நாளை போகி பண்டிகையின் போது இதை மறக்காமல் எரித்த பின், உங்கள் குலதெய்வத்தை வழிபட்டால், இந்த தை முதல் நீங்கள் எதிர்பார்க்காத யோகங்கள் உங்கள் இல்லம் தேடி வருவது நிச்சயம்.

- Advertisement -

போகி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பழையவனவற்றை எல்லாம் எரிப்பது என்பது தான்.  பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தான் இந்த போகி பண்டிகையின் அடிப்படை சாராம்சம். இந்த போகி பண்டிகையில் நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று நம் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைப்பது.  போகி பண்டிகையில் எதை எரித்து நம் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில்  போகி பண்டிகையில் எதை எரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். எரிக்க வேண்டும் என்ன என்றவுடன் வீட்டில் இருக்கும் துணி, குப்பை போன்றவற்றை எல்லாம் வெளியில் பெரிதாக நெருப்பு மூட்டி அதில் போட்டு எரிப்பது அல்ல. போகி பண்டிகையின் போது நம் மனதில் இருக்கும் தேவை இல்லாத அழுக்குகளையும், தீய எண்ணங்களையும், மன கசப்புகளையும் தான் கட்டாயமாக நாம் எரிக்க வேண்டும். இதைத் தவிர மற்ற அனைத்தையும் எடுத்து ஏறிக்கிறார்களே தவிர, தங்களுக்குள் இருக்கும் தேவையில்லாத இந்த தீயவைகளை யாரும் எரிப்பதில்லை.

- Advertisement -

இந்த போகியில் கட்டாயமாக இதை எல்லாம் எரித்து விடுங்கள்.  பழையவனைவற்றையெல்லாம் எரித்து நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள் போன்ற புதியவனவற்றை புகுத்தி இந்த போகியை சிறப்பாக கொண்டாடுங்கள்.

போகி பண்டிகையின் போது செய்ய வேண்டிய வழிபாடு
அடுத்து குல தெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வணங்குவது, இது இன்று நேற்று அல்ல பழங்காலம் முதலே நாம் வழிபட்ட ஒன்று தான். போகி அன்று காலையிலேயே உங்கள் பூஜை அறையில் விளக்கு, படங்களை எல்லாம் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் எல்லாம் தயாராக வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அன்று மாலை 6 மணிக்கு மேல் பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி விடுங்கள். அதன் பிறகு மூன்று வாழை இலையை வைத்து அதில் வெறும் பச்சரிசியை குழைய வேக வைத்து மூன்று உருண்டைகளாக பிடித்து, மூன்று இலையிலும் வைத்து அதில் கொஞ்சம் தயிரை ஊற்றி, அதன் மேல் வாழைப்பழத்தை வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், துள்ளு மாவு இவற்றையெல்லாம் வைத்து உங்கள் வீட்டு குலதெய்வத்தை அல்லது பெண் தெய்வத்தை மனதார வேண்டி, அவர்களை வீட்டிற்கு அழைக்க வேண்டும். இந்த வழிபாடு செய்யும் போது கலசம் வைத்து வழிபட்டாலும் மிகவும் சிறப்பு.

இந்த வழிபாடு செய்த பிறகு படையலில் இருக்கும் சாதத்தை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். இவ்வளவு தான் குலதெய்வத்தை அன்றைய நாளில் நம் வீட்டிற்கு வரவழைப்பதற்கான வழிபாடு. இதை செய்த பிறகு அடுத்த நாள் நீங்கள் பொங்கல் வைத்து வணங்கும் போது குலதெய்வம் நம் வீட்டில் நம்முடனே இருந்து நமக்கு ஆசீர்வதிக்கும் என்றும், இனி வரும் நாட்களில் குலதெய்வம் உங்களுடனே இருந்து உங்களை காக்கும் சொல்லப்படுகிறது. குலதெய்வமானது எப்போதும் நம்முடனே இருக்கும் போது அதை விட வேறு என்ன வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 15/1/2023 தைத்திருநாள் அன்று சூரிய பகவானுக்கு இதை செய்ய தவறாதீர்கள்! சர்க்கரை பொங்கலை போல இனிப்பான வாழ்விற்கு பொங்கலில் செய்ய வேண்டியது என்ன?

இந்த போகிப் பண்டிகையின் போது நம்முடைய தீய எண்ணங்களையும், மனதில் உள்ள அழுக்குகளையும் எரித்து, தூய மனதோடு குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வணங்கி பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நாளெல்லாம் திருநாளாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -