குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டும் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கவில்லை என்றாலோ, நம் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றாலோ, அந்த நேரத்தில் நமக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்று அர்த்தம். அதோடு மட்டுமல்லாமல் ஒருவருடைய இல்லத்தின் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்றால் அந்த இல்லத்தில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்றும் அர்த்தம். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
குலதெய்வத்தை மறந்து குலதெய்வ வழிபாடை மேற்கொள்ளாமல் இருந்தோம் என்றால் அந்த வீட்டிற்கு குலதெய்வ அருள் என்பது கிடைக்காது. இதோடு மட்டுமல்லாமல் யாரேனும் நமக்கு எதிராக தீய செயல்களை செய்ய நினைத்தால் அந்த நேரத்தில் குலதெய்வம் வந்து காப்பாற்றும் என்பதால் குலதெய்வத்தை கட்டி விட்டு பிறகு தீய செயல்களை செய்வார்கள். இதை தான் குலதெய்வ கட்டு என்று கூறுவார்கள். இப்படி இருந்தாலும் குலதெய்வம் வீட்டிற்குள் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியாது. இவை அனைத்தையும் மாற்றி வீட்டில் குல தெய்வத்தின் வாசம் நிறைந்திருக்க செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறை.
இந்த வழிபாட்டை பௌர்ணமி அல்லது அமாவாசை தினத்தில் செய்வது மிகவும் சிறப்பு. முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். காலையில் நம் வாசலில் பசுஞ்சாணத்தை தெளித்து கோலம் போட வேண்டும். அடுத்ததாக முதல் நாள் இரவே ஒரு செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் ஒரு கைப்பிடி அளவு துளசியை போட்டு வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த துளசி தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
அடுத்ததாக குங்கிலியத்தை பயன்படுத்தி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இப்பொழுது வீட்டு பூஜை அறையில் இரண்டு மரப்பலகைகளை தனித்தனியாக போட்டு அதற்கு மேல் சிவப்பு பட்டுத்துணியை விரிக்க வேண்டும். அதற்கு மேல் இரண்டு வாழை இலையை விரித்து வாழை இலைக்கு மேல் குத்து விளக்கை வைக்க வேண்டும். இந்த இரண்டு குத்துவிளத்திற்கும் நெய் ஊற்றி திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நெய்வேத்தியமாக இரண்டு வாழைப்பழம், வெல்லம், நெய், தேன் கலந்து பிணைந்து வைத்துக்கொள்ள வேண்டும். தனித்தனியாக நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். ஒரு குத்து விளக்கை குலதெய்வத்தை நினைத்தும் மற்றொரு குத்து விளக்கை பைரவரை நினைத்தும் தீபம் ஏற்ற வேண்டும். பைரவர் குத்து விளக்கிற்கு முன்பாக ஒரு சிறிய கருப்பு துணியை விரித்து அதில் அட்சதை அரிசி சிறிது, நெல் சிறிது, அதற்கு மேல் ஒரு எலுமிச்சம் பழம், ஒரு விரலி மஞ்சள் இவற்றை வைத்து விட வேண்டும்.
குலதெய்வத்திற்காக வைத்திருக்கும் குத்து விளக்கு முன்பாக ஒரு எலுமிச்சை பழத்தையும் தேங்காயையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அர்ச்சனை செய்வதற்காக சிவப்பு நிற பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். பைரவரை நினைத்து வைத்திருக்கும் குத்து விளக்கில் “ஓம் ருத்ராய சேத்ர கோத்ர பரிபாலகாய நமஹ” என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
அடுத்ததாக குலதெய்வத்திற்காக வைத்திருக்கும் விளக்கில் குலதெய்வத்தின் மந்திரத்தையோ அல்லது குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் அர்ச்சனை செய்யும் பொழுது ஒரு செம்பில் சுத்தமான தண்ணீரை வைத்து அந்த மலர்களை தண்ணீரில் நனைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். கடைசியாக கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும்.
கருப்பு துணியில் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் மூட்டையாக கட்டி காலபைரவரை மனதார நினைத்து நம் வீட்டு நிலை வாசலில் கட்டிவிட வேண்டும். கற்பூர தீபம் காட்டும் பொழுது கற்பூரத்தை வெறும் தட்டில் வைத்து ஏற்றாமல் சிறிது விபூதியை வைத்து கற்பூரம் ஏற்றுவோம் அல்லவா? அந்த விபூதியை எடுத்து அர்ச்சனை செய்வதற்காக செம்பில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தோம் அல்லவா? அதில் போட்டு கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
இந்த முறையில் பூஜை செய்ய குலதெய்வத்திற்கு ஏற்பட்டிருக்கிற அனைத்து விதமான கட்டுகளும் நீங்கி குலதெய்வம் வீட்டிற்குள் வரும். அதோடு மட்டுமல்லாமல் மேற்கொண்டு எந்த வித தீய சக்திகளும் வீட்டிற்குள் வராத அளவிற்கு காலபைரவரும் குலதெய்வமும் நம்மை காப்பாற்றுவார்.
இதையும் படிக்கலாமே: காரிய தடை நீக்கும் பெருமாள் தீபம்
மிகவும் சக்தி வாய்ந்த இந்த பூஜையை யார் ஒருவர் நம்பிக்கையுடன் தங்கள் இல்லத்தில் செய்கிறார்களோ அவர்களுடைய இல்லத்தில் கண்டிப்பான முறையில் குலதெய்வ வாசம் என்பது இருக்கும்.