குலதெய்வம் உங்க வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்கணுமா? அப்படின்னா இந்த 5 விஷயத்தை உங்கள் வீட்டில் கவனித்து பாருங்கள்.

namaskaram-kuladheivam
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் தங்களுடைய குல தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு எவ்வித துன்பங்களும் அவ்வளவு எளிதாக நெருங்குவதில்லை. குலதெய்வத்தை நான் தினமும் வணங்கி வருகிறேன்! ஆனால் குலதெய்வம் எங்களுடன் இருக்கிறதா? இல்லையா? என்பதை நான் எப்படி தெரிந்து கொள்ளலாம்? என்று நீங்கள் கேட்டால் அதற்கான சக்தி வாய்ந்த சிறுசிறு அறிகுறிகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலாவதாக குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்ய நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டும். உங்கள் முன்னோர்கள் படத்திற்கு முன்பாக தினமும் நீங்கள் குளித்து முடித்த பின்பு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். ஆண்கள் என்றால் எட்டு அங்கங்கள் தரையில் படும்படியும், பெண்கள் என்றால் ஐந்து அங்கங்கள் தரையில் படும்படியாக நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் நமஸ்காரம் செய்யும் பொழுது உங்களுக்கு ஒரு விதமான அதிர்வு உண்டாகும்.

- Advertisement -

இந்த அதிர்வு நீங்கள் உணர்ந்தால் அங்கு நிச்சயம் உங்களுடைய குல தெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. முன்னோர்களுடைய ஆசிர்வாதம் இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த அதிர்வு ஏற்படும் எனவே குலதெய்வ ஆசீர்வாதமும் அங்கு நிறையும். இதற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் குளித்து முடித்த பின்பு முன்னோர்கள் படத்திற்கு நமஸ்காரம் செய்து வாருங்கள், பல துன்பங்கள் இதன் மூலம் நீங்கும். பொதுவாக பூஜை அறையில் பல்லிகள் நிச்சயம் இருக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் பல்லிகள் அவ்வபோது சத்தமிட்டால் அங்கு குலதெய்வம் வாசம் நிச்சயம் இருக்கும். பூஜை அறையில் இருக்கும் பல்லிகள் சத்தத்தை நீங்கள் கேட்க நேர்ந்தால் அங்கு உங்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கப் போவதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

lizard

அடுத்ததாக சில குழந்தைகளை நாம் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். அந்த குழந்தை அதன் தாத்தா பாட்டியை போன்றோ, அல்லது உறவினர்களை பிரதிபலிப்பதாகவோ உங்களுக்கு தோன்றும். நீ உங்க மாமா மாதிரி செய்கிறாய்! நீ உங்க தாத்தா மாதிரி செய்கிறாய்! என்று நம்மை அறியாமலேயே நாம் சொல்ல கடவோம். அப்படி சொல்லும் பொழுது அங்கு குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -

நீங்கள் தினமும் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் நிச்சயம் இதை உற்று நோக்கி பாருங்கள். நீங்கள் சாதம் வைக்கும் பொழுது காக்கை சாதத்தை சாப்பிடாமல் சிறிது நேரம் அமைதியாக வீட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கும். கொஞ்ச நேரம் கழித்து தான் அது சாப்பிட துவங்கும். இதை கவனித்து பார்த்தால் தெரியும். இப்படி காக்கை உங்கள் வீட்டை நோக்கிப் பார்த்துக் கொண்டே இருந்தால் அங்கு குலதெய்வ அருள் நிச்சயம் இருக்கும். குலதெய்வம் வாசம் செய்வதால் தான் பித்ருக்கள் ரூபமாக காக்கை நம் வீட்டை உற்று நோக்குகிறது. சாதத்தை எடுக்க வந்த காக்கை சாதத்தை எடுக்காமல் நம் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தால் குலதெய்வம் வாசம் உண்டு.

salt-with-pepper

உடல்நிலை சரியில்லை என்றால் கோவிலுக்கு உப்பும், மிளகும் தானமாகக் கொடுப்பது வழக்கம். உப்பு, மிளகு தானம் கொடுத்தால் உடலில் இருக்கும் நோய்கள் அகலும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் உங்கள் உடலின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் வாயுவானது பிடிக்கப்பட்டால் அங்கு பிரச்சனை ஆரம்பிக்கும். மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வரும். இப்படி ஏற்படும் பொழுது உங்கள் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டால் போதும்! வயிறும், மனமும் சுத்தமாகிவிடும். இங்கு குலதெய்வத்தை நீங்கள் நிச்சயம் உணரலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குலதெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

- Advertisement -