிபாடு:
வராகி அம்மனுக்கு பொதுவாகவே வழிபாடு செய்யக்கூடிய நேரம் என்றால் அது மாலை நேரம்தான். மாலை 6.30 மணிக்கு மேல் வாராகி வழிபாட்டை செய்யலாம். காலையில் ஒரு முறை குளித்திருந்தாலும், மாலை ஒரு முறை சுத்தபத்தமாக குளித்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வாராகியின் திருவுருவப் படம் இருந்தால் அதை துடைத்து சந்தன குங்குமப்பொட்டு வைத்து, சிவப்பு நிற பூவை சூட்டிக் கொள்ளவும். வராகி அம்மனின் திருவுருவப்படம் இல்லை என்றால் மஞ்சள் தூளில் பன்னீர் விட்டு பிசைந்து, மஞ்சள் பிள்ளையார் போலவே பிடித்து வைத்து அதை வாராகி தேவியாக நினைத்துக் கொள்ளலாம்.

வெற்றிலையின் மேல் அந்த மஞ்சளை பிடித்து வைத்து அந்த வாராகி தாய்க்கு ஒரு குங்குமப்பொட்டு வைத்து, ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள். வாராஹித் தாய்க்கு மண்ணில் விளையக்கூடிய, மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு நெய்வேதியமாக வைப்பது சிறப்பு. அப்படி இல்லை என்றால் உருளைக்கிழங்கு கூட வேகவைத்து வைக்கலாம் தவறு கிடையாது. அதுவும் இல்லை என்றால் ஒரு டம்ளர் பானகத்தை நிவேதனமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தட்டில் கொஞ்சமாக வெட்டிவேர், மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து விடுங்கள். அதன் பிறகு வாராஹி தாய்க்கு முன்பாக அமர்ந்து ‘ஜெய் வாராஹி தாயே நமஹ!’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அதன் பின்பு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பிறகு சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி, பணக்கஷ்டம், மன கஷ்டம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, நோய் நொடி சம்பந்தப்பட்ட பிரச்சனை, குழந்தைகள் படிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று எந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்றாலும் மனம் உருகி அதற்கான வேண்டுதலை தாயின் பாதங்களில் வையுங்கள். நல்லபடியாக பூஜையும் வேண்டுதலும் நிறைவடைந்த உடன் பிரசாதத்தை சாப்பிடலாம்.

- Advertisement -

பூஜையில் வைத்த ரூபாய் நாணயத்தை எடுத்து பீரோவில் வைத்துவிட்டு, மூன்று நாட்கள் கழித்து ஏதாவது செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வெட்டிவேர் இருக்கிறது அல்லவா அந்த வெட்டிவேரை குடிக்கின்ற தண்ணீரில் போட்டு விடுங்கள். இரவு இந்த வெட்டிவேரை தண்ணீரில் போட்டு, மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்தால் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பணம் நகை குவியலாக சேர வியாழக்கிழமையில் வெந்தியத்தை இத்துடன் சேர்த்து கட்டி வைத்து விடுங்கள். எப்போதும் பொன்னனும் பொருளும் உங்களை நாடி வந்து கொண்டே இருக்க எளிமையான பரிகாரம்.

இந்த தண்ணீரை கொண்டு போய், விவசாய நிலத்தில் தெளிக்கலாம். நீங்கள் வீடு கட்ட வாங்கி வைத்திருக்கும் நிலத்திலும் தெளிக்கலாம். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். அவ்வளவு தாங்க. இந்த ஒரு சிறிய பூஜை உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளைத் தேடித் தரும் என்பது தான் நம்பிக்கை. அனைவரும் வாராகியின் அருள் ஆசியை பெற வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -