இந்த வழிபாடு உங்களை நேராக குல தெய்வத்தின் பாதங்களில் கொண்டு போய் சேர்த்து விடும். குலதெய்வம் தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.

kula-dheivam
- Advertisement -

குலதெய்வம் தெரியாத குடும்பங்கள், குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது என்ற வழி தெரியாமல் இன்றளவும் தவித்து வருகிறது. அந்த கஷ்டத்திற்கு ஒரு விடிவுகால பிறக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும். தெரியாத குல தெய்வத்தை தெரிந்து கொள்ள ஆன்மீகத்தில் எத்தனையோ வழிகள் உள்ளது. அதிலிருந்து ஒரு சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எளிமையான முறையில் நமக்கு முன்னோர்களால் சொல்லப்பட்ட இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் ஒரு சில நாட்களில் நீங்கள் குலதெய்வத்தை தெரிந்து கொள்வீர்கள். குலதெய்வத்தின் பாதத்தை சரணடைய இதோ எளிமையான வழிபாட்டு முறை உங்களுக்காக.

தெரியாத குல தெய்வத்தை தெரிந்து கொள்ள வழிபாடு:
எங்களுக்கு குலதெய்வமே தெரியாது என்பவர்கள் இந்த மூன்று தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தை, குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்யலாம். காமாட்சியம்மன், முருகர், பெருமாள். உங்களுடைய விருப்பம் தான். இதில் எந்த தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்தாலும் அந்த தெய்வமானது, உங்களை உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு கொண்டு போய் நிறுத்தி விடும். அதாவது இந்த வழிபாட்டு முறைகள் உங்களை குலதெய்வத்திடம் பொய் சேர வேண்டிய வழியில் அழைத்துச் செல்லும்.

- Advertisement -

நீங்கள் காமாட்சியம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தால், வாரந்தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி, காமாட்சி அம்மன் படத்திற்கு முன்பு நின்று உங்களுடைய குலதெய்வம் தெரிய வேண்டும் என்றபடி வேண்டுதல் வைக்க வேண்டும். குலதெய்வத்தை தெரியப்படுத்தும்படி காமாட்சியம்மனிடம் வேண்டுதல் வையுங்கள். காமாட்சி அம்மனுக்கு இந்த வழிபாட்டின் போது ஒரு கிண்ணத்தில், ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிறு வைப்பது நல்லது. சுண்டல் செய்தும் பச்சைப் பயிரை நிவேதியமாக படைக்கலாம்.

அடுத்தபடியாக முருகப்பெருமானை குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்பவர்கள், செவ்வாய்க்கிழமை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு போட்டு, அதன் மேலே மண் அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வம் தெரிய வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைக்கலாம்.

- Advertisement -

பெருமாளை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்பவர்கள் ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்து இந்த அகல்விளக்கு பக்கத்தில் இரண்டு ஏலக்காய்களை நிவேதனமாக வைத்து, குலதெய்வம் தெரிய வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். இப்படி செய்தால் தெரியாத குல தெய்வத்தை சீக்கிரம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நாளை போகி பண்டிகையின் போது இதை மறக்காமல் எரித்த பின், உங்கள் குலதெய்வத்தை வழிபட்டால், இந்த தை முதல் நீங்கள் எதிர்பார்க்காத யோகங்கள் உங்கள் இல்லம் தேடி வருவது நிச்சயம்.

மேலே சொன்ன மூன்று வழிபாட்டையும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது ஒரு தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் அந்த தெய்வத்தை முறையாக வழிபட்டு வாருங்கள். குலதெய்வம் தெரியும் வரை இந்த வழிபாடு உங்களுக்கு நல்வழியை காட்டும். குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை தடுத்து நிறுத்தி, உங்கள் வீட்டு குலதெய்வ இடத்தில், இந்த தெய்வங்கள் நின்று, உங்கள் குலத்தை காக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நன்மை நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -