இப்படி செய்தால், கோபத்தில் இருக்கும் உங்கள் வீட்டு குல தெய்வம் கூட, நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உங்கள் வீடு தேடி வரும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வருவதை கண்கூடாக உங்களால் காணவும் முடியும்.

pooja-room-kula-dheivam
- Advertisement -

நாம் வணங்கக்கூடிய இறைவன் என்பவன் ஆத்மார்த்தமாக ஒளி வடிவமாக இருப்பவன் தான். உருவமில்லாத இறைவனக்கு ஒவ்வொரு வடிவத்தினை கொடுத்து தான், நாம் வணங்கி வருகின்றோம். இந்த கலியுகத்தில் இறைவனை நம்முடைய இரு கண்களால் நேரடியாக காண முடியுமா என்ற கேள்வியை எழுப்பினால், அது நிச்சயம் முடியாத ஒரு காரியம் தான். ஆனால் இப்படி உருவமே இல்லாத இறைவனின் வருகையை நம்மால் சில அறிகுறிகளை வைத்து உணர முடியும். சில அறிகுறிகள், சில வாசத்தை வைத்து இறைவன் இந்த இடத்தில் வாழ்கின்றான் என்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

3-god-picture

அந்த வரிசையில், நம் வீட்டு பூஜை அறையில் நம் வீட்டு குல தெய்வம் வந்து குடியேறியதை எப்படி உணர்வது. கோபத்தில் இருக்கும் நம் வீட்டு குலதெய்வத்தை, வாசலில் நின்று இருக்கும் நம் வீட்டு குலதெய்வத்தை எந்த முறையில் நம் வீட்டிற்குள் அழைப்பது என்பதை பற்றிய ஒரு பரிகார முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம் வீட்டில் வரக்கூடிய பிரச்சனைகளை பார்க்கும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம் குலத்தை காக்கும் குலதெய்வம் நம் வீட்டில் இருக்கிறதா, அந்த குலதெய்வத்திற்கு நம்முடைய நினைவு இருக்கின்றதா அல்லது ஏதாவது ஒரு பிரச்சினையால் குலதெய்வம் நம் வீட்டிற்குள் வரமுடியாமல் வாசலில் நிற்கிறதா, அல்லது ஏதாவது எதிர்மறை ஆற்றலின் மூலம் கட்டுப்பட்டு உள்ளதா? இப்படி உங்கள் வீட்டில் குலதெய்வம் நுழைவதற்கு எந்த தடைகள் இருந்தாலும் சரி, அதையும் தாண்டி குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும். ஒரு சொம்பு தண்ணீரை பூஜை அறையில் இப்படி வைத்து பாருங்கள்.

god-archanai

குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைப்பது எப்படி

குலதெய்வ பூஜை செய்வதற்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்தி விட வேண்டும். உங்கள் வீட்டு குல தெய்வம் எதுவோ, அந்த தெய்வத்திற்கு உகந்த கிழமையில் இந்த பூஜையை செய்யலாம். எடுத்துக்காட்டிற்கு அம்மன் சாமி உங்கள் குல சாமி ஆக இருந்தால், வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்வது சிறப்பு. முனீஸ்வரன் ஆக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பூஜையை செய்யலாம்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட வேண்டும். பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாக ஒரு சொம்பில் தண்ணீரையும், ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தனியாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். அதன் பின்பு ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேலே ஒரு பித்தளை சொம்பு வைக்கவேண்டும். பித்தளை சொம்பு நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் பொடியை கலந்து விட வேண்டும். அதன் உள்ளே ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு விடுங்கள்.

sombu

இந்த தண்ணீரில் வாசத்திற்காக ஏலக்காய் கிராம்பு பச்சைக் கற்பூரம் போன்ற பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இப்போது நமக்கு கலச சொம்பு தயாராக உள்ளது. இந்த சொம்பின் முன்பாக நீங்கள் அமர்ந்து கொண்டு உங்களது குல தெய்வத்தின் நாமத்தை 108 முறை உச்சரித்து, குலதெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று மனமுருகி மனதார அழைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி கலச சொம்பு நிறுத்தி உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், உங்கள் குலதெய்வம் அந்த கலச சொம்பில் வந்து இறங்கிவிடும். உங்கள் வீட்டு பூஜையறையில் எந்தவித காற்றும் வீசாது. அதேசமயம் அந்த கலச சொம்பை நீங்கள் அசைத்து இருக்க மாட்டீர்கள். ஆனால், சொம்பில் இருக்கும் தண்ணீரில் எதிர்பாராத சமயத்தில் நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் போது, அசைவு ஏற்படும். அந்த அசைவே குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்ய வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறியாக கருதப்படுகிறது. (குலதெய்வமே தெரியாதவர்கள், தெரியாத குலதெய்வத்தை நினைத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லியும் இந்த பூஜையை செய்து, தெரியாத குலதெய்வத்தை அழைக்கலாம்.)

kula-dheivam

ஒருவேளை உங்களுடைய பூஜையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கவில்லை, தண்ணீரில் எந்த அசைவும் தெரியவில்லை எனும் பட்சத்தில் குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்ய வரவில்லை, இன்னமும் கோபத்தோடு இருக்கிறது என்பதை குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சரி இதற்கு பரிகாரமாக என்ன செய்வது.

kulasundhari-amman

உங்கள் பூஜை அறையில் 48 நாட்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து, குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, ‘குலதெய்வம் மனம் இரங்கி வீட்டிற்கு வர வேண்டும்’ என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரித்து, தொடர்ந்து குலதெய்வத்தை வழிபட வேண்டும். 48 நாட்கள் கழித்து மீண்டும் மேல் சொன்ன படி கலச சொம்பு நிறுத்தி உங்களுடைய பூஜையை செய்து பாருங்கள். நிச்சயமாக குலதெய்வம் மனமிரங்கி உங்கள் குடும்பத்திற்கு அருளாசி வழங்க உங்கள் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -